அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையின் திறவுகோல் உளூ எனும் அங்கத் தூய்மையாகும். (தொழுகையில் இல்லாத ஏனைய செயல்களை) தடையாக ஆக்குவது (அல்லாஹு அக்பர் எனக் கூறும்) முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) அனுமதிப்பது, (தொழுகையை நிறைவு செய்ய கொடுக்கும்) ஸலாம் ஆகும்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
(முஸ்னது அஹமது: 1006)حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مِفْتَاحُ الصَّلاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-957.
Musnad-Ahmad-Shamila-1006.
Musnad-Ahmad-Alamiah-957.
Musnad-Ahmad-JawamiulKalim-977.
إسناده حسن في المتابعات والشواهد رجاله ثقات عدا عبد الله بن عقيل الهاشمي وهو مقبول
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அகீல் பற்றி பல ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
- இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் இவர் பலவீனமானவர் என்றும், - இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
இவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்றும், - அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
போன்றோர் இவர் ஹதீஸை நான் ஆதாரமாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றும், - இப்னு உயைனா குறைஷியர்களில் நான்கு பேரின் ஹதீஸ்கள் கைவிடப்பட்டன. அவர்களில் இவரும் ஒருவர் என்றும், இன்னும் பல அறிஞர்கள் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் கூறியுள்ளனர்.
- அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இஸ்ஹாக், ஹுமைதி போன்றோர் இவரின் ஹதீஸை ஆதாரமாக எடுத்துள்ளனர் என புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியதாக திர்மதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். - மேலும் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்கள் இவரைப் பற்றி முகாரிபுல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள். இதன் கருத்து பற்றி சிலர் இவர் மிக பலவீனமானவர் அல்ல. இவரின் ஹதீஸ் எழுதப்படும், தனித்து அறிவித்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், சிலர் இதன் கருத்து ஹஸன் தரத்தில் உள்ளவர் என்றும் கூறியுள்ளனர்.
பார்க்க : தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/424.
وقال ابن عبد البر : هو أوثق من كل من تكلم فيه . انتهى . وهذا إفراط
تهذيب التهذيب: (2 / 424)
1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அஹ்மத்-1006 , 1072 , முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்-2539 , இப்னு அபீஷைபா-2378 , தாரிமீ-714 , இப்னுமாஜா-275 , அபூதாவூத்-61 , 618 , திர்மிதீ-3 , பஸ்ஸார்-633 , அபூயஃலா-616 , தாரகுத்னீ-1359 , 1421 , ஸகீர் பைஹகீ-462 , குப்ரா பைஹகீ-2261 , 2962 , 3373 , 3970 ,
2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : திர்மிதீ-238 .
3 . அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-7175 .
4 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2381 .
மேற்கண்ட இந்த நான்கு வழிகளில் வரும் செய்திகளையும் இணைத்து இந்த செய்தியை அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் சரியானது என்று கூறியுள்ளார். (அஸலு ஸிஃபதி ஸலாதின் நபீ-பக்கம் 186)
5 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-4 .
6 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-2262 .
சமீப விமர்சனங்கள்