Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-17608

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

17608. கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனது பாட்டனார் (அபூஸப்ரா என்ற யஸீத் பின் மாலிக்-ரலி) (அவரின் மனைவியின் மூலம்) ஒரு ஆண்குழந்தையைப் பெற்றபோது அதற்கு அஸீஸ் (மிகைத்தவர்) என்று பெயர் சூட்டி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், (குழந்தைக்கு) என்ன பெயர் வைத்தீர்கள்? என்று கேட்டார்கள். எனது பாட்டனார் அஸீஸ் (மிகைத்தவர்) என்று பெயர் வைத்தேன் எனக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இல்லை. அவருக்கு, அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்ற பெயர் இருக்கட்டும் என்று கூறினார்கள். அவர்தான் என் தந்தை அப்துர்ரஹ்மான்.


وَلَدَ جَدِّي غُلَامًا، فَسَمَّاهُ عَزِيزًا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: وُلِدَ لِي غُلَامٌ، قَالَ: «فَمَا سَمَّيْتَهُ؟» قَالَ: قُلْتُ: عَزِيزًا. قَالَ: «لَا، بَلْ هُوَ عَبْدُ الرَّحْمَنِ» . قَالَ: فَهُوَ أَبِي


Musnad-Ahmad-12613

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12613. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருமணம் செய்வதை கட்டளையிடக்கூடியவர்களாகவும், துறவறத்தை அதிகம் தடுக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

மேலும் அதிகம் விரும்பும், அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் மறுமை நாளில் உங்களின் மூலமாகத் தான் மற்ற நபிமார்களுக்குமுன் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِالْبَاءَةِ، وَيَنْهَى عَنِ التَّبَتُّلِ نَهْيًا شَدِيدًا، وَيَقُولُ: «تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ، إِنِّي مُكَاثِرٌ الْأَنْبِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ»


Musnad-Ahmad-13569

ஹதீஸின் தரம்: Pending

13569. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருமணம் செய்வதை கட்டளையிடக்கூடியவர்களாகவும், துறவறத்தை அதிகம் தடுக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

மேலும் அதிகம் விரும்பும், அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் மறுமை நாளில் உங்களின் மூலமாகத் தான் மற்ற நபிமார்களுக்குமுன் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِالْبَاءَةِ ، وَيَنْهَى عَنِ التَّبَتُّلِ نَهْيًا شَدِيدًا، وَيَقُولُ: «تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ، إِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأَنْبِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ»


Musnad-Ahmad-27194

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

27194. ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்த நாளில் நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அபூ ராஃபிஃ (ரலி)


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ يَوْمَ وَلَدَتْهُ بِالصَّلَاةِ»


Musnad-Ahmad-27186

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

27186. ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்த போது நபி (ஸல்) அவர்கள் ஹசன் பின் அலீ (ரலி) அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அபூ ராஃபிஃ (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ»


Musnad-Ahmad-23869

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

23869. ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அபூ ராஃபிஃ (ரலி)


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَذَّنَ فِي أُذُنَيِ الْحَسَنِ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ»


Musnad-Ahmad-6737

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6737.


«عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْغُلَامِ شَاتَيْنِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةً»


Musnad-Ahmad-6713

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6713.


قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْعَقِيقَةِ؟ فَقَالَ: «إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْعُقُوقَ» وَكَأَنَّهُ كَرِهَ الِاسْمَ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ ، إِنَّمَا نَسْأَلُكَ عَنْ أَحَدِنَا يُولَدُ لَهُ؟ قَالَ: «مَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَنْسُكَ عَنْ وَلَدِهِ فَلْيَفْعَلْ، عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافَأَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ» قَالَ: وَسُئِلَ عَنِ الْفَرَعِ؟ قَالَ: «وَالْفَرَعُ حَقٌّ، وَأَنْ تَتْرُكَهُ حَتَّى يَكُونَ شُغْزُبًّا أَوْ شُغْزُوبًّا ابْنَ مَخَاضٍ أَوِ ابْنَ لَبُونٍ، فَتَحْمِلَ عَلَيْهِ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ تُعْطِيَهُ أَرْمَلَةً، خَيْرٌ مِنْ أَنْ تَذْبَحَهُ يَلْصَقُ لَحْمُهُ بِوَبَرِهِ، وَتُكْفِئُ إِنَاءَكَ، وَتُولِهُ نَاقَتَكَ» ، وَقَالَ: وَسُئِلَ عَنِ الْعَتِيرَةِ؟ فَقَالَ: «الْعَتِيرَةُ حَقٌّ» قَالَ: بَعْضُ الْقَوْمِ لِعَمْرِو بْنِ شُعَيْبٍ: مَا الْعَتِيرَةُ؟ قَالَ: «كَانُوا يَذْبَحُونَ فِي رَجَبٍ شَاةً فَيَطْبُخُونَ وَيَأْكُلُونَ وَيُطْعِمُونَ»


Musnad-Ahmad-6822

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6822.

நபி (ஸல்) அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மாறுசெய்வதை நான் விரும்பமாட்டேன். யாருக்கேனும் குழந்தை பிறந்து அதற்காக அவர் (ஆட்டை) அறுத்து வணக்கம்புரிய விரும்பினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆட்டை ஆண்குழந்தைக்கும் ஒரு ஆட்டை பெண்குழந்தைக்கும் கொடுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறி : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْعَقِيقَةِ؟ فَقَالَ: «لَا أُحِبُّ الْعُقُوقَ، وَمَنْ وُلِدَ لَهُ مَوْلُودٌ فَأَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْهُ فَلْيَفْعَلْ، عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافَأَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ»


Musnad-Ahmad-27196

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

27196.


أَنَّ الْحَسَنَ بْنَ عَلِيٍّ لَمَّا وُلِدَ أَرَادَتْ أُمُّهُ فَاطِمَةُ أَنْ تَعُقَّ عَنْهُ بِكَبْشَيْنِ، فَقَالَ: «لَا تَعُقِّي عَنْهُ، وَلَكِنْ احْلِقِي شَعْرَ رَأْسِهِ، ثُمَّ تَصَدَّقِي بِوَزْنِهِ مِنَ الْوَرِقِ فِي سَبِيلِ اللَّهِ» ، ثُمَّ وُلِدَ حُسَيْنٌ بَعْدَ ذَلِكَ فَصَنَعَتْ مِثْلَ ذَلِكَ


Next Page » « Previous Page