Category: முஸ்னத் அஹ்மத்
Musnad-Ahmad
Musnad-Ahmad-6829
6829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வத்தை நியாமின்றி அடைவதற்காக (மற்றொருவரால்) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஹஸன் கூறுகிறார்:
இந்த செய்தியை போன்றே அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் அல்அஃரஜ் அவர்களும் எனக்கு அறிவித்தார் என்று எண்ணுகிறேன்.
«مَنْ أُرِيدَ مَالُهُ بِغَيْرِ حَقٍّ، فَقَاتَلَ فَقُتِلَ، فَهُوَ شَهِيدٌ»
وَأَحْسِبُ الْأَعْرَجَ، حَدَّثَنِي، عَنْ أَبِي هُرَيْرَةَ مِثْلَهُ
Musnad-Ahmad-6823
6823. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வத்தை நியாமின்றி அடைவதற்காக (மற்றொருவரால்) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
«مَنْ أُرِيدَ مَالُهُ بِغَيْرِ حَقٍّ، فَقُتِلَ دُونَهُ، فَهُوَ شَهِيدٌ»
Musnad-Ahmad-6816
6816. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வத்தை நியாமின்றி அடைவதற்காக (மற்றொருவரால்) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
«مَنْ أُرِيدَ مَالُهُ بِغَيْرِ حَقٍّ، فَقُتِلَ دُونَهُ، فَهُوَ شَهِيدٌ»
Musnad-Ahmad-7084
7084. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது அநியாயமாகக் கொல்லப்பட்டவருக்கு சொர்க்கம் கிடைக்கும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ مَظْلُومًا فَلَهُ الْجَنَّةُ»
Musnad-Ahmad-1633
1633. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு பூமிகளாக மறுமை நாளில் அது (வளையமாக) மாட்டப்படும்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
«مَنْ أخَذَ شِبْرًا مِنَ الأَرْضِ ظُلْمًا، طُوِّقَهُ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ»
قَالَ ابْنُ نُمَيْرٍ: «مِنْ سَبْعِ أَرَضِينَ»
Musnad-Ahmad-1649
1649. அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மர்வான் அவர்கள், (ஸயீத் பின் ஸைத் (ரலி) அவர்களின் வீட்டின் ஒரு பகுதியின் விசயத்தில்) ஸயீத் பின் ஸைத் (ரலி) அவர்களுக்கும், அர்வா பின்த் உவைஸ் என்ற பெண்ணுக்கும் இடையில் உள்ள பிரச்சனையை சரிசெய்யுங்கள் என்று எங்களிடம் கூறி அனுப்பினார். நாங்கள் ஸயீத் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் விசாரிக்க வந்த போது, ஸயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் “நான் அந்தப்பெண்ணிற்குரிய பங்கை எடுத்துக்கொண்டேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? என்று கூறிவிட்டு, பின்வருமாறு கூறினார்:
“யார் நியாயமின்றி (பிறருக்குச் சொந்தமான) ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்; யார் ஒரு கூட்டத்திற்கு அவர்களின் அனுமதியின்றி பொறுப்பேற்கின்றாரோ அவரின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்; யார் பொய் சத்தியத்தின் மூலம் (முஸ்லிமான) தன் சகோதரனின் செல்வத்தை அபகரிக்கின்றாரோ அவரின் செல்வத்தில் அல்லாஹ் பரக்கத் அளிக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்று சாட்சி கூறுகிறேன் என்று கூறினார்.
قَالَ لَنَا مَرْوَانُ: انْطَلِقُوا، فَأَصْلِحُوا بَيْنَ هَذَيْنِ سَعِيدِ بْنِ زَيْدٍ، وَأَرْوَى بِنْتِ أُوَيْسٍ، فَأَتَيْنَا سَعِيدَ بْنَ زَيْدٍ، فَقَالَ: أَتُرَوْنَ أَنِّي قَدِ انْتَقََصْتُ مِنْ حَقِّهَا شَيْئًا؟ أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنِ أخَذَ شِبْرًا مِنَ الأَرْضِ بِغَيْرِ حَقِّهِ، طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ، وَمَنْ تَوَلَّى قَوْمًا بِغَيْرِ إِذْنِهِمْ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ، وَمَنِ اقْتَطَعَ مَالَ أَخِيهِ بِيَمِينِهِ، فَلا بَارَكَ اللَّهُ لَهُ فِيهِ»
Musnad-Ahmad-1640
1640. அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மர்வான் அவர்கள், (ஸயீத் பின் ஸைத் (ரலி) அவர்களின் வீட்டின் ஒரு பகுதியின் விசயத்தில்) ஸயீத் பின் ஸைத் (ரலி) அவர்களுக்கும், அர்வா பின்த் உவைஸ் என்ற பெண்ணுக்கும் இடையில் உள்ள பிரச்சனையை சரிசெய்யுங்கள் என்று எங்களை அனுப்பினார். நாங்கள், ஸயீத் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் விசாரிக்க வந்த போது, ஸயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் “நான் அந்தப்பெண்ணிற்குரிய பங்கை எடுத்துக்கொண்டேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? என்று கூறிவிட்டு, பின்வருமாறு கூறினார்:
“யார் நியாயமின்றி (பிறருக்குச் சொந்தமான) ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்; யார் ஒரு கூட்டத்தின் அடிமையிடம் அவர்களின் அனுமதியின்றி வேலை வாங்குகின்றாரோ அவரின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்; யார் பொய் சத்தியத்தின் மூலம் ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிக்கின்றாரோ அவரின் செல்வத்தில் அல்லாஹ் பரக்கத் அளிக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்று சாட்சி கூறுகிறேன் என்று கூறினார்.
اذْهَبُوا فَأَصْلِحُوا بَيْنَ هَذَيْنِ لِسَعِيدِ بْنِ زَيْدٍ وَأَرْوَى، فَقَالَ سَعِيدٌ: أَتُرَوْنِي أَخَذْتُ مِنْ حَقِّهَا شَيْئًا؟ أَشْهَدُ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنِ أخَذَ مِنَ الأَرْضِ شِبْرًا بِغَيْرِ حَقِّهِ، طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ. وَمَنْ تَوَلَّى مَوْلَى قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ. وَمَنِ اقْتَطَعَ مَالَ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينٍ، فَلا بَارَكَ اللَّهُ لَهُ فِيهَا»
Musnad-Ahmad-1646
1646. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
«مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا، فَإِنَّهُ يُطَوَّقُهُ فِي سَبْعِ أَرَضِينَ»
Musnad-Ahmad-1643
1643. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
«مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا فَإِنَّهُ، يُطَوَّقُهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»
சமீப விமர்சனங்கள்