Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-24829

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24829. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களின் உறுதிப் பிரமாணம் (பைஅத்) தொடர்பாகக் கூறினார்கள்:

(பெண்களிடம் உறுதிமொழி வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, எந்தப் பெண்ணையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய்மொழியாகவே பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அவ்வாறு உறுதிமொழி வாங்கியதும், “உன்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டேன். நீ செல்லலாம்” என்று கூறுவார்கள்.


أَنَّ عَائِشَةَ، أُمَّ الْمُؤْمِنِينَ حَدَّثَتْهُ عَنْ بَيْعَةِ النِّسَاءِ: مَا مَسَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ يَدَ امْرَأَةٍ قَطُّ، إِلَّا أَنْ يَأْخُذَ عَلَيْهَا، فَإِذَا أَخَذَ عَلَيْهَا، فَأَعْطَتْهُ، قَالَ: «اذْهَبِي فَقَدْ بَايَعْتُكِ»


Musnad-Ahmad-10650

ஹதீஸின் தரம்: More Info

10650. “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. நீங்கள் விரும்பினால் ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


وَاللَّهِ، لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا. قَالَ: إِنْ شِئْتُمْ دَلَلْتُكُمْ عَلَى مَا إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ، أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ


Musnad-Ahmad-10431

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10431. “என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற,

மக்கள் “ஆம்” அறிவித்துக்கொடுங்கள்! என்று கூறினர். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، إِنْ شِئْتُمْ دَلَلْتُكُمْ عَلَى أَمْرٍ، إِنْ فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ» قَالُوا: أَجَلْ. قَالَ: «أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ»


Musnad-Ahmad-10177

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10177. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ»


Musnad-Ahmad-9709

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9709. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ»


Musnad-Ahmad-9084

ஹதீஸின் தரம்: More Info

9084. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. (நேசத்தை ஏற்படுத்தும்) அவசியமான ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அறிவிப்பாளர் ஷரீக் (ரஹ்) இந்த செய்தியை சில நேரம் சிறிது வார்த்தை மாற்றத்துடன் அறிவித்துள்ளார்.


«لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُونَ حَتَّى تَحَابُّوا، أَلَا أَدُلُّكُمْ عَلَى رَأْسِ ذَلِكَ، أَوْ مِلَاكِ ذَلِكَ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ» ،

وَرُبَّمَا قَالَ شَرِيكٌ: «أَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ»


Musnad-Ahmad-1431

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1431. ஹதீஸ் எண்-1430 இல் வரும் செய்தி இந்த இரு அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது.


«دَبَّ إِلَيْكُمْ» فَذَكَرَهُ،

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا رَبَاحٌ، عَنْ مَعْمَرٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ يَعِيشَ بْنِ الْوَلِيدِ بْنِ هِشَامٍ، عَنْ مَوْلًى لِآلِ الزُّبَيْرِ: أَنَّ الزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ حَدَّثَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «دَبَّ إِلَيْكُمْ» فَذَكَرَهُ


Musnad-Ahmad-1412

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1412. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. குரோதம் மழித்துவிடக் கூடியது. அது முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.

“என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.(அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர் : ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)


دَبَّ إِلَيْكُمْ دَاءُ الْأُمَمِ قَبْلَكُمْ: الْحَسَدُ، وَالْبَغْضَاءُ، وَالْبَغْضَاءُ هِيَ: الْحَالِقَةُ، حَالِقَةُ الدِّينِ لَا حَالِقَةُ الشَّعَرِ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَفَلا أُنَبِّئُكُمْ بِشَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ، أَفْشُوا السَّلامَ بَيْنَكُمْ


Musnad-Ahmad-27508

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

27508. நோன்பு வைத்தல், தொழுதல், தர்மம் செய்தல் போன்றவற்றிற்கு கிடைக்கும் அந்தஸ்தைவிட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என நபித்தோழர்கள் பதில் கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது  ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


«أَلَا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصَّلَاةِ، وَالصِّيَامِ، وَالصَّدَقَةِ؟» قَالُوا: بَلَى قَالَ: ” إِصْلَاحُ ذَاتِ الْبَيْنِ قَالَ: وَفَسَادُ ذَاتِ الْبَيْنِ هِيَ الْحَالِقَةُ


Next Page » « Previous Page