Category: முஸ்லிம்

Muslim

Muslim-5060

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5060. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் அடிமைப் பெண் ஒட்டகமொன்றின் மீதிருந்த(படி பயணம் செய்துகொண்டிருந்)தார். அதன் மீது மக்களின் பயணச் சாதனங்கள் சில இருந்தன. (முன்னே) சென்றுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களையும் குறுகலான மலை வருவதையும் கண்ட அப்பெண், “ஹல்!” என அந்த ஒட்டகத்தை அதட்டிவிட்டு, “இறைவா! இ(ந்த ஒட்டகத்)தை நீ சபிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “சாபத்தைச் சுமந்துவரும் இந்த ஒட்டகம் நம்முடன் வர வேண்டாம்” என்று கூறினார்கள்.

Book : 45


بَيْنَمَا جَارِيَةٌ عَلَى نَاقَةٍ، عَلَيْهَا بَعْضُ مَتَاعِ الْقَوْمِ، إِذْ بَصُرَتْ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتَضَايَقَ بِهِمِ الْجَبَلُ، فَقَالَتْ: حَلْ، اللهُمَّ الْعَنْهَا، قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُصَاحِبْنَا نَاقَةٌ عَلَيْهَا لَعْنَةٌ»


Muslim-5061

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5061. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சாபத்தைச் சுமந்துள்ள எந்த வாகனமும் நம்முடன் வரவேண்டாம் என்றோ, அல்லது இதைப் போன்றோ கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

Book : 45


«لَا أَيْمُ اللهِ لَا تُصَاحِبْنَا رَاحِلَةٌ عَلَيْهَا لَعْنَةٌ مِنَ اللهِ» أَوْ كَمَا قَالَ


Muslim-5062

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5062. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு வாய்மையாளர் அதிகமாகச் சாபமிடுபவராக இருப்பது தகாது” என்று சொன்னார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 45


«لَا يَنْبَغِي لِصِدِّيقٍ أَنْ يَكُونَ لَعَّانًا»

– حَدَّثَنِيهِ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ


Muslim-5063

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5063. ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல் மலிக் பின் மர்வான் (தம் விருந்தினராக வந்திருந்த நபித்தோழியரில் ஒருவரான) உம்முத் தர்தா (ரலி) அவர்களுக்குத் தம் சார்பாக வீட்டு அலங்காரப் பொருட்களை அனுப்பிவைத்தார். (உம்முத் தர்தா (ரலி) அவர்களைத் தம் மனைவியரின் இல்லத்திற்கு வரவழைத்து அவரிடம் நபிமொழிகளைக் கேட்பார்.)

ஒரு நாள் இரவில் அப்துல் மலிக் எழுந்து தம் ஊழியரை அழைத்தார். அவர் தாமதமாக வந்த போது அவரைச் சபித்தார். காலையானதும் அப்துல் மலிக்கிடம் உம்முத் தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு நீங்கள் உங்கள் ஊழியரை அழைத்தபோது, அவரைச் சபிப்பதை நான் செவியுற்றேன். (என் கணவர்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதிகமாகச் சபிப்பவர்கள் மறுமை நாளில் பரிந்துரைப்பவர்களாகவோ சாட்சியமளிப்பவர்களாகவோ இருக்கமாட்டார்கள்” எனக் கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும்

أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ مَرْوَانَ، بَعَثَ إِلَى أُمِّ الدَّرْدَاءِ بِأَنْجَادٍ مِنْ عِنْدِهِ، فَلَمَّا أَنْ كَانَ ذَاتَ لَيْلَةٍ، قَامَ عَبْدُ الْمَلِكِ مِنَ اللَّيْلِ، فَدَعَا خَادِمَهُ، فَكَأَنَّهُ أَبْطَأَ عَلَيْهِ، فَلَعَنَهُ، فَلَمَّا أَصْبَحَ قَالَتْ لَهُ أُمُّ الدَّرْدَاءِ: سَمِعْتُكَ اللَّيْلَةَ، لَعَنْتَ خَادِمَكَ حِينَ دَعَوْتَهُ، فَقَالَتْ: سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَكُونُ اللَّعَّانُونَ شُفَعَاءَ وَلَا شُهَدَاءَ، يَوْمَ الْقِيَامَةِ»

– حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، وَعَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ، قَالُوا: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، كِلَاهُمَا عَنْ مَعْمَرٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ فِي هَذَا الْإِسْنَادِ، بِمِثْلِ مَعْنَى حَدِيثِ حَفْصِ بْنِ مَيْسَرَةَ


Muslim-5064

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5064. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அதிகமாகச் சபிப்பவர்கள் மறுமை நாளில் சாட்சியமளிப்பவர்களாகவோ பரிந்துரைப்பவர்களாகவோ இருக்கமாட்டார்கள்.

இதை அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 45


«إِنَّ اللَّعَّانِينَ لَا يَكُونُونَ شُهَدَاءَ، وَلَا شُفَعَاءَ يَوْمَ الْقِيَامَةِ»


Muslim-5065

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5065. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணைவைப்பாளர் களுக்கெதிராக(ச் சாபமிட்டுப்) பிரார்த்தியுங்கள்” என்று கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை. நான் அருளாகவே அனுப்பப்பெற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 45


قِيلَ: يَا رَسُولَ اللهِ ادْعُ عَلَى الْمُشْرِكِينَ قَالَ: «إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا، وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً»


Muslim-5066

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் : 25

நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கெதிராகப் பிரார்த்திக்கவோ ஏசவோ சபிக்கவோ செய்து, அவற்றுக்கு அவர் தகுதியானவராக இல்லாதிருந்தால், அவருக்கு அது பாவப் பரிகாரமாகவும் நற்பலனாகவும் அருளாகவும் மாறிவிடும்.

5066. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் வந்தார்கள்; நபியவர்களிடம் எதைப் பற்றியோ பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் சபித்து ஏசிவிட்டார்கள்.

அவர்கள் இருவரும் சென்றதும், நான், “அல்லாஹ்வின் தூதரே! நன்மைகளில் எதையேனும் யார் அடைந்துகொண்டாலும், இவ்விருவர் (மட்டும்) அதை அடையப்போவதில்லை” என்று கூறினேன். அதற்கு “அது எதனால்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். நான், “அவ்விருவரையும் தாங்கள் சபித்தீர்களே? ஏசினீர்களே?” என்று பதிலளித்தேன்.

دَخَلَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ فَكَلَّمَاهُ بِشَيْءٍ، لَا أَدْرِي مَا هُوَ فَأَغْضَبَاهُ، فَلَعَنَهُمَا، وَسَبَّهُمَا، فَلَمَّا خَرَجَا، قُلْتُ: يَا رَسُولَ اللهِ مَنْ أَصَابَ مِنَ الْخَيْرِ شَيْئًا، مَا أَصَابَهُ هَذَانِ، قَالَ: «وَمَا ذَاكِ» قَالَتْ: قُلْتُ: لَعَنْتَهُمَا وَسَبَبْتَهُمَا، قَالَ: ” أَوَ مَا عَلِمْتِ مَا شَارَطْتُ عَلَيْهِ رَبِّي؟ قُلْتُ: اللهُمَّ إِنَّمَا أَنَا بَشَرٌ، فَأَيُّ الْمُسْلِمِينَ لَعَنْتُهُ، أَوْ سَبَبْتُهُ فَاجْعَلْهُ لَهُ زَكَاةً وَأَجْرًا

– حَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَاهُ عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، جَمِيعًا عَنْ عِيسَى بْنِ يُونُسَ، كِلَاهُمَا عَنِ الْأَعْمَشِ بِهَذَا الْإِسْنَادِ، نَحْوَ حَدِيثِ جَرِيرٍ، وقَالَ: فِي حَدِيثِ عِيسَى فَخَلَوَا بِهِ فَسَبَّهُمَا وَلَعَنَهُمَا وَأَخْرَجَهُمَا


Muslim-5067

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5067. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் முஸ்லிம்களில் எவரையேனும் ஏசியிருந்தால், அல்லது சபித்திருந்தால், அல்லது அடித்திருந்தால் அவற்றை அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் அருளாகவும் மாற்றிடுவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது.

ஆயினும் அதில், “பாவப்பரிகாரமாகவும், நன்மையாகவும் (மாற்றிடுவாயாக!)” என்று இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள் “நன்மையாகவும்” என்பதை அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பிலும், “அருளாகவும்” என்பதை ஜாபிர் (ரலி) அவர்களது அறிவிப்பிலும் இடம்பெறச்செய்துள்ளார்கள்.

Book : 45


«اللهُمَّ إِنَّمَا أَنَا بَشَرٌ، فَأَيُّمَا رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ سَبَبْتُهُ، أَوْ لَعَنْتُهُ، أَوْ جَلَدْتُهُ، فَاجْعَلْهَا لَهُ زَكَاةً وَرَحْمَةً»

– وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ، إِلَّا أَنَّ فِيهِ «زَكَاةً وَأَجْرًا»

– حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، كِلَاهُمَا عَنِ الْأَعْمَشِ، بِإِسْنَادِ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، مِثْلَ حَدِيثِهِ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ عِيسَى جَعَلَ «وَأَجْرًا» فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ، وَجَعَلَ «وَرَحْمَةً» فِي حَدِيثِ جَابِرٍ


Muslim-5068

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5068. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுக்கிறேன். அதற்கு நீ மாறு செய்யமாட்டாய். (அது) நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) மனவேதனைப்படுத்தியிருந்தால், ஏசியிருந்தால், சபித்திருந்தால், அடித்திருந்தால், அதையே அவருக்கு அருளாகவும் பாவப்பரிகாரமாகவும் மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாகவும் மாற்றிவிடுவாயாக!” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் (“அவரை அடித்திருந்தால்” என்பதைக் குறிக்க) “ஜலத்துஹு” (ஷீóகூóகுøõடூõõ) என்றே இடம்பெற்றுள்ளது. இது அபூஹுரைரா (ரலி) அவர்களின் மொழி வழக்காகும். (ஹதீஸின் மூலத்தில் இருப்பது) “ஜலத்துஹு”(ஷீóகூóகுúஸீõடூõ) என்பதேயாகும்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

«اللهُمَّ إِنِّي أَتَّخِذُ عِنْدَكَ عَهْدًا لَنْ تُخْلِفَنِيهِ، فَإِنَّمَا أَنَا بَشَرٌ، فَأَيُّ الْمُؤْمِنِينَ آذَيْتُهُ شَتَمْتُهُ، لَعَنْتُهُ، جَلَدْتُهُ، فَاجْعَلْهَا لَهُ صَلَاةً وَزَكَاةً، وَقُرْبَةً تُقَرِّبُهُ بِهَا إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ»

– حَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ إِلَّا أَنَّهُ قَالَ: «أَوْ جَلَدُّهُ» قَالَ أَبُو الزِّنَادِ وَهِيَ لُغَةُ أَبِي هُرَيْرَةَ وَإِنَّمَا هِيَ «جَلَدْتُهُ»

– حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ