Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-1641

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1641. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நியாயமின்றி (பிறருக்குச் சொந்தமான) ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شِبْرًا، فَإِنَّهُ يُطَوَّقُهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»


Musnad-Ahmad-1639

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1639. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு பூமிகளாக மறுமை நாளில் அது (வளையமாக) மாட்டப்படும்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மஃமர் (ரஹ்) அவர்கள் கூறினார்:

ஸுஹ்ரீ அவர்கள், இந்த செய்தியுடன், “யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்” என்ற செய்தியையும் கூடுதலாக அறிவித்தார் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. இதை நான் ஸுஹ்ரீ அவர்களிடம் நேரடியாக கேட்கவில்லை.


«مَنْ سَرَقَ مِنَ الأَرْضِ شِبْرًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»

قَالَ مَعْمَرٌ: وَبَلَغَنِي عَنِ الزُّهْرِيِّ، وَلَمْ أَسْمَعْهُ مِنْهُ زَادَ فِي هَذَا الْحَدِيثِ: «وَمَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»


Musnad-Ahmad-1628

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1628. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.

ஒரு சாண் அளவு நிலத்தை யார் அநியாயமாக அபகரிக்கிறாரோ, அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டுவான்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்:

ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை இவ்வாறே (இரண்டு பகுதியாக) நாங்கள் மனனமிட்டுள்ளோம்.


«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شِبْرًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»


Musnad-Ahmad-10842

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10842. உமர் பின் அதாஉ பின் அபுல்குவார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு நாள்) நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஸைத் பின் ஸப்பான் (ரஹ்) அவர்களுடைய மருமகன் அபூஅப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அன்னாரை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அழைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: “இமாமுடன் சேர்ந்து தொழுவதானது, தனியாகத் தொழும் இருபத்தைந்து தொழுகைகளை விடச் சிறந்தததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: இப்னு ஜுரைஜ் (ரஹ்)


أَنَّهُ بَيْنَا هُوَ جَالِسٌ مَعَ نَافِعِ بْنِ جُبَيْرٍ، إِذْ مَرَّ بِهِمْ أَبُو عَبْدِ اللَّهِ، خَتَنُ زَيْدِ بْنِ زَبَّانَ الْجُهَنِيِّ، فَدَعَاهُ نَافِعٌ، فَقَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «صَلَاةٌ مَعَ الْإِمَامِ أَفْضَلُ مِنْ خَمْسٍ وَعِشْرِينَ صَلَاةً يُصَلِّيهَا وَحْدَهُ»


Musnad-Ahmad-7695

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7695. உமர் பின் அதாஉ பின் அபுல்குவார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு நாள்) நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஸைத் பின் ஸப்பான் (ரஹ்) அவர்களுடைய மருமகன் அபூஅப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அன்னாரை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அழைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: “இமாமுடன் சேர்ந்து தொழுவதானது, தனியாகத் தொழும் இருபத்தைந்து தொழுகைகளை விடச் சிறந்தததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: இப்னு ஜுரைஜ் (ரஹ்)

அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் அறிவிப்பில், “ஸைத் பின் ஸப்பான் (ரஹ்) அவர்களுடைய மருமகன்” என்றும், இப்னு பக்ர் அவர்களின் அறிவிப்பில் “ஸைத் பின் ரய்யான் (ரஹ்) அவர்களுடைய மருமகன்” என்றும் இடம்பெற்றுள்ளது.


أَنَّهُ بَيْنَمَا هُوَ جَالِسٌ مَعَ نَافِعِ بْنِ جُبَيْرٍ، إِذْ مَرَّ بِهِمَا أَبُو عَبْدِ اللَّهِ خَتَنُ زَيْدِ بْنِ الرَّيَّانِ – وَقَالَ ابْنُ بَكْرٍ: ابْنِ الزَّبَّانِ – فَدَعَاهُ نَافِعٌ، فَقَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ مَعَ الْإِمَامِ أَفْضَلُ مِنْ خَمْسَةٍ وَعِشْرِينَ صَلَاةً يُصَلِّيهَا وَحْدَهُ»


Musnad-Ahmad-10798

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10798. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனியாகத் தொழுவதைவிட, கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تَفْضُلُ الصَّلَاةُ فِي جَمَاعَةٍ عَلَى صَلَاةِ الْفَذِّ، بِخَمْسٍ وَعِشْرِينَ صَلَاةً»


Musnad-Ahmad-9860

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9860. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தேழு அல்லது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تَفْضُلُ صَلَاةُ الْجَمَاعَةِ عَلَى صَلَاةِ الْوَحْدَةِ سَبْعًا وَعِشْرِينَ دَرَجَةً، أَوْ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً»


Musnad-Ahmad-8349

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8349. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனியாகத் தொழுவதை விட, கூட்டாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تَفْضُلُ صَلَاةُ الْجَمَاعَةِ عَلَى الْوَاحِدَةِ سَبْعًا وَعِشْرِينَ دَرَجَةً»


Musnad-Ahmad-10299

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10299. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை போன்றதாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர.

ஜமாஅத்தில் (ஒருவர்) தொழும் தொழுகை, தனித்து தொழுவதை விட இருபத்தைந்து தொழுகைகளுக்கு நிகரானதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا كَأَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ، وَصَلَاةُ الْجَمِيعِ تَعْدِلُ خَمْسًا وَعِشْرِينَ مِنْ صَلَاةِ الْفَذِّ»


Musnad-Ahmad-10155

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10155. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«صَلَاةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ، تَزِيدُ عَلَى صَلَاةِ الْفَذِّ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً»


Next Page » « Previous Page