Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-168

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

168. செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வை (திருப்தியுறச் செய்வதைக்) குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்.

ஒருவரின் ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அல்லது அவர் மணக்கவிருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால், அவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)


«إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّةِ، وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا، أَوِ امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»


Musnad-Ahmad-23552

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

23552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்ரா-மிஃராஜ் ஜெரூசலத்திற்கும் பின்பு விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்ட) விண்ணுலகப் பயணத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “ஜிப்ரீல் (அலை) அவர்களே! உங்களுடன் இருப்பது யார்? என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர் (தான்) முஹம்மது” என்று பதிலளித்தார்கள். உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள், “முஹம்மதே! உமது சமுதாயத்திற்கு சொர்க்கத்தில் அதிகமான மரங்களை நட கட்டளையிடுங்கள். ஏனெனில் சொர்க்கத்தின் மண் மிக வாசனைமிக்கது; சொர்க்க பூமி மிக விசாலமானது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில் மரம் நடுதல் என்றால் என்ன? (அது எவ்வாறு?) என்று கேட்டார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்” (பொருள்: அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது என்று கூறுவது) என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ مَرَّ عَلَى إِبْرَاهِيمَ، فَقَالَ: ” مَنْ مَعَكَ يَا جِبْرِيلُ؟ قَالَ: هَذَا مُحَمَّدٌ، فَقَالَ لَهُ إِبْرَاهِيمُ: مُرْ أُمَّتَكَ فَلْيُكْثِرُوا مِنْ غِرَاسِ الْجَنَّةِ، فَإِنَّ تُرْبَتَهَا طَيِّبَةٌ، وَأَرْضَهَا وَاسِعَةٌ قَالَ: وَمَا غِرَاسُ الْجَنَّةِ؟ قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ


Musnad-Ahmad-9424

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

9424. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளிவாசல்களுக்கு (மனிதர்களில்) சிலர் தூண்களைப் போன்று இருப்பார்கள். வானவர்கள் அவர்களின் சபைத்தோழர்களாக  இருப்பார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்கு வராவிட்டால் வானவர்கள் அவர்களைத் தேடுவார்கள். அவர்கள் நோயாளியாகி விட்டால் வானவர்கள் அவர்களை நலம் விசாரிப்பார்கள். அவர்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் வானவர்கள் அவர்களுக்கு உதவுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ لِلْمَسَاجِدِ أَوْتَادًا الْمَلَائِكَةُ جُلَسَاؤُهُمْ، إِنْ غَابُوا يَفْتَقِدُونَهُمْ، وَإِنْ مَرِضُوا عَادُوهُمْ ، وَإِنْ كَانُوا فِي حَاجَةٍ أَعَانُوهُمْ»


Musnad-Ahmad-6696

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6696. நாங்கள் தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிட்டால், ” பிஸ்மில்லாஹி, அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ இகாபிஹீ, வ ஷர்ரி இபாதிஹீ, வமின் ஹமஸாத்திஷ் ஷையாத்தீனி, வ அய் யஹ்ளுருன்’ என்ற பிரார்த்தனையை நாங்கள் ஓதவேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்.

(பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால், அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் ஊசலாட்டத்தை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

தன் பிள்ளைகளில் இதை கூறுமுடிந்தவர்களுக்கு தூங்கும் சமயம் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) இவைகளை கற்றுக் கொடுப்பார்கள். இதைக் கூறமுடியாத விவரமில்லாத பிள்ளைகளுக்கு அதை எழுதி கழுத்தில் கட்டிவிடுவார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا كَلِمَاتٍ نَقُولُهُنَّ عِنْدَ النَّوْمِ مِنَ الْفَزَعِ: «بِسْمِ اللَّهِ، أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ، مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ»

قَالَ: فَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو: «يُعَلِّمُهَا مَنْ بَلَغَ مِنْ وَلَدِهِ أَنْ يَقُولَهَا عِنْدَ نَوْمِهِ، وَمَنْ كَانَ مِنْهُمْ صَغِيرًا لَا يَعْقِلُ أَنْ يَحْفَظَهَا كَتَبَهَا لَهُ فَعَلَّقَهَا فِي عُنُقِهِ»


Musnad-Ahmad-14785

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

14785. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (செல்லும் வழியில்) ஒரு பெண்ணை கடந்து சென்றார்கள். (அதைக் கண்ட) அந்த பெண் அவர்களுக்காக ஒரு ஆட்டை அறுத்து உணவு ஏற்பாடு செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த பாதை வழியாக) திரும்பி வந்த சமயம், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்காக உணவு ஏற்பாடு செய்துள்ளோம். வாருங்கள்; சாப்பிடுங்கள்! என்று அந்தப் பெண் விருந்துக்கு அழைத்தார். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (அந்தப் பெண்ணின் வீட்டிற்குள்) நுழைந்தனர். நபி (ஸல்) அவர்கள் உண்ண ஆரம்பிப்பதற்கு முன் நபித்தோழர்கள் உண்ணமாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு கவளத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் அதை அவர்களால் விழுங்க முடியவில்லை. அப்போது “இந்த ஆடு அதனின் உரிமையாளர் அனுமதியின்றி அறுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அதற்கு அந்தப் பெண், அல்லாஹ்வின் தூதரே! ஸஃத் பின் முஆத் குடும்பத்தாரிடமிருந்து (அனுமதியின்றி) எடுத்துக்கொள்வதற்கு நாங்கள் வெட்கப்படமாட்டோம். அவர்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொள்வதற்கு வெட்கப்படமாட்டார்கள். எனவே அவர்களிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்வோம். எங்களிடமிருந்து அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று விளக்கம் கூறினார்.

அறிவிப்பவர்:

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ مَرُّوا بِامْرَأَةٍ، فَذَبَحَتْ لَهُمْ شَاةً، وَاتَّخَذَتْ لَهُمْ طَعَامًا، فَلَمَّا رَجَعَ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا اتَّخَذْنَا لَكُمْ طَعَامًا، فَادْخُلُوا فَكُلُوا، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ، وَكَانُوا لَا يَبْدَءُونَ حَتَّى يَبْتَدِئَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لُقْمَةً، فَلَمْ يَسْتَطِعْ أَنْ يُسِيغَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذِهِ شَاةٌ ذُبِحَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا» ، فَقَالَتِ الْمَرْأَةُ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّا لَا نَحْتَشِمُ مِنْ آلِ سَعْدِ بْنِ مُعَاذٍ، وَلَا يَحْتَشِمُونَ مِنَّا، نَأْخُذُ مِنْهُمْ، وَيَأْخُذُونَ مِنَّا


Musnad-Ahmad-23465

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23465. நான் சிறுவனாக இருந்தபோது எனது தந்தையுடன் சேர்ந்து நபி (ஸல்) அவர்களுடன் ஒரு அன்ஸாரி மனிதரின் ஜனாஸாவைப் பின் தொடர்ந்தோம். (இறுதியாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ருக் குழிக்கருகில் அமர்ந்துக் கொண்டு, ‘தலைப் பக்கம் விசாலமாக்கு! இருகால்கள் பக்கம் விசாலமாக்கு! என்று குழி வெட்டுபவரிடம் கூறினார்கள். மேலும் (அந்த) ஜனாஸாவிற்கு சொர்க்கத்தில் எவ்வளவு பேரீச்சை மரங்கள் உள்ளன! என்று (ஆச்சரியமாக) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஒரு அன்ஸாரி நபித்தோழர்.

 


خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةِ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ وَأَنَا غُلَامٌ مَعَ أَبِي، فَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حُفَيْرَةِ الْقَبْرِ، فَجَعَلَ يُوصِي الْحَافِرَ وَيَقُولُ: «أَوْسِعْ مِنْ قِبَلِ الرَّأْسِ، وَأَوْسِعْ مِنْ قِبَلِ الرِّجْلَيْنِ، لَرُبَّ عَذْقٍ لَهُ فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-22509

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22509. நபி (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவைப் பின் தொடர்ந்தோம். நாங்கள் (ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டு) திரும்பிய போது வழியில் ஒரு குறைஷி பெண்ணின் (சார்பாக அனுப்பப்பட்ட) அழைப்பாளர், “அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் உங்களையும், உங்களுடன் இருப்பவர்களையும் விருந்திற்கு அழைக்கிறார் என்று கூறினார். எனவே! நபி (ஸல்) அவர்கள் அந்த அழைப்பை ஏற்று சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம்.

அங்கு சிறுவர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் தந்தையுடன் அமர்ந்தோம். உணவு கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் உணவில் கையை வைத்தார்கள். கூட்டத்தில் உள்ள அனைவரும் கையை வைத்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு உணவுக்கவளம் (மெள்ளமுடியாமல் வாயில் சுழன்றுக்கொண்டு) விக்கிக் கொள்வதை கூட்டத்தினர் கண்டு, (ஏதோ விவகாரம் உள்ளது என்று) புரிந்துக்கொண்டு எங்களை விட்டுவிட்டு அவர்கள் தங்கள் கைகளை உணவுத் தட்டிலிருந்து எடுத்துக்கொண்டனர். பின்பு ஒரு மனிதர் எங்களுடைய கைகளைகளையும் பிடித்து, வைத்திருந்த உணவுக்கவளத்தை கீழே தட்டிவிட அது தட்டில் விழுந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்? என்று பார்த்தவர்களாக எங்கள் கைகளை பிடித்துக்கொண்டனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சாப்பிடாமல்) உணவை தட்டில்

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةٍ، فَلَمَّا رَجَعْنَا لَقِيَنَا دَاعِي امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فُلَانَةً تَدْعُوكَ وَمَنْ مَعَكَ إِلَى طَعَامٍ، فَانْصَرَفَ فَانْصَرَفْنَا مَعَهُ، فَجَلَسْنَا مَجَالِسَ الْغِلْمَانِ مِنْ آبَائِهِمْ بَيْنَ أَيْدِيهِمْ، ثُمَّ جِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، وَوَضَعَ الْقَوْمُ أَيْدِيَهُمْ فَفَطِنَ لَهُ الْقَوْمُ، وَهُوَ يَلُوكُ لُقْمَتَهُ لَا يُجِيزُهَا، فَرَفَعُوا أَيْدِيَهُمْ وَغَفَلُوا عَنَّا، ثُمَّ ذَكَرُوا فَأَخَذُوا بِأَيْدِينَا فَجَعَلَ الرَّجُلُ يَضْرِبُ اللُّقْمَةَ بِيَدِهِ حَتَّى تَسْقُطَ، ثُمَّ أَمْسَكُوا بِأَيْدِينَا يَنْظُرُونَ مَا يَصْنَعُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَفَظَهَا فَأَلْقَاهَا فَقَالَ: «أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا» . فَقَامَتِ الْمَرْأَةُ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ كَانَ فِي نَفْسِي أَنْ أَجْمَعَكَ وَمَنْ مَعَكَ عَلَى طَعَامٍ، فَأَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ فَلَمْ أَجِدْ شَاةً تُبَاعُ، وَكَانَ عَامِرُ بْنُ أَبِي وَقَّاصٍ ابْتَاعَ شَاةً أَمْسِ مِنَ الْبَقِيعِ، فَأَرْسَلْتُ إِلَيْهِ أَنْ ابْتُغِيَ لِي شَاةً فِي الْبَقِيعِ، فَلَمْ تُوجَدْ فَذُكِرَ لِي أَنَّكَ اشْتَرَيْتَ شَاةً، فَأَرْسِلْ بِهَا إِلَيَّ، فَلَمْ يَجِدْهُ الرَّسُولُ وَوَجَدَ أَهْلَهُ فَدَفَعُوهَا إِلَى رَسُولِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطْعِمُوهَا الْأُسَارَى»


Musnad-Ahmad-25194

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25194.


ذُكِرَ لَهَا حَدِيثُ ابْنِ عُمَرَ: ” أَنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ “

قَالَتْ: وَهِلَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، كَمَا وَهِلَ يَوْمَ قَلِيبِ بَدْرٍ إِنَّمَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّهُ لَيُعَذَّبُ، وَأَهْلُهُ يَبْكُونَ عَلَيْهِ ” يَعْنِي الْكَافِرَ (2)


Musnad-Ahmad-24637

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24637.


«يَا ابْنَ أُخْتِي، إِنَّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ عُمَرَ أَخْطَأَ سَمْعُهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَجُلًا يُعَذَّبُ فِي قَبْرِهِ بِعَمَلِهِ، وَأَهْلُهُ يَبْكُونَ عَلَيْهِ، وَإِنَّهَا وَاللَّهِ مَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى»


Musnad-Ahmad-24495

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24495.


وَجَدْتُ هَذَا الْحَدِيثَ فِي كِتَابِ أَبِي بِخَطِّ يَدِهِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ وَهُوَ الْعَيْشِيُّ قَالَ: أَخْبَرَنَا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهِ، وَإِنَّهُ لَيُعَذَّبُ فِي قَبْرِهِ بِذَنْبِهِ»


Next Page » « Previous Page