Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-16042

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ்கள்.

16042. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒருவர் கேட்ட ஒரு ஹதீஸ் எனக்கு எட்டியது. உடனே நான் ஒட்டகம் ஒன்றை விலைக்கு வாங்கி, அதன் மீது எனது பயணச் சாமான்களைக் கட்டினேன். அவரிடம் செல்வதற்காக ஒரு மாதம் நான் பயணம் செய்தேன். இறுதியில் நான் ஷாம் (சிரியா) நாட்டை அடைந்தேன். அங்கு (விசாரித்தபோது) அவர் அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) என்று தெரியவந்தது.

நான் அவருடைய வாயிற்காப்போனிடம், ‘வாசலில் ஜாபிர் நிற்கிறார் என்று அவரிடம் சொல்’ என்றேன். அதற்கு அவர், ‘அப்துல்லாஹ்வின் மகன் ஜாபிரா?’ என்று கேட்டார். நான் ‘ஆம்’ என்றேன். (அவர் சென்று அவர்களிடம் கூற) அப்தில்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் அவசர அவசரமாகத் தனது ஆடையை இழுத்துக்கொண்டு வெளியே வந்து என்னை தழுவிக்கொண்டார், நானும் அவரைத் தழுவிக்கொண்டேன்.

பிறகு நான், “பழிவாங்குதல் சட்டம் குறித்து நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஒரு ஹதீஸ் எனக்கு எட்டியது. அதை உங்களிடமிருந்து நான் நேரடியாகக் கேட்பதற்கு முன்னால் நீங்கள் மரணித்து விடுவீர்களோ அல்லது நான் மரணித்து விடுவேனோ என்று நான் அஞ்சினேன் (அதனால் தான் இவ்வளவு தூரம் தேடி வந்தேன்)” என்றேன்.

அப்போது

بَلَغَنِي حَدِيثٌ عَنْ رَجُلٍ سَمِعَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاشْتَرَيْتُ بَعِيرًا، ثُمَّ شَدَدْتُ عَلَيْهِ رَحْلِي، فَسِرْتُ إِلَيْهِ شَهْرًا، حَتَّى قَدِمْتُ عَلَيْهِ الشَّامَ فَإِذَا عَبْدُ اللَّهِ بْنُ أُنَيْسٍ، فَقُلْتُ لِلْبَوَّابِ: قُلْ لَهُ: جَابِرٌعَلَى الْبَابِ، فَقَالَ ابْنُ عَبْدِ اللَّهِ؟ قُلْتُ: نَعَمْ، فَخَرَجَ يَطَأُ ثَوْبَهُ فَاعْتَنَقَنِي، وَاعْتَنَقْتُهُ، فَقُلْتُ: حَدِيثًا بَلَغَنِي عَنْكَ أَنَّكَ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقِصَاصِ، فَخَشِيتُ أَنْ تَمُوتَ، أَوْ أَمُوتَ قَبْلَ أَنْ أَسْمَعَهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ – أَوْ قَالَ: الْعِبَادُ – عُرَاةً غُرْلًا بُهْمًا ” قَالَ: قُلْنَا: وَمَا بُهْمًا؟ قَالَ: ” لَيْسَ مَعَهُمْ شَيْءٌ، ثُمَّ يُنَادِيهِمْ بِصَوْتٍ يَسْمَعُهُ مِنْ بُعْدٍ كَمَا يَسْمَعُهُ مِنْ قُرْبٍ: أَنَا الْمَلِكُ، أَنَا الدَّيَّانُ، وَلَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ أَهْلِ النَّارِ، أَنْ يَدْخُلَ النَّارَ، وَلَهُ عِنْدَ أَحَدٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ حَقٌّ، حَتَّى أَقُصَّهُ مِنْهُ، وَلَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ أَنْ يَدْخُلَ الْجَنَّةَ، وَلِأَحَدٍ مِنْ أَهْلِ النَّارِ عِنْدَهُ حَقٌّ، حَتَّى أَقُصَّهُ مِنْهُ، حَتَّى اللَّطْمَةُ ” قَالَ: قُلْنَا: كَيْفَ وَإِنَّا إِنَّمَا نَأْتِي اللَّهَ عَزَّ وَجَلَّ عُرَاةً غُرْلًا بُهْمًا؟ قَالَ: «بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ»


Musnad-Ahmad-27626

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

27626. நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணாகிய மைமூனா பின்த் ஸஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் பற்றி எங்களுக்கு மார்க்கத்தீர்ப்பு கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது ஒன்றுத்திரட்டப்படும் இடம், உயிர்பிக்கப்படும் இடம். அங்கு சென்று நீங்கள் தொழுதுக்கொள்ளுங்கள். ஏனெனில் அங்கு ஒரு தொழுகை தொழுவது ஏனைய பள்ளிகளில் தொழும் தொழுகையை விட 1000 மடங்கு சிறந்தது என்று கூறினார்கள்.

அதற்கு மைமூனா அவர்கள், அங்கு சென்று தொழமுடியாதவர் என்ன செய்வது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அந்தப்பள்ளிவாசலில் விளக்கெரிப்பதற்காக ஆலிவ் எண்ணெயை அனுப்புங்கள். அவ்வாறு அனுப்புபவர் அதில் தொழுதவரைப் போன்றவராவார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபூ ஸவ்தா


يَا نَبِيَّ اللَّهِ أَفْتِنَا فِي بَيْتِ الْمَقْدِسِ فَقَالَ: «أَرْضُ الْمَنْشَرِ، وَالْمَحْشَرِ ائْتُوهُ فَصَلُّوا فِيهِ فَإِنَّ صَلَاةً فِيهِ كَأَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ» قَالَتْ: أَرَأَيْتَ مَنْ لَمْ يُطِقْ أَنْ يَتَحَمَّلَ إِلَيْهِ أَوْ يَأْتِيَهُ قَالَ: «فَلْيُهْدِ إِلَيْهِ زَيْتًا يُسْرَجُ فِيهِ، فَإِنَّ مَنْ أَهْدَى لَهُ كَانَ كَمَنْ صَلَّى فِيهِ»


Musnad-Ahmad-13817

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13817. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (வாகனத்தில்) என்னை ஏற்றிவிடுங்கள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒட்டகக் குட்டியின் மீது உம்மை நாம் ஏற்றிவிடுவோம் என்று கூறினார்கள். அம்மனிதர் ஒட்டகக் குட்டியை வைத்து நான் என்ன செய்வேன்? (அதில் பயணிக்க முடியாதே) என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எல்லா) ஒட்டகங்களும் தாய் ஒட்டகத்திற்கு குட்டிகளாகத்தானே இருக்கின்றன? என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَحْمَلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّا حَامِلُوكَ عَلَى وَلَدِ نَاقَةٍ» ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا أَصْنَعُ بِوَلَدِ نَاقَةٍ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَهَلْ تَلِدُ الْإِبِلَ إِلَّا النُّوقُ»


Musnad-Ahmad-15243

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

15243. …நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகினார்கள். அதைத் தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَلَ ثَلَاثَةَ أَطْوَافٍ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ، وَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ عَادَ إِلَى الْحَجَرِ، ثُمَّ ذَهَبَ إِلَى زَمْزَمَ فَشَرِبَ مِنْهَا، وَصَبَّ عَلَى رَأْسِهِ، ثُمَّ رَجَعَ فَاسْتَلَمَ الرُّكْنَ، ثُمَّ رَجَعَ إِلَى الصَّفَا، فَقَالَ: «أَبْدَأُ بِمَا بَدَأَ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ»


Musnad-Ahmad-13446

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13446.


إِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ، وَتَوَلَّى عَنْهُ أَصْحَابُهُ، إِنَّهُ لَيَسْمَعُ خَفْقَ نِعَالِهِمْ، فَيَأْتِيهِ مَلَكَانِ، فَيَقُولَانِ لَهُ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ – يَعْنِي مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ: أَمَّا الْمُؤْمِنُ، فَيَقُولُ: أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، فَيُقَالُ لَهُ: انْظُرْ إِلَى مَقْعَدِكَ فِي النَّارِ، قَدْ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا فِي الْجَنَّةِ، فَيَرَاهُمَا جَمِيعًا


Musnad-Ahmad-13593

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13593. நான் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மண் குன்றுக்கு அருகே மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தம்முடைய கப்ரில் தொழுது கொண்டிருந்தார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«لَمَّا أُسْرِيَ بِي مَرَرْتُ عَلَى مُوسَى وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي قَبْرِهِ عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ»


Musnad-Ahmad-25813

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

25813. ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹஸன் பஸரீ (ரஹ்)


سُئِلَتْ عَائِشَةُ عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَتْ: «كَانَ خُلُقُهُ الْقُرْآنَ»


Musnad-Ahmad-25302

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25302. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃது பின் ஹிஷாம் (ரஹ்)


سَأَلْتُ عَائِشَةَ، فَقُلْتُ: أَخْبِرِينِي عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَتْ: «كَانَ خُلُقُهُ الْقُرْآنَ»


Musnad-Ahmad-24601

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24601. ஸஃது பின் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள்.

மேலும், “நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்” (அல்குர்ஆன் 68: 4) என்ற அல்லாஹ்வின் வசனத்தை குர்ஆனில் ஓதியதில்லையா? என்றும் கூறினார்கள்.


أَتَيْتُ عَائِشَةَ، فَقُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَخْبِرِينِي بِخُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: ” كَانَ خُلُقُهُ الْقُرْآنَ، أَمَا تَقْرَأُ الْقُرْآنَ، قَوْلَ اللَّهِ عَزَّ وَجَلَّ: {وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ} [القلم: 4]


Next Page » « Previous Page