Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-13272

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13272. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகை தொழுவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாக இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும்போது ஏற்படும் நிறமாற்றம் ஏற்படாமல்) தெளிவாகவே இருக்கும். (அஸர் தொழுதுவிட்டு மதீனாவை அடுத்திருக்கும்) மேட்டுப் பகுதி (கிராமங்)களுக்குச் செல்பவர் அங்கு சென்று சேரும்போதும் சூரியன் உயர்ந்தே இருக்கும்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ حَيَّةٌ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي فَيَأْتِيهَا وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»


Musnad-Ahmad-13235

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13235. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகை தொழுவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாக இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும்போது ஏற்படும் நிறமாற்றம் ஏற்படாமல்) தெளிவாகவே இருக்கும். (அஸர் தொழுதுவிட்டு மதீனாவை அடுத்திருக்கும்) மேட்டுப் பகுதி (கிராமங்)களுக்குச் செல்பவர் அங்கு சென்று சேரும்போதும் சூரியன் உயர்ந்தே இருக்கும்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ حَيَّةٌ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى العَوَالِي فَيَأْتِيهَا وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»


Musnad-Ahmad-12644

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12644. சூரியன் உயரத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். மேட்டுப் பாங்கான பகுதிக்குச் செல்பவர் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மஃமர் கூறினார்:

சில மேட்டுப் பாங்கான பகுதிகள் மதீனாவிலிருந்து மூன்று அல்லது நான்கு மைல் அளவு தூரத்தில் அமைந்திருந்தன என்று ஸுஹ்ரீ இமாம் கூறினார்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»

قَالَ الزُّهْرِيُّ: ” وَالْعَوَالِي عَلَى مِيلَيْنِ مِنَ الْمَدِينَةِ وَثَلَاثَةٍ – أَحْسَبُهُ قَالَ: وَأَرْبَعَةٍ –


Musnad-Ahmad-6922

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6922. உமர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமையான ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கும் அன்பஸா பின் அபீசுஃப்யான் அவர்களுக்குமிடையே (ஒரு வாய்க்கால் தொடர்பாக) பிரச்சினை ஏற்பட்டு சண்டை மூளும் நிலை ஏற்பட்டது. அப்போது காலித் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் புறப்பட்டுவந்து அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “தமது செல்வத்தை காப்பதற்காக போராடிய போது ஒருவர் கொல்லப்பட்டுவிட்டால் அவர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள்.

(அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் அறிவிப்பில் ஹதீஸின் வார்த்தை சிறிது மாற்றமாக வந்துள்ளது)


أَنَّهُ لَمَّا كَانَ بَيْنَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وعَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ مَا كَانَ، وَتَيَسَّرُوا لِلْقِتَالِ، فَرَكِبَ خَالِدُ بْنُ الْعَاصِي إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، فَوَعَظَهُ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو: أَمَا عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»

وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ: «مَنْ قُتِلَ عَلَى مَالِهِ فَهُوَ شَهِيدٌ»


Musnad-Ahmad-7055

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7055. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக (போராடும் போது) அநியாயமாகக் கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ مَظْلُومًا فَهُوَ شَهِيدٌ»


Musnad-Ahmad-6522

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6522. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக (போராடும் போது) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»


Musnad-Ahmad-6913

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6913. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கு சொந்தமான வஹ்த் என்ற நிலத்தை எடுத்துக்கொள்ள முஆவியா (ரலி) அவர்கள் விரும்பினார். உடனே அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், தனது அடிமைகளுக்கு (சண்டைக்கு வர) ஆணையிட்டு ஆயுதம் தரித்தவர்களாக சண்டையிட தயாரானார்கள். நான் இதைக் கேள்விபட்டு அவர்களிடம் சென்று, “என்ன இது? என்று கேட்டேன். அதற்கு, ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் ஒரு அநியாயமிழைக்கப்பட்டு அதற்காக அவர் போராடி அதில் கொல்லப்பட்டால் அவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: மக்ஸூம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் தந்தைவழி சகோதரர்.


أَنَّ مُعَاوِيَةَ أَرَادَ أَنْ يَأْخُذَ أَرْضًا لِعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو يُقَالُ لَهَا: الْوَهْطُ، فَأَمَرَ مَوَالِيَهُ، فَلَبِسُوا آلَتَهُمْ، وَأَرَادُوا الْقِتَالَ، قَالَ: فَأَتَيْتُهُ، فَقُلْتُ: مَاذَا؟ فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ مُسْلِمٍ يُظْلَمُ بِمَظْلَمَةٍ فَيُقَاتِلَ فَيُقْتَلَ إِلَّا قُتِلَ شَهِيدًا»


Musnad-Ahmad-7030

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7030. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக (போராடும் போது) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»


Musnad-Ahmad-7014

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7014. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக (போராடும் போது) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«الْمَقْتُولُ دُونَ مَالِهِ شَهِيدٌ»


Musnad-Ahmad-6956

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6956. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக (போராடும் போது) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«الْقَتِيلُ دُونَ مَالِهِ شَهِيدٌ»


Next Page » « Previous Page