51. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), “நான் காலையிலும், மாலையிலும், (இரவில்) எனது படுக்கையிலும் ஓதுவதற்கேற்ற (பிரார்த்தனை) ஒன்றை எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள், “அல்லாஹும்ம பா[F](த்)திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ஆலிமல் ஃகைபி(B] வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப(B] குல்லி ஷையிவ் வமலீ(க்)கஹூ, அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(B(க்)க மின் ஷர்ரி நப்[F]ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹீ என்று கூறுங்கள்” என்றார்கள்.
(பொருள்: இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்)
يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَقُولُهُ إِذَا أَصْبَحْتُ، وَإِذَا أَمْسَيْتُ، وَإِذَا أَخَذْتُ مَضْجَعِي. قَالَ: ” قُلْ: اللَّهُمَّ فَاطِرَ السَّمَاواتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَوْ قَالَ اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ
சமீப விமர்சனங்கள்