Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-23222

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23222. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதுகிறாரோ அவருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.

அறிவிப்பவர் : நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர்.


مَنْ أَتَى عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ يَوْمًا


Musnad-Ahmad-16638

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

16638. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதுகிறாரோ அவருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.

அறிவிப்பவர் : நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர்.


مَنْ أَتَى عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ يَوْمًا


Musnad-Ahmad-20000

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

20000. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர், “வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் “இதைக் கழற்றி விடு! இது உனக்கு பலவீனத்தைத் தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்” என்று கூறினார்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْصَرَ عَلَى عَضُدِ رَجُلٍ حَلْقَةً، أُرَاهُ قَالَ مِنْ صُفْرٍ، فَقَالَ: «وَيْحَكَ مَا هَذِهِ؟» قَالَ: مِنَ الْوَاهِنَةِ؟ قَالَ: «أَمَا إِنَّهَا لَا تَزِيدُكَ إِلَّا وَهْنًا انْبِذْهَا عَنْكَ؛ فَإِنَّكَ لَوْ مِتَّ وَهِيَ عَلَيْكَ مَا أَفْلَحْتَ أَبَدًا»


Musnad-Ahmad-17404

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

17404. “யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்ற மாட்டான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


«مَنْ تَعَلَّقَ تَمِيمَةً، فَلَا أَتَمَّ اللَّهُ لَهُ، وَمَنْ تَعَلَّقَ وَدَعَةً، فَلَا وَدَعَ اللَّهُ لَهُ»


Musnad-Ahmad-17422

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

17422. உக்பா பின்ஆமிர் (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பத்து பேர் கொண்ட) ஒரு குழுவினர் வந்தபோது, ஒன்பது நபர்களிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கி கொண்டு ஒருவரிடம் வாங்கவில்லை. அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே!, இவரை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள்? என கேட்க, “அவர் தாயத் அணிந்து உள்ளார்” என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், தனது கையால் அதை அறுத்தெரிந்து விட்டு அவரிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “யார் தாயத்தைத் தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்” என்று கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ، فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا؟ قَالَ: ” إِنَّ عَلَيْهِ تَمِيمَةً ” فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا، فَبَايَعَهُ، وَقَالَ: ” مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ


Musnad-Ahmad-7045

ஹதீஸின் தரம்: Pending

7045. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்.

அறிவிப்பவர் : இப்னு அம்ரு (ரலி)


«مَنْ رَدَّتْهُ الطِّيَرَةُ مِنْ حَاجَةٍ، فَقَدْ أَشْرَكَ» ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا كَفَّارَةُ ذَلِكَ؟ قَالَ: ” أَنْ يَقُولَ أَحَدُهُمْ: اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُكَ، وَلَا طَيْرَ إِلَّا طَيْرُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ


Musnad-Ahmad-9536

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9536. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்து விட்டான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«مَنْ أَتَى كَاهِنًا، أَوْ عَرَّافًا، فَصَدَّقَهُ بِمَا يَقُولُ، فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ»


Musnad-Ahmad-16736

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

16736. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«يَا بَنِي عَبْدِ مَنَافٍ، لَا تَمْنَعُنَّ أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ أَوْ صَلَّى أَيَّ سَاعَةٍ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ»


Musnad-Ahmad-12583

ஹதீஸின் தரம்: More Info

12583. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் என்னுடைய பள்ளியில் ஒரு தொழுகை கூட தவறிவிடாமல் நாற்பது தொழுகைகள் (தொடர்ந்து தொழுவாரோ) அவருக்கு  நரகிலிருந்து விடுதலை, தண்டனையிலிருந்து பாதுகாப்பு, நயவஞ்சகத்தனத்தில் இருந்து நீங்கியவர் என்று எழுதப்படுகிறது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

 


«مَنْ صَلَّى فِي مَسْجِدِي أَرْبَعِينَ صَلَاةً، لَا يَفُوتُهُ صَلَاةٌ، كُتِبَتْ لَهُ بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَنَجَاةٌ مِنَ الْعَذَابِ، وَبَرِئَ مِنَ النِّفَاقِ»


Musnad-Ahmad-15271

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

15271. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.

மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ، وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ مِائَةِ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ»


Next Page » « Previous Page