Category: முஸ்லிம்

Muslim-592

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

592. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது, நீங்கள் இதன் தோலைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள். மக்கள், இது செத்துப் போனதாயிற்றே! என்று கேட்க, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 3


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَدَ شَاةً مَيْتَةً أُعْطِيَتْهَا مَوْلَاةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا» قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ. فَقَالَ: «إِنَّمَا حَرُمَ أَكْلُهَا»

-حَدَّثَنَا حَسَنٌ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الْإِسْنَادِ بِنَحْوِ رِوَايَةِ يُونُسَ


Muslim-591

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27

செத்த பிராணியின் தோல் பதனிடப்படுவதால் தூய்மை அடையும்.

591. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண் ஒருவருக்கு தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துவிட்டது. அந்த வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்துசென்றார்கள். அப்போது, நீங்கள் இதன் தோலை எடுத்துப் பதனிட்டுப் பயனடையக் கூடாதா? என்று கேட்டார்கள். மக்கள், இது செத்துப்போனதாயிற்றே! என்று கேட்க, அதற்கு அவர்கள், இதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்), இப்னு அபீஉமர் (ரஹ்) ஆகியோர் இந்த ஹதீஸை மைமூனா (ரலி) அவர்களே அறிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

Book : 3


تُصُدِّقَ عَلَى مَوْلَاةٍ لِمَيْمُونَةَ بِشَاةٍ فَمَاتَتْ فَمَرَّ بِهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَلَّا أَخَذْتُمْ إِهَابَهَا فَدَبَغْتُمُوهُ فَانْتَفَعْتُمْ بِهِ؟» فَقَالُوا: إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ: «إِنَّمَا حَرُمَ أَكْلُهَا» قَالَ أَبُو بَكْرٍ، وَابْنُ أَبِي عُمَرَ، فِي حَدِيثِهِمَا عَنْ مَيْمُونَةَ رَضِيَ اللهُ عَنْهَا


Muslim-590

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

590. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தமது வயிற்றில் ஏதோ ஏற்படுவதைப் போன்று உணர்ந்து, அதிலிருந்து ஏதேனும் வெளியேறிவிட்டதா இல்லையா என்று சந்தேகப்பட்டால், அவர் (வாயு பிரிவதன்) சப்தத்தைக் கேட்காதவரை, அல்லது நாற்றத்தை உணராதவரை (உளூ முறிந்துவிட்டதென எண்ணி) பள்ளிவாசலில் இருந்து வெளியேறிவிட வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 3


«إِذَا وَجَدَ أَحَدُكُمْ فِي بَطْنِهِ شَيْئًا، فَأَشْكَلَ عَلَيْهِ أَخَرَجَ مِنْهُ شَيْءٌ أَمْ لَا، فَلَا يَخْرُجَنَّ مِنَ الْمَسْجِدِ حَتَّى يَسْمَعَ صَوْتًا، أَوْ يَجِدَ رِيحًا»


Muslim-589

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26

தாம் (அங்கத்) தூய்மையோடு இருப்பதாக நம்பும் ஒருவருக்கு, பின்னர் துடக்கு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்தால், அவர் (பழைய) தூய்மையோடே தொழலாம் என்பதற்கான சான்று.

589. அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் சகோதரர் (அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம்-ரலி) இடமிருந்து கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், ஒருவருக்குத் தொழும்போது வாயு பிரிவதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாக முறையிடப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், (வாயு பிரிந்ததன்) சப்தத்தைக் கேட்காதவரை, அல்லது நாற்றத்தை உணராதவரை அவர் (தொழுகையிலிருந்து) திரும்ப வேண்டியதில்லை என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்), மற்றும் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்களுடைய தந்தையின் சகோதரர் பெயர் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) என்று இடம்பெற்றுள்ளது.

شُكِيَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الرَّجُلُ، يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلَاةِ، قَالَ: «لَا يَنْصَرِفُ حَتَّى يَسْمَعَ صَوْتًا، أَوْ يَجِدَ رِيحًا» قَالَ أَبُو بَكْرٍ: وَزُهَيْرُ بْنُ حَرْبٍ فِي رِوَايَتِهِمَا هُوَ عَبْدُ اللهِ بْنُ زَيْدٍ