Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-20708

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

20708. (நாங்கள்) ஒரு வீட்டில் (இருக்கும்போது) “உளூ இல்லாத ‎தொழுகையையும்; மோசடி செய்த பணத்திலிருந்து (வழங்கப்படும்) தர்மத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)


أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتٍ يَقُولُ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ»


Musnad-Ahmad-5419

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5419. முஸ்அப் பின் ஸஃத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நோயுற்றிருந்த இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சென்றார்கள். அப்போது இப்னு ஆமிர் (ரஹ்) அவர்கள், இப்னு உமர் அவர்களே! எனக்காகத் தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கக் கூடாதா? என்று கேட்டார்கள்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மமும் ஏற்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் பஸ்ராவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ல் இருந்தீர்கள் என்று கூறி (மறுத்து) விட்டார்கள்.


دَخَلَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ يَعُودُهُ فَقَالَ: مَا لَكَ لَا تَدْعُو لِي؟ قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَقْبَلُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ» ، وَقَدْ كُنْتَ عَلَى الْبَصْرَةِ يَعْنِي عَامِلًا


Musnad-Ahmad-5205

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5205. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மத்தையும்; அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் தொழும் எந்தத் தொழுகையையும் உயர்ந்தோனான அல்லாஹ் ஏற்கமாட்டான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

 


«لَا يَقْبَلُ اللَّهُ تَعَالَى صَدَقَةً مِنْ غُلُولٍ، وَلَا صَلَاةً بِغَيْرِ طُهُورٍ»


Musnad-Ahmad-5123

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5123. முஸ்அப் பின் ஸஃத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் மற்றவர்களும் சென்றனர்) அவர்களில் சிலர் இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களைப் புகழ்ந்தனர். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அமைதியாக இருந்தார்கள்.

பிறகு அவர்கள், “நான் அவர்களைப் போன்று உம்மை ஏமாற்ற விரும்பவில்லை. ஏனெனில், “அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் தொழும் எந்தத் தொழுகையையும்; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மத்தையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். (நீங்கள் பஸ்ராவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ல் இருந்தீர்கள்)


مَرِضَ ابْنُ عَامِرٍ فَجَعَلُوا يَثْنُونَ عَلَيْهِ، وَابْنُ عُمَرَ سَاكِتٌ فَقَالَ: أَمَا إِنِّي لَسْتُ بِأَغَشِّهِمْ لَكَ، وَلَكِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ»


Musnad-Ahmad-4969

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4969. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மமும்; அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் தொழும் எந்தத் தொழுகையும் (அல்லாஹ்வால்) ஏற்கப்படாது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«لَا تُقْبَلُ صَدَقَةٌ مِنْ غُلُولٍ، وَلَا صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ»


Musnad-Ahmad-4700

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4700. முஸ்அப் பின் ஸஃத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்களில் சிலர் இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக சென்றனர். அவர்களில் சிலர், இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களைப் புகழ்ந்தனர். அப்போது (அங்கிருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “நான் அவர்களைப் போன்று உம்மை ஏமாற்ற விரும்பவில்லை. ஏனெனில், “மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மத்தையும்; அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் தொழும் எந்தத் தொழுகையையும் பாக்கியமிக்க உயர்ந்தோன் அல்லாஹ் ஏற்கமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். (நீங்கள் பஸ்ராவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ல் இருந்தீர்கள்)


أَنَّ نَاسًا دَخَلُوا عَلَى ابْنِ عَامَرٍ فِي مَرَضِهِ فَجَعَلُوا يُثْنُونَ عَلَيْهِ، فَقَالَ ابْنُ عُمَرَ: أَمَا إِنِّي لَسْتُ بِأَغَشِّهِمْ لَكَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَا يَقْبَلُ صَدَقَةً مِنْ غُلُولٍ وَلَا صَلَاةً بِغَيْرِ طُهُورٍ»


Musnad-Ahmad-4540

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4540.


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ، وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ، وَبَعْدَمَا يَرْفَعُ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ – وَقَالَ سُفْيَانُ: مَرَّةً، وَإِذَا رَفَعَ رَأْسَهُ -، وَأَكْثَرُ مَا كَانَ يَقُولُ: وَبَعْدَمَا يَرْفَعُ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، وَلَا يَرْفَعُ بَيْنَ السَّجْدَتَيْنِ


Musnad-Ahmad-3974

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3974.


«عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ، فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ، ثُمَّ رَكَعَ وَطَبَّقَ بَيْنَ يَدَيْهِ، وَجَعَلَهُمَا بَيْنَ رُكْبَتَيْهِ» فَبَلَغَ سَعْدًا، فَقَالَ: «صَدَقَ أَخِي، قَدْ كُنَّا نَفْعَلُ ذَلِكَ، ثُمَّ أُمِرْنَا بِهَذَا، وَأَخَذَ بِرُكْبَتَيْهِ» ،

حَدَّثَنِي عَاصِمُ بْنُ كُلَيْبٍ، هَكَذَا


Musnad-Ahmad-3681

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3681.


أَلَا أُصَلِّي لَكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «فَصَلَّى، فَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلَّا مَرَّةً»


Musnad-Ahmad-300

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

300. செயல் எண்ணத்தை பொருத்தே அமைகிறது. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்பதிப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும்.

எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக(ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்கவிரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன் என  மக்களுக்கு உமர் (ரலி) அவர்கள் உரைநிகழ்த்தும் போது கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: அல்கமா பின் வக்காஸ் அல்லைஸிய்யீ (ரஹ்)


إِنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَهُوَ يَخْطُبُ النَّاسَ، وَهُوَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الْعَمَلُ بِالنِّيَّةِ، وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»


Next Page » « Previous Page