Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-4865

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4865. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு அடக்கத்தலத்தை கடந்து சென்றார்கள். அப்போது இதன் குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக இந்த மய்யித்திற்கு வேதனை கொடுக்கப்படுகிறது என்று கூறினார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்.

(இதை ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் அபூஅப்துர்ரஹ்மான் (இப்னு உமர்-ரலி) அவர்களை மன்னிப்பானாக! அவர் தவறாக விளங்கிக்கொண்டார்; ‘ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது’ (திருக்குர்ஆன் 6:164) என்று அல்லாஹ் கூறுகிறான் என்று கூறிவிட்டு, இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த சிறிய, பெரிய) பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரின் குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்’ என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرٍ فَقَالَ: «إِنَّ هَذَا لَيُعَذَّبُ الْآنَ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ» فَقَالَتْ عَائِشَةُ: غَفَرَ اللَّهُ لِأَبِي عَبْدِ الرَّحْمَنِ إِنَّهُ وَهِلَ، إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ: {وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ [ص:471] أُخْرَى} [الأنعام: 164] ، إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذَا لَيُعَذَّبُ الْآنَ وَأَهْلُهُ يَبْكُونَ عَلَيْهِ»


Musnad-Ahmad-25079

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25079. இறந்தவருக்காக உயிருள்ளவர் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் (கப்று) வேதனை செய்யப்படுகிறார்” (என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என) ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், இறைமறுப்பாளர் விசயத்தில் தான் இவர் (இறைமறுப்பின் காரணத்தால்) வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தாரோ, இப்போது அவருக்காக அழுதுகொண்டிருக்கின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உபைதுல்லாஹ் (ரஹ்)


ذُكِرَ لَهَا: أَنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ، فَقَالَتْ: إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَجُلٍ كَافِرٍ: «إِنَّهُ لَيُعَذَّبُ وَأَهْلُهُ يَبْكُونَ عَلَيْهِ»


Musnad-Ahmad-288

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

288. அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் பின் அபூமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (மக்காவில்) இப்னு உமர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது நாங்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் புதல்வியார் உம்மு அபான் அவர்களது ஜனாஸாவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் உஸ்மான் (ரலி) அவர்களுடைய புதல்வர் அம்ரும் இருந்தார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்களை ஒருவர் கைத்தாங்கலாக அழைத்துவந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைக் காட்டினார். உடனே அவர்கள் வந்து எனக்குப் பக்கத்தில் அமர்ந்தார்கள். நான் அவர்கள் இருவருக்குமிடையே இருந்தேன். அப்போது வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது. உடனே இப்னு உமர் (ரலி) “குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் (“இறந்தவர் இறைமறுப்பாளராக இருந்தால்” என்று குறிப்பிட்டுச் சொல்லாமல்) பொதுப்படையாக (“இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என்று) தான் கூறினார்கள்.

உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

நாங்கள் (ஒரு பயணத்தில்) இறைநம்பிக்கையார்களின் தலைவர் உமர் பின் அல்கத்தாப்

كُنْتُ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَنَحْنُ نَنْتَظِرُ جَنَازَةَ أُمِّ أَبَانَ ابْنَةِ عُثْمَانَ بْنِ عَفَّانَ، وَعِنْدَهُ عَمْرُو بْنُ عُثْمَانَ، فَجَاءَ ابْنُ عَبَّاسٍ يَقُودُهُ قَائِدُهُ، قَالَ: فَأُرَاهُ أَخْبَرَهُ بِمَكَانِ ابْنِ عُمَرَ، فَجَاءَ حَتَّى جَلَسَ إِلَى جَنْبِي، وَكُنْتُ بَيْنَهُمَا فَإِذَا صَوْتٌ مِنَ الدَّارِ فَقَالَ ابْنُ عُمَرَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ» فَأَرْسَلَهَا عَبْدُ اللَّهِ مُرْسَلَةً

قَالَ ابْنُ عَبَّاسٍ: كُنَّا مَعَ أَمِيرِ الْمُؤْمِنِينَ عُمَرَ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ إِذَا هُوَ بِرَجُلٍ نَازِلٍ فِي ظِلِّ شَجَرَةٍ، فَقَالَ لِي: انْطَلِقْ فَاعْلَمْ مَنْ ذَاكَ، فَانْطَلَقْتُ فَإِذَا هُوَ صُهَيْبٌ، فَرَجَعْتُ إِلَيْهِ فَقُلْتُ: إِنَّكَ أَمَرْتَنِي أَنْ أَعْلَمَ لَكَ مَنْ ذَاكَ وَإِنَّهُ صُهَيْبٌ، فَقَالَ: مُرُوهُ فَلْيَلْحَقْ بِنَا، فَقُلْتُ: إِنَّ مَعَهُ أَهْلَهُ، قَالَ: وَإِنْ كَانَ مَعَهُ أَهْلُهُ – وَرُبَّمَا قَالَ أَيُّوبُ مَرَّةً: فَلْيَلْحَقْ بِنَا – فَلَمَّا بَلَغْنَا الْمَدِينَةَ لَمْ يَلْبَثْ أَمِيرُ الْمُؤْمِنِينَ أَنْ أُصِيبَ، فَجَاءَ صُهَيْبٌ فَقَالَ: وَا أَخَاهُ وَا صَاحِبَاهُ، فَقَالَ عُمَرُ: أَلَمْ تَعْلَمْ أَوَلَمْ تَسْمَعْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبَعْضِ بُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ» ، فَأَمَّا عَبْدُ اللَّهِ فَأَرْسَلَهَا مُرْسَلَةً، وَأَمَّا عُمَرُ فَقَالَ: بِبَعْضِ بُكَاءِ

فَأَتَيْتُ عَائِشَةَ، فَذَكَرْتُ لَهَا قَوْلَ عُمَرَ، فَقَالَتْ: لَا وَاللَّهِ مَا قَالَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَحَدٍ» وَلَكِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْكَافِرَ لَيَزِيدُهُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِبُكَاءِ أَهْلِهِ عَذَابًا» ، وَإِنَّ اللَّهَ لَهُوَ أَضْحَكَ وَأَبْكَى، {وَلا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [الأنعام: 164] قَالَ أَيُّوبُ: وَقَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ: حَدَّثَنِي الْقَاسِمُ، قَالَ: لَمَّا بَلَغَ عَائِشَةَ قَوْلُ عُمَرَ وَابْنِ عُمَرَ، قَالَتْ: إِنَّكُمْ لَتُحَدِّثُونِي عَنْ غَيْرِ كَاذِبَيْنِ، وَلا مُكَذَّبَيْنِ وَلَكِنَّ السَّمْعَ يُخْطِئُ


Musnad-Ahmad-24115

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24115. அபூபக்ர் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் இறந்தபோது, “உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன். இதை நான் அம்ரா பின்த் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் சென்று தெரிவித்தேன்.

அப்போது அவர்கள் இதைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதப் பெண்ணின் விசயத்தில் தான், “நீங்களோ அவளுக்காக அழுகின்றீர்கள்! அவளோ தனது சவக்குழியில் வேதனை செய்யப்படுகிறாள்” என்று கூறினார்கள் என்று கூறிவிட்டு ‘ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது’ (திருக்குர்ஆன் 6:164) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.


سَمِعَ ابْنَ عُمَرَ، حِينَ مَاتَ رَافِعُ بْنُ خَدِيجٍ: إِنَّ بُكَاءَ الْحَيِّ عَلَى الْمَيِّتِ عَذَابٌ لِلْمَيِّتِ، فَأَتَيْتُ عَمْرَةَ فَذَكَرْتُ ذَلِكَ لَهَا، فَقَالَتْ: قَالَتْ عَائِشَةُ: إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَهُودِيَّةٍ: ” إِنَّكُمْ لَتَبْكُونَ عَلَيْهَا، وَإِنَّهَا لَتُعَذَّبُ، وَقَرَأَتْ: {وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [الأنعام: 164]


Musnad-Ahmad-13181

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13181. அப்துர்ரஹ்மான் பின் வர்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், மதீனாவாசிகளின் ஒரு கூட்டத்தில் சேர்ந்து அனஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் அந்தக் கூட்டத்தினரிடம், “நீங்கள் அஸர் தொழுகை தொழுதுவிட்டீர்களா? என்று கேட்க அவர்கள், “ஆம்” (தொழுது விட்டோம்) என்று பதிலளித்தனர். நாங்கள் அல்லாஹ் உங்களை சீர்படுத்துவானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அஸர் தொழுகையை எப்போது தொழுவார்கள் ? என்று கேட்டோம். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் (வானில்) வெண்மையாக, தெளிவாக இருக்கும் போது அஸர் தொழுவார்கள்” என்று பதிலளித்தார்.


دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فِي رَهْطٍ مِنْ أَهْلِ الْمَدِينَةِ، قَالَ: صَلَّيْتُمْ يَعْنِي – الْعَصْرَ -؟ قَالُوا: نَعَمْ، قُلْنَا أَخْبِرْنَا أَصْلَحَكَ اللَّهُ، مَتَى كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي هَذِهِ الصَّلَاةَ؟ قَالَ: «كَانَ يُصَلِّيهَا وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ»


Musnad-Ahmad-13434

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13434. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுகை நடத்துவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாகவும், வட்டமாகவும் (உயர்ந்தே) இருக்கும்.

நான் மதீனாவின் (கடைசி) ஓரத்தில் இருக்கும் எனது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் செல்லும் போது அவர்கள் அமர்ந்திருப்பதைக் காண்பேன். அவர்களிடம், “நீங்கள் எழுந்து தொழுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டார்கள்” என்று கூறுவேன்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِنَا الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُحَلِّقَةٌ، ثُمَّ أَرْجِعُ إِلَى قَوْمِي وَهُمْ فِي نَاحِيَةِ الْمَدِينَةِ، فَأَجِدُهُمْ جُلُوسًا، فَأَقُولُ لَهُمْ: قُومُوا فَصَلُّوا، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ صَلَّى


Musnad-Ahmad-12912

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12912. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுகை நடத்துவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாகவும், வட்டமாகவும் (உயர்ந்தே) இருக்கும்.

நான் மதீனாவின் (கடைசி) ஓரத்தில் இருக்கும் எனது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டார்கள். எனவே நீங்கள் எழுந்து தொழுங்கள்! என்று கூறுவேன்.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُحَلِّقَةٌ،

فَأَرْجِعُ إِلَى أَهْلِي، وَعَشِيرَتِي مِنْ نَاحِيَةِ الْمَدِينَةِ، فَأَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ صَلَّى، فَقُومُوا فَصَلُّوا


Musnad-Ahmad-12726

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12726. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுகை நடத்துவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாகவும், வட்டமாகவும் (உயர்ந்தே) இருக்கும்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُحَلِّقَةٌ»


Musnad-Ahmad-12331

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12331. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுகை நடத்துவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாகவும், வட்டமாகவும் (உயர்ந்தே) இருக்கும்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْعَصْرَ، وَالشَّمْسُ بَيْضَاءُ مُحَلِّقَةٌ»


Musnad-Ahmad-13331

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13331. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகை தொழுவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாக இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும்போது ஏற்படும் நிறமாற்றம் ஏற்படாமல்) தெளிவாகவே இருக்கும். (அஸர் தொழுதுவிட்டு மதீனாவை அடுத்திருக்கும்) மேட்டுப் பகுதி (கிராமங்)களுக்குச் செல்பவர் அங்கு சென்று சேரும்போதும் சூரியன் உயர்ந்தே இருக்கும்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي، فَيَأْتِي الْعَوَالِيَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»


Next Page » « Previous Page