Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-24373

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

24373. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குறைஷிகளில் ஒரு இறைமறுப்பாளர் மரணித்துவிட்டால் அவரின் குடும்பத்தினர் அவருக்காக அழுதுக்கொண்டு அவரைப் பற்றி இவர் உணவழிப்பவர் ஆயிற்றே; இவர் விருந்தாளியை உபசரிப்பவர் ஆயிற்றே; இவர் வீரர் ஆயிற்றே என்று (இன்னபிற வார்த்தைகளைக்) கூறுவர். அவர்கள் அவ்வாறு கூறுவதால் அல்லாஹ் அவர்களுக்கு தண்டனையை மேலும் அதிகப்படுத்துகிறான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 


كَانَ الْكَافِرُ مِنْ كُفَّارِ قُرَيْشٍ يَمُوتُ فَيَبْكِيهِ أَهْلُهُ فَيَقُولُونَ: الْمُطْعِمُ، الْجِفَانَ، الْمُقَاتِلُ، الَّذِي فَيَزِيدُهُ اللَّهُ عَذَابًا بِمَا يَقُولُونَ


Musnad-Ahmad-24302

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24302. உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என நபி ஸல் அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அபூஅப்துர் ரஹ்மான் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி – ஸல் – அவர்கள் அப்படிச் சொல்லவில்லை), ‘இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த சிறிய, பெரிய) பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரின் குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்’ என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


قِيلَ لَهَا: إِنَّ ابْنَ عُمَرَ يَرْفَعُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ» ، قَالَتْ: وَهِلَ أَبُوعَبْدِ الرَّحْمَنِ إِنَّمَا قَالَ: «إِنَّ أَهْلَ الْمَيِّتِ يَبْكُونَ عَلَيْهِ، وَإِنَّهُ لَيُعَذَّبُ بِجُرْمِهِ»


Musnad-Ahmad-290

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

290. ஹதீஸ் எண்-288 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில் இடம்பெறும் வாக்கிய அமைப்பு:

அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய புதல்வியார் இறந்தபோது, அங்கு இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் வருகை தந்தனர். நான் அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தேன்.

(அப்போது வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது). உடனே “இப்னு உமர் (ரலி) அவர்கள் அம்ரிடம் “(நீங்கள் எழுந்து சென்று, அவர்களை அழவேண்டாம் எனத் தடை செய்யுங்கள்” என்று கூறிவிட்டு), “குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று கூறியதாக உள்ளது.

மற்றவை இஸ்மாயீல் —> அய்யூப் —> இப்னு அப்துல்லாஹ் என்ற அறிவிப்பாளர்தொடரில் உள்ளது போன்று உள்ளது.


تُوُفِّيَتِ ابْنَةٌ لِعُثْمَانَ بْنِ عَفَّانَ بِمَكَّةَ فَحَضَرَهَا ابْنُ عُمَرَ، وَابْنُ عَبَّاسٍ وَإِنِّي لَجَالِسٌ بَيْنَهُمَا، فَقَالَ ابْنُ عُمَرَ لِعَمْرِو بْنِ عُثْمَانَ وَهُوَ مُوَاجِهُهُ: أَلا تَنْهَى عَنِ الْبُكَاءِ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»

فَذَكَرَ نَحْوَ حَدِيثِ إِسْمَاعِيلَ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ


Musnad-Ahmad-289

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

289. ஹதீஸ் எண்-288 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் “இப்னு உமர் (ரலி) அவர்கள் அம்ரிடம் “(நீங்கள் எழுந்து சென்று, அவர்களை அழவேண்டாம் எனத் தடை செய்யுங்கள்” என்று கூறிவிட்டு), “குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.


فَذَكَرَ مَعْنَى حَدِيثِ أَيُّوبَ إِلَّا أَنَّهُ – قَالَ: فَقَالَ ابْنُ عُمَرَ لِعَمْرِو بْنِ عُثْمَانَ وَهُوَ مُوَاجِهُهُ: أَلا تَنْهَى عَنِ الْبُكَاءِ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»


Musnad-Ahmad-4959

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4959. குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) கூறினார் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆயிஷா (ரலி), ‘(நபி – ஸல் – அவர்கள் அப்படிச் சொல்லவில்லை). இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மண்ணறையை கடந்து சென்றபோது, “இதில் அடக்கம்செய்யப்பட்டவர் வேதனைசெய்யப்படுகிறார்; அவரின் குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்” என்றே கூறினார்கள் என்று கூறிவிட்டு ‘ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது’ (திருக்குர்ஆன் 6:164) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


«إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ» فَذُكِرَ ذَلِكَ لِعَائِشَةَ، فَقَالَتْ: وَهِلَ – يَعْنِي ابْنَ عُمَرَ – إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرٍ فَقَالَ: «إِنَّ صَاحِبَ هَذَا لَيُعَذَّبُ وَأَهْلُهُ يَبْكُونَ عَلَيْهِ» ، ثُمَّ قَرَأَتْ هَذِهِ الْآيَةَ: {وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [الأنعام: 164]


Musnad-Ahmad-26180

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

26180. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதப் பெண்ணின் பிரேதத்தைக் கடந்துசென்றார்கள். அவளுக்காகச் சிலர் அழுதுகொண்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் இவளுக்காக அழுகின்றனர். இவளோ தனது சவக்குழியில் வேதனை செய்யப்படுகிறாள்” என்றுதான் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ரா பின்த் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى يَهُودِيَّةٍ يُبْكَى عَلَيْهَا، فَقَالَ: «إِنَّكُمْ لَتَبْكُونَ عَلَيْهَا وَإِنَّهَا، لَتُعَذَّبُ فِي قَبْرِهَا»


Musnad-Ahmad-24758

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24758. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ், அபூஅப்துர் ரஹ்மானை மன்னிப்பானாக! அவர் நிச்சயமாக பொய்யுரைக்கவில்லை; எனினும், அவர் மறந்திருக்கலாம். அல்லது தவறாக விளங்கியிருக்கலாம்; (நடந்தது இதுதான்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதப் பெண்ணின் பிரேதத்தைக் கடந்துசென்றார்கள். அவளுக்காகச் சிலர் அழுதுகொண்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இவர்கள் இவளுக்காக அழுகின்றனர். இவளோ தனது சவக்குழியில் வேதனை செய்யப்படுகிறாள்” என்றுதான் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.


وَذُكِرَ لَهَا أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ: إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ، فَقَالَتْ عَائِشَةُ: يَغْفِرُ اللَّهُ لِأَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَمَا إِنَّهُ لَمْ يَكْذِبْ، وَلَكِنَّهُ نَسِيَ، أَوْ أَخْطَأَ، إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى يَهُودِيَّةٍ يُبْكَى عَلَيْهَا، فَقَالَ: «إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا، وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا»


Musnad-Ahmad-5262

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5262. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒப்பாரி வைப்பதால் இறந்துபோனவர் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«مَنْ يُنَحْ عَلَيْهِ، فَإِنَّهُ يُعَذَّبُ بِمَا نِيحَ عَلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ»


Musnad-Ahmad-6182

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6182. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ»


Musnad-Ahmad-26409

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

26409. குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தகவல் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கிடைத்தது. அப்போது அவர்கள், அல்லாஹ் உமருக்கும், இப்னு உமருக்கும் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவ்விருவரும் பொய்யுரைப்பவர்களுமல்ல; பொய்பிக்கப்படுபவர்களும் அல்ல; (ஹதீஸ்களில்) கூடுதல் செய்பவர்களுமல்ல. (நடந்தது இதுதான்:)  ஒரு யூதரின் மரணத்திற்காக அவரின் குடும்பத்தினர் அழுது கொண்டிருக்கும் போது அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்துசென்றார்கள். அப்போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர்கள் இவருக்காக அழுகின்றனர். இவரோ தனது சவக்குழியில் வேதனை செய்யப்படுகிறார்” என்று கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: காஸிம் பின் முஹம்மத் (ரஹ்)


أَنَّهُ بَلَغَهَا أَنَّ ابْنَ عُمَرَ يُحَدِّثُ عَنْ أَبِيهِ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ» ، فَقَالَتْ: يَرْحَمُ اللَّهُ عُمَرَ، وَابْنَ عُمَرَ، فَوَاللَّهِ مَا هُمَا بِكَاذِبَيْنِ وَلَا مُكَذَّبَيْنِ وَلَا مُتَزَيِّدَيْنِ، إِنَّمَا قَالَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَجُلٍ مِنَ الْيَهُودِ، وَمَرَّ بِأَهْلِهِ وَهُمْ يَبْكُونَ عَلَيْهِ، فَقَالَ: «إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهِ وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيُعَذِّبُهُ فِي قَبْرِهِ»


Next Page » « Previous Page