Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-7931

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7931. உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். அது மறுமை நாளில் வந்து “ என் இறைவா நான் துண்டிக்கப்பட்டேன், என் இறைவா நான் அநீதமிழைக்கப்பட்டேன், என் இறைவா நான் கெடுதல் செய்யப்பட்டேன் ” என அல்லாஹ்விடத்தில் முறையிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


الرَّحِمُ شِجْنَةٌ مِنَ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ، تَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ تَقُولُ: يَا رَبِّ قُطِعْتُ، يَا رَبِّ ظُلِمْتُ، يَا رَبِّ أُسِيءَ إِلَيَّ


Musnad-Ahmad-24336

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24336. உறவுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன் என்று (அல்லாஹ் கூறியதாக) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«الرَّحِمُ، مَنْ وَصَلَهَا وَصَلَهُ اللَّهُ، وَمَنْ قَطَعَهَا قَطَعَهُ اللَّهُ»


Musnad-Ahmad-16772

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

16772. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ»


Musnad-Ahmad-16763

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

16763. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ»


Musnad-Ahmad-16732

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

16732. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ»


Musnad-Ahmad-9807

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9807. நான் ஒரு நாளில் நூறு தடவை “அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’

(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ عَزَّ وَجَلَّ، وَأَتُوبُ إِلَيْهِ كُلَّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ»


Musnad-Ahmad-8493

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8493. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல்

“அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்”

என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


وَاللَّهِ، إِنِّي لَأَسْتَغْفِرُ وَأَتُوبُ فِي كُلِّ يَوْمٍ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً


Musnad-Ahmad-7793

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7793. நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் “அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’

(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً، وَأَتُوبُ إِلَيْهِ»


Musnad-Ahmad-21444

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21444. அனஸா குலத்தைச் சார்ந்த ஒருவர் கூறுகிறார் :

…நான் அபூதர் (ரலி) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் போது அவர்கள் உங்களிடம் கைகொடுப்பார்களா? என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் நான் நபி (ஸல்) அவர்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் என்னிடம் கைகொடுக்காமல் இருந்ததில்லை என்று கூறினார்கள்…


أَنَّهُ قَالَ لِأَبِي ذَرٍّ حِينَ سُيِّرَ مِنَ الشَّامِ، فَذَكَرَ الْحَدِيثَ، وَقَالَ فِيهِ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَافِحُكُمْ إِذَا لَقِيتُمُوهُ؟ فَقَالَ: مَا لَقِيتُهُ قَطُّ إِلَّا صَافَحَنِي


Musnad-Ahmad-22236

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22236. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர் தன் கையை நோயாளியின் நெற்றியின் மீது அல்லது அவருடைய கையின் மீது வைத்து எப்படி இருக்கின்றீர் என்று கேட்பதே நோயாளியை பூரிபூரணமாக நலம் விசாரிக்கும் முறையாகும். உங்களுக்கிடையே கைகொடுப்பது பரிபூரணமாக வாழ்த்துச் சொல்லும் முறையாகும்.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)


«مِنْ تَمَامِ عِيَادَةِ الْمَرِيضِ أَنْ يَضَعَ أَحَدُكُمْ يَدَهُ عَلَى جَبْهَتِهِ، أَوْ يَدِهِ، فَيَسْأَلُهُ كَيْفَ هُوَ؟ وَتَمَامُ تَحِيَّاتِكُمْ بَيْنَكُمُ الْمُصَافَحَةُ


Next Page » « Previous Page