Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-10146

ஹதீஸின் தரம்: Pending

10146. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தந்தையில்லாத) கன்னிப் பெண்ணிடம் (அவளை மணமுடித்துக் கொடுக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும். அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்); அவள் மறுத்துவிட்டால் (அவளை மணமுடித்துக் கொடுக்க) அனுமதி இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تُسْتَأْمَرُ الْيَتِيمَةُ فِي نَفْسِهَا، فَإِنْ سَكَتَتْ فَهُوَ إِذْنُهَا، وَإِنْ أَبَتْ فَلَا جَوَازَ عَلَيْهَا»


Musnad-Ahmad-9605

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9605. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கன்னிகழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.

மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تُنْكَحُ الْأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ» ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «أَنْ تَسْكُتَ»


Musnad-Ahmad-9491

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9491. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஆலோசித்து) அனுமதி பெற வேண்டும்; கன்னிப் பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும்” என்று கூறினார்கள்.

அப்போது மக்கள், அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الثَّيِّبُ تُسْتَأْمَرُ فِي نَفْسِهَا، وَالْبِكْرُ تُسْتَأْذَنُ» ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «أَنْ تَسْكُتَ»


Musnad-Ahmad-7759

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7759. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஆலோசித்து) அனுமதி பெற வேண்டும்; கன்னிப் பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும்” என்று கூறினார்கள்.

அப்போது மக்கள், அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تُسْتَأْمَرُ الثَّيِّبُ، وَتُسْتَأْذَنُ الْبِكْرُ» قَالُوا: وَمَا إِذْنُهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تَسْكُتُ»


Musnad-Ahmad-7527

ஹதீஸின் தரம்: Pending

7527. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தந்தையில்லாத) கன்னிப் பெண்ணிடம் (அவளை மணமுடித்துக் கொடுக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும். அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்); அவள் மறுத்துவிட்டால் (அவளை மணமுடித்துக் கொடுக்க) அனுமதி இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تُسْتَأْمَرُ الْيَتِيمَةُ فِي نَفْسِهَا، فَإِنْ سَكَتَتْ، فَهُوَ إِذْنُهَا، وَإِنْ أَبَتْ، فَلَا جَوَازَ عَلَيْهَا»


Musnad-Ahmad-7404

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7404. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க) ஆலோசித்து அனுமதி பெற வேண்டும்; கன்னிப் பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும்” என்று கூறினார்கள்.

அப்போது மக்கள், அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الثَّيِّبُ تُسْتَأْمَرُ فِي نَفْسِهَا، وَالْبِكْرُ تُسْتَأْذَنُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «أَنْ تَسْكُتَ»


Musnad-Ahmad-7131

ஹதீஸின் தரம்: Pending

7131. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும். கன்னிகழிந்த பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க) ஆலோசித்து அனுமதி பெற வேண்டும்” என்று கூறினார்கள்.

அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! கன்னிப்பெண் வெட்கப்படுவாளே! என்றுக் கூறப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 


«الْبِكْرُ تُسْتَأْمَرُ، وَالثَّيِّبُ تُشَاوَرُ» ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْبِكْرَ تَسْتَحِي قَالَ: «سُكُوتُهَا رِضَاهَا»


Musnad-Ahmad-26215

ஹதீஸின் தரம்: Pending

26215. அல்லாஹ்வின் தூதரே! நான் லைலத்துல் கத்ர் இரவை எதிர்கொண்டால் அதில் என்ன கூற வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ، مَا أَقُولُ فِيهَا؟ قَالَ: ” قُولِي: اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ


Musnad-Ahmad-25741

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25741. அல்லாஹ்வின் தூதரே! நான் லைலத்துல் கத்ர் இரவை எதிர்கொண்டால் அதில் பிரார்த்தனை செய்ய வேண்டும்?’ என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


أَنَّهَا قَالَتْ : يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ بِمَ أَدْعُو؟ قَالَ: «تَقُولِينَ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي»


Musnad-Ahmad-25505

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

25505. அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன பிரார்த்தனை செய்து -கேட்க- வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ لَوْ أَنِّي عَلِمْتُ لَيْلَةَ الْقَدْرِ، مَا كُنْتُ أَدْعُو بِهِ رَبِّي عَزَّ وَجَلَّ، أَوْ: مَا كُنْتُ أَسْأَلُهُ؟ قَالَ: ” قُولِي: اللَّهُمَّ إِنَّكَ تُحِبُّ الْعَفْوَ، فَاعْفُ عَنِّي


Next Page » « Previous Page