Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-21967

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

21967. நபி (ஸல்) அவர்கள் வலது புறமும் இடது புறமும் திரும்பியதை நான் பார்த்துள்ளேன். மேலும் அவர்கள் இதைத் தமது நெஞ்சின் மீது வைத்ததையும் நான் பார்த்துள்ளேன் என்று ஹுல்ப் அத்தாயீ (ரலி) அறிவிக்கிறார்.

யஹ்யா என்ற அறிவிப்பாளர் இதைத் தமது நெஞ்சின் மீது என்று கூறும் போது, வலது கையை இடது கை மணிக்கட்டின் மேல் வைத்து விளக்கிக் காட்டினார்.


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْصَرِفُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ، وَرَأَيْتُهُ، قَالَ، يَضَعُ هَذِهِ عَلَى صَدْرِهِ»

وَصَفَّ يَحْيَى: الْيُمْنَى عَلَى الْيُسْرَى فَوْقَ الْمِفْصَلِ


Musnad-Ahmad-18846

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18846. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) தமது வலது கையை இடது கையின் மேல் வைத்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاضِعًا يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلَاةِ»


Musnad-Ahmad-875

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

875. தொழுகையில் (இடது) முன் கை மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்குக் கீழே வைப்பது நபிவழியாகும் என அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா (ரலி)


«إِنَّ مِنَ السُّنَّةِ فِي الصَّلاةِ وَضْعُ الْأَكُفِّ، عَلَى الْأَكُفِّ تَحْتَ السُّرَّةِ»


Musnad-Ahmad-18870

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18870. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவ்வாறு தொழுவார்கள் என்று அவர்களின் தொழுகையைப் பார்க்கப் போகிறேன் என்று (எனக்குள்) நான் சொல்லிக் கொண்டேன். பின்னர், அவர்களை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், எழுந்து நின்று “தக்பீர்’கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராகக் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் தம் வலக் கையை இடது முன் கை, மணிக்கட்டு, முழங்கை (ஆகிய மூன்றின்) மீதும் வைத்தார்கள். அவர்கள் “ருகூஉ’ செய்ய விரும்பியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகக்) கைகளை உயர்த்தினார்கள். (பின்னர்) தம் கைகளை மூட்டுக் கால்களின் மீது வைத்தார்கள்.

பின்னர் தமது தலையை (“ருகூஉ’விலிருந்து) நிமிர்த்தியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் “சஜ்தா’ செய்தார்கள். அப்போது தம் உள்ளங்கைகளைக் காதுகளுக்கு நேராக (தரையில்) வைத்தார்கள். பின்னர் (சஜ்தாவிலிருந்து எழுந்து) அமர்ந்தார்கள். அப்போது இடக் காலை விரித்து வைத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள். (நடுவிரலையும் கட்டைவிரலையும்

قُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَيْفَ يُصَلِّي؟ قَالَ: فَنَظَرْتُ إِلَيْهِ قَامَ فَكَبَّرَ، وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ، ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى، وَالرُّسْغِ وَالسَّاعِدِ، ثُمَّ قَالَ: لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ، رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا، ثُمَّ سَجَدَ، فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ، ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى، فَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى، وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى، ثُمَّ قَبَضَ بَيْنَ أَصَابِعِهِ فَحَلَّقَ حَلْقَةً، ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ، فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا

«، ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ النَّاسَ عَلَيْهِمُ الثِّيَابُ تُحَرَّكُ أَيْدِيهِمْ مِنْ تَحْتِ الثِّيَابِ مِنَ الْبَرْدِ»


Musnad-Ahmad-3473

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3473. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனாரும், மாதவிடாய் நின்று, குளிப்பதற்கு முன் உடலுறவு கொண்டவர் அரை தீனாரும் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «جَعَلَ فِي الْحَائِضِ نِصَابَ دِينَارٍ، فَإِنْ أَصَابَهَا، وَقَدْ أَدْبَرَ الدَّمُ عَنْهَا وَلَمْ تَغْتَسِلْ، فَنِصْفُ دِينَارٍ»


Musnad-Ahmad-3428

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3428. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் தர்மம் செய்ய வேண்டும் எனவும், அது இல்லாவிட்டால் அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


فِي الرَّجُلِ يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ: «يَتَصَدَّقُ بِدِينَارٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَنِصْفِ دِينَارٍ»


Musnad-Ahmad-3145

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3145. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்ட ஒரு மனிதர், அதன் பரிகாரம் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவருக்கு  ஒரு தீனார் அல்லது  அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என கட்டளையிட்டார்கள்.


أَنَّ رَجُلًا غَشِيَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فَسَأَلَ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «فَأَمَرَهُ أَنْ يَتَصَدَّقَ بِدِينَارٍ، أَوْ نِصْفِ دِينَارٍ»


Musnad-Ahmad-2843

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2843. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்ட மனிதருக்கு, அவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.


«أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، أَنْ يَتَصَدَّقَ بِدِينَارٍ، أَوْ بِنِصْفِ دِينَارٍ»


Musnad-Ahmad-2788

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2788. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் தர்மம் செய்ய வேண்டும் எனவும், அது இல்லாவிட்டால் அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«يَتَصَدَّقُ بِدِينَارٍ، فَإِنْ لَمْ يَجِدْ دِينَارًا، فَنِصْفُ دِينَارٍ»


Musnad-Ahmad-2595

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2595. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«فِي الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ يَتَصَدَّقُ بِدِينَارٍ، أَوْ نِصْفِ دِينَارٍ»


Next Page » « Previous Page