ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
7423. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு ரமளான் மாதத்தின் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்துவிட்டன? என்று கேட்டார்கள்.
அதற்கு நாங்கள், 22 நாட்கள் முடிந்துவிட்டன; மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என்று கூறினோம்.
அதற்கவர்கள், “இல்லை. மாறாக 22 நாட்கள் முடிந்துவிட்டன; 7 நாட்களே மீதம் உள்ளன. இன்றைய இரவில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்” எனக் கூறினார்கள்.
அஹ்மத் இமாம் கூறுகிறார்:
யஃலா அவர்களின் அறிவிப்பில், (7 நாட்களே மீதம் உள்ளன என்ற வாக்கியத்துடன்) “இந்த மாதம் 29 நாட்களைக் கொண்டது” என்று நபி (ஸல்) கூறியதாக கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
«كَمْ مَضَى مِنَ الشَّهْرِ؟» قَالَ: قُلْنَا: مَضَتْ ثِنْتَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ ثَمَانٍ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا، بَلْ مَضَتْ مِنْهُ ثِنْتَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ سَبْعٌ، اطْلُبُوهَا اللَّيْلَةَ» قَالَ يَعْلَى، فِي حَدِيثِهِ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ»
சமீப விமர்சனங்கள்