8563.
«إِنَّهُ لَيَسْمَعُ خَفْقَ نِعَالِهِمْ إِذَا وَلَّوْا»
Musnad-Ahmad
8563.
«إِنَّهُ لَيَسْمَعُ خَفْقَ نِعَالِهِمْ إِذَا وَلَّوْا»
15645. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றி துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு மரம் முளைக்கும்.
அல்குர்ஆனை முழுமையாக ஓதி அதன் படி நடந்தவரின் பெற்றோருக்கு மறுமை நாளில் ஒளியிலான ஒரு கிரீடம் அணிவிக்கப்படும். அதன் பிரகாசம் வீட்டில் இருக்கும் சூரியனின் பிரகாசத்தைப் விட சிறந்ததாக இருக்கும். (பெற்றோருக்கே இந்த கூலியென்றால்) அதன்படி நடந்தவருக்கு எத்தகைய கூலி கிடைக்கும் என்று எண்ணிப்பாருங்கள்!
அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் (ரலி)
مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، نَبَتَ لَهُ غَرْسٌ فِي الْجَنَّةِ،
وَمَنْ قَرَأَ الْقُرْآنَ فَأَكْمَلَهُ وَعَمِلَ بِمَا فِيهِ، أَلْبَسَ وَالِدَيهِ يَوْمَ الْقِيَامَةِ تَاجًا هُوَ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتٍ مِنْ بُيُوتِ الدُّنْيَا، لَوْ كَانَتْ فِيهِ، فَمَا ظَنُّكُمْ بِالَّذِي عَمِلَ بِهِ
6493.
وَكَانَ عَلَى رَحْلِ – وَقَالَ: مَرَّةً عَلَى ثَقَلِ – النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ يُقَالُ لَهُ: كِرْكِرَةُ، فَمَاتَ، فَقَالَ: «هُوَ فِي النَّارِ» فَنَظَرُوا فَإِذَا عَلَيْهِ عَبَاءَةٌ قَدْ غَلَّهَا، وَقَالَ مَرَّةً: أَوْ كِسَاءٌ قَدْ غَلَّهُ
10146. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தந்தையில்லாத) கன்னிப் பெண்ணிடம் (அவளை மணமுடித்துக் கொடுக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும். அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்); அவள் மறுத்துவிட்டால் (அவளை மணமுடித்துக் கொடுக்க) அனுமதி இல்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«تُسْتَأْمَرُ الْيَتِيمَةُ فِي نَفْسِهَا، فَإِنْ سَكَتَتْ فَهُوَ إِذْنُهَا، وَإِنْ أَبَتْ فَلَا جَوَازَ عَلَيْهَا»
9605. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கன்னிகழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.
மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«لَا تُنْكَحُ الْأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ» ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «أَنْ تَسْكُتَ»
9491. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஆலோசித்து) அனுமதி பெற வேண்டும்; கன்னிப் பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும்” என்று கூறினார்கள்.
அப்போது மக்கள், அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«الثَّيِّبُ تُسْتَأْمَرُ فِي نَفْسِهَا، وَالْبِكْرُ تُسْتَأْذَنُ» ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «أَنْ تَسْكُتَ»
7759. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஆலோசித்து) அனுமதி பெற வேண்டும்; கன்னிப் பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும்” என்று கூறினார்கள்.
அப்போது மக்கள், அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«تُسْتَأْمَرُ الثَّيِّبُ، وَتُسْتَأْذَنُ الْبِكْرُ» قَالُوا: وَمَا إِذْنُهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تَسْكُتُ»
7527. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தந்தையில்லாத) கன்னிப் பெண்ணிடம் (அவளை மணமுடித்துக் கொடுக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும். அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்); அவள் மறுத்துவிட்டால் (அவளை மணமுடித்துக் கொடுக்க) அனுமதி இல்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«تُسْتَأْمَرُ الْيَتِيمَةُ فِي نَفْسِهَا، فَإِنْ سَكَتَتْ، فَهُوَ إِذْنُهَا، وَإِنْ أَبَتْ، فَلَا جَوَازَ عَلَيْهَا»
7404. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க) ஆலோசித்து அனுமதி பெற வேண்டும்; கன்னிப் பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும்” என்று கூறினார்கள்.
அப்போது மக்கள், அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«الثَّيِّبُ تُسْتَأْمَرُ فِي نَفْسِهَا، وَالْبِكْرُ تُسْتَأْذَنُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «أَنْ تَسْكُتَ»
7131. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும். கன்னிகழிந்த பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க) ஆலோசித்து அனுமதி பெற வேண்டும்” என்று கூறினார்கள்.
அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! கன்னிப்பெண் வெட்கப்படுவாளே! என்றுக் கூறப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«الْبِكْرُ تُسْتَأْمَرُ، وَالثَّيِّبُ تُشَاوَرُ» ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْبِكْرَ تَسْتَحِي قَالَ: «سُكُوتُهَا رِضَاهَا»
சமீப விமர்சனங்கள்