Category: முஸ்லிம்

Muslim-4970

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4970. ஹதீஸ் எண்-4969 இல் வரும் செய்தி உஸைர் பின் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தாபிஉகளில் (உங்களைத் தொடர்ந்து வருவோரில்) சிறந்தவர் உவைஸ் எனப்படும் ஒரு மனிதர் ஆவார். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார்; அந்த மனிதருக்கு வெண்குஷ்டம் இருக்கும். (அவரைக் கண்டால்) உங்களுக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்” என உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம்: 44


«إِنَّ خَيْرَ التَّابِعِينَ رَجُلٌ يُقَالُ لَهُ أُوَيْسٌ، وَلَهُ وَالِدَةٌ وَكَانَ بِهِ بَيَاضٌ فَمُرُوهُ فَلْيَسْتَغْفِرْ لَكُمْ»


Muslim-4969

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 55

உவைஸ் அல்கரனீ (ரஹ்) அவர்களின் சிறப்புகள்.

4969. உஸைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) கூஃபாவாசிகளின் தூதுக்குழு ஒன்று (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் வந்தது. அவர்களிடையே உவைஸ் அவர்களைப் பழித்துப் பேசிவந்த மனிதர் ஒருவரும் இருந்தார்.

உமர் (ரலி) அவர்கள், “இங்கு (உங்களில்) “கரன்” குலத்தைச் சேர்ந்தவர்களில் யாரேனும் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அப்போது அந்த மனிதர் வந்தார்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களிடம் யமன் நாட்டிலிருந்து ஒரு மனிதர் வருவார். அவர் “உவைஸ்” எனப்படுவார். அவர் யமன் நாட்டில் தம் தாயார் ஒருவரை மட்டுமே விட்டுவருவார். அந்த மனிதருடைய மேனியில் வெண்குஷ்டம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். அதையடுத்து ஒரு தீனார் அல்லது ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர (மற்ற இடங்களிலிருந்து) அதை அல்லாஹ் குணப்படுத்தினான்.

أَنَّ أَهْلَ الْكُوفَةِ وَفَدُوا إِلَى عُمَرَ، وَفِيهِمْ رَجُلٌ مِمَّنْ كَانَ يَسْخَرُ بِأُوَيْسٍ، فَقَالَ عُمَرُ: هَلْ هَاهُنَا أَحَدٌ مِنَ الْقَرَنِيِّينَ؟ فَجَاءَ ذَلِكَ الرَّجُلُ فَقَالَ عُمَرُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَالَ: «إِنَّ رَجُلًا يَأْتِيكُمْ مِنَ الْيَمَنِ يُقَالُ لَهُ أُوَيْسٌ، لَا يَدَعُ بِالْيَمَنِ غَيْرَ أُمٍّ لَهُ، قَدْ كَانَ بِهِ بَيَاضٌ، فَدَعَا اللهَ فَأَذْهَبَهُ عَنْهُ، إِلَّا مَوْضِعَ الدِّينَارِ أَوِ الدِّرْهَمِ، فَمَنْ لَقِيَهُ مِنْكُمْ فَلْيَسْتَغْفِرْ لَكُمْ»


Muslim-4968

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4968. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபித்தோழர்களான) காலித் பின் அல் வலீத் (ரலி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் இடையே ஏதோ (பிரச்சினை) இருந்தது. காலித் (ரலி) அவர்கள் (அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை) ஏசினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் தோழர்களில் யாரையும் ஏசாதீர்கள். உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தை (தர்மமாகச்) செலவிட்டாலும் என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக்கூட எட்ட முடியாது” என்று சொன்னார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் ஷுஅபா மற்றும் வகீஉ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகியோரைப் பற்றிய குறிப்பு இல்லை.

Book : 44


كَانَ بَيْنَ خَالِدِ بْنِ الْوَلِيدِ، وَبَيْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ شَيْءٌ، فَسَبَّهُ خَالِدٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبُّوا أَحَدًا مِنْ أَصْحَابِي، فَإِنَّ أَحَدَكُمْ لَوْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا، مَا أَدْرَكَ مُدَّ أَحَدِهِمْ، وَلَا نَصِيفَهُ»

– حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ، وَأَبُو كُرَيْبٍ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، ح وَحَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، جَمِيعًا عَنْ شُعْبَةَ، عَنِ الْأَعْمَشِ، بِإِسْنَادِ جَرِيرٍ، وَأَبِي مُعَاوِيَةَ، بِمِثْلِ حَدِيثِهِمَا، وَلَيْسَ فِي حَدِيثِ شُعْبَةَ، وَوَكِيعٍ، ذِكْرُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَخَالِدِ بْنِ الْوَلِيدِ


Muslim-4967

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 54

நபித்தோழர்களை ஏசுவது தடை செய்யப்பட்டதாகும்.

4967. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் தோழர்களை ஏசாதீர்கள். என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹுத் மலையளவுக்குத் தங்கத்தை (தானமாகச்) செலவிட்டாலும், என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக் கூட எட்ட முடியாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 44


«لَا تَسُبُّوا أَصْحَابِي، لَا تَسُبُّوا أَصْحَابِي، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا، مَا أَدْرَكَ مُدَّ أَحَدِهِمْ، وَلَا نَصِيفَهُ»


Muslim-4966

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4966. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் (ரலி) அவர்கள், “இன்று உயிர் வாழ்வோரில் யாரும் ஒரு நூற்றாண்டை எட்டமாட்டார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள். உடனே இது குறித்து நாங்கள் அவர்களிடம் விவாதித்தோம். அப்போது “அன்றைய நாளில் படைக்கப்பட்டு (உயிருடனு)ள்ள ஒவ்வொருவரையுமே இது குறிக்கும்” என்று சொன்னார்கள்.

Book : 44


«مَا مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ، تَبْلُغُ مِائَةَ سَنَةٍ» فَقَالَ سَالِمٌ: تَذَاكَرْنَا ذَلِكَ عِنْدَهُ، إِنَّمَا هِيَ كُلُّ نَفْسٍ مَخْلُوقَةٍ يَوْمَئِذٍ


Muslim-4965

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4965. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “தபூக்” போரிலிருந்து திரும்பியபோது அவர்களிடம் மக்கள் மறுமை நாளைப் பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(அது அல்லாஹ்வுக்கே தெரியும். ஆனால்,) இன்று உயிர் வாழ்வோரில் யாரும் ஒரு நூற்றாண்டுக்குள் இருக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 44


لَمَّا رَجَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ تَبُوكَ، سَأَلُوهُ عَنِ السَّاعَةِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَأْتِي مِائَةُ سَنَةٍ، وَعَلَى الْأَرْضِ نَفْسٌ مَنْفُوسَةٌ الْيَوْمَ»


Muslim-4964

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4964. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், “என்னிடம் மறுமை நாளைப் பற்றிக் கேட்கிறீர்களா?அதைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் அல்லாஹ்வின்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்: (இன்றிலிருந்து) ஒரு நூறாண்டுக்குள் இன்று பூமியில் இருப்பவர்களில் எவரும் இருக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், “இன்று உயிருடன் இருப்பவர்களில் எவரும் ஒரு நூறாண்டுகளுக்குள் உயிருடன் இருக்கமாட்டார்கள் என்று தாம் இறப்பதற்கு ஒரு மாதத்திற்குமுன் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ قَبْلَ أَنْ يَمُوتَ بِشَهْرٍ: «تَسْأَلُونِي عَنِ السَّاعَةِ؟، وَإِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللهِ، وَأُقْسِمُ بِاللهِ مَا عَلَى الْأَرْضِ مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ تَأْتِي عَلَيْهَا مِائَةُ سَنَةٍ»

– حَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، بِهَذَا الْإِسْنَادِ، وَلَمْ يَذْكُرْ: قَبْلَ مَوْتِهِ بِشَهْرٍ

– حَدَّثَنِي يَحْيَى بْنُ حَبِيبٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، كِلَاهُمَا عَنِ الْمُعْتَمِرِ، قَالَ ابْنُ حَبِيبٍ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ أَبِي، حَدَّثَنَا أَبُو نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ ذَلِكَ قَبْلَ مَوْتِهِ بِشَهْرٍ أَوْ نَحْوِ ذَلِكَ: «مَا مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ الْيَوْمَ، تَأْتِي عَلَيْهَا مِائَةُ سَنَةٍ، وَهِيَ حَيَّةٌ يَوْمَئِذٍ» وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ، صَاحِبِ السِّقَايَةِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِمِثْلِ ذَلِكَ. وَفَسَّرَهَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ: نَقْصُ الْعُمُرِ.

– حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، بِالْإِسْنَادَيْنِ جَمِيعًا، مِثْلَهُ