தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6829

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செல்வத்தை நியாமின்றி அடைவதற்காக (மற்றொருவரால்) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஹஸன் கூறுகிறார்:

இந்த செய்தியை போன்றே அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் அல்அஃரஜ் அவர்களும் எனக்கு அறிவித்தார் என்று எண்ணுகிறேன்.

(முஸ்னது அஹ்மத்: 6829)

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«مَنْ أُرِيدَ مَالُهُ بِغَيْرِ حَقٍّ، فَقَاتَلَ فَقُتِلَ، فَهُوَ شَهِيدٌ»

وَأَحْسِبُ الْأَعْرَجَ، حَدَّثَنِي، عَنْ أَبِي هُرَيْرَةَ مِثْلَهُ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6829.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6649.



  • இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஹஸன் அவர்கள் இந்த செய்தியை போன்றே அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் அல்அஃரஜ் அவர்களும் எனக்கு அறிவித்தார் என்று எண்ணுகிறேன் என்று சந்தேகமாக அறிவித்திருந்தாலும் வேறு அறிவிப்பாளர்தொடரில் சந்தேகமின்றி அறிவித்துள்ளார் என்பதால் இதில் விமர்சனம் இல்லை என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    கூறியுள்ளார்…

மேலும் பார்க்க: புகாரி-2480 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.