Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-286

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

286. அல்லாஹ்வின் வேதத்தில் ஸஹ்யு என்ற வார்த்தைக்கு, செயல் தான் பொருளாகும். 2:205, 79:22, 80:8, 92:4 ஆகிய வசனங்களில் உள்ள ஸஹ்யு என்ற வார்த்தைக்குப் பொருள் செயல்பாடு தான். இதற்கு அல்லாஹ் தன் வேதத்தில் ஓடுவதையும், நடப்பதையும் குறிப்பிடவில்லை. அவன் கூறுவது செயல் முறையைத் தான் என மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


قَالَ مَالِكٌ: وَإِنَّمَا السَّعْيُ فِي كِتَابِ اللهِ الْعَمَلُ وَالْفِعْلُ، يَقُولُ اللهُ تَبَارَكَ وَتَعَالَى: {وإِذَا تَوَلَّى سَعَى فِي الأَرْضِ}، وَقَالَ تَعَالَى: {وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَى وَهُوَ يَخْشَى}، وَقَالَ: {ثُمَّ أَدْبَرَ يَسْعَى}، وَقَالَ: {إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى}، قَالَ مَالِكٌ: فَلَيْسَ السَّعْيُ الَّذِي ذَكَرَ اللهُ فِي كِتَابِهِ بِالسَّعْيِ عَلَى الأَقْدَامِ، وَلاَ الاِشْتِدَادَ، وَإِنَّمَا عَنَى الْعَمَلَ وَالْفِعْلَ.


Muwatta-Malik-288

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

288. ஜும்ஆ கடமையில்லாத ஒரு ஊருக்கு வந்த பிரயாணியான இமாம் ஜும்ஆ நடத்தினால் அவருக்கோ, அவ்வூர் வாசிகளுக்கோ, அவர்கள் அல்லாத மற்றவர்களுக்கோ ஜும்ஆ கடமையில்லை. அவ்வூர் வாசிகளும் பயணி என்ற நிலையில் இல்லாத மற்றவர்களும் லுஹர் தொழுகையை நிறைவேற்றட்டும் என்று மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


قَالَ مَالِكٌ: وَإِنْ جَمَّعَ الإِمَامُ وَهُوَ مُسَافِرٌ بِقَرْيَةٍ لاَ تَجِبُ فِيهَا الْجُمُعَةُ، فَلاَ جُمُعَةَ لَهُ، وَلاَ لأَهْلِ تِلْكَ الْقَرْيَةِ، وَلاَ لِمَنْ جَمَّعَ مَعَهُمْ مِنْ غَيْرِهِمْ، وَلْيُتَمِّمْ أَهْلُ تِلْكَ الْقَرْيَةِ وَغَيْرُهُمْ، مِمَّنْ لَيْسَ بِمُسَافِرٍ، الصَّلاَةَ.


Muwatta-Malik-289

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

289. பயணிக்கு ஜும்ஆ இல்லை என்று மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


قَالَ مَالِكٌ: وَلاَ جُمُعَةَ عَلَى مُسَافِرٍ.


Muwatta-Malik-290

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 66

ஜும்ஆ நாளில் உள்ள ஒரு குறிப்பிட்ட நேரம்

290. ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு. அந்த நேரத்தில் அல்லாஹ்விடம் ஏதேனும் கேட்டவனாக தொழுது கொண்டிருக்கும் ஒரு முஸ்லிமான அடியானுக்கு அவன் கேட்டதை கொடுத்த நிலையில் தான் அந்த நேரத்தை அவன் அடைந்து கொள்வான் என்று ஜும்ஆ வைப் பற்றி குறிப்பிடும் போது கூறிய நபி(ஸல்) அவர்கள், தன் கையினால் அந் நேரத்தை குறைந்த நேரம் எனக் குறிப்பிட்டு சமிக்ஞை செய்து கூறினார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிமிலும் உள்ளது).


أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ: فِيهِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي، يَسْأَلُ اللهَ شَيْئًا، إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ، وَأَشَارَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ بِيَدِهِ، يُقَلِّلُهَا.


Muwatta-Malik-295

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

295. இமாம் ஜும்ஆ நாளன்று பிரசங்கம் செய்யும் போது மக்களை அதாவது கிப்லாவை அடுத்து அமர்ந்திருப்போரையும், அதன் அடுத்து உள்ளோரையும் முன்னோக்கி இருத்தல் நபி வழியாகும் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: السُّنَّةُ عِنْدَنَا أَنْ يَسْتَقْبِلَ النَّاسُ الإِمَامَ يَوْمَ الْجُمُعَةِ، إِذَا أَرَادَ أَنْ يَخْطُبَ، مَنْ كَانَ مِنْهُمْ يَلِي الْقِبْلَةَ وَغَيْرَهَا.


Muwatta-Malik-329

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

329. ‘இரவின் ஆரம்பத்தில் ஒருவர் வித்ருத் தொழுது, பின்பு தூங்கி விட்டு, பின்பு எழுந்து, அவர் தொழத் துவங்கினால், இரண்டிரண்டாக அவர் தொழட்டும். இது தான் நான் கேள்விப்பட்டதிலே மிக விருப்பமானது’ என்று மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


قَالَ مَالِكٌ: مَنْ أَوْتَرَ أَوَّلَ اللَّيْلِ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ، فَبَدَا لَهُ أَنْ يُصَلِّيَ فَلْيُصَلِّ مَثْنَى مَثْنَى، فَهُوَ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ.


Muwatta-Malik-354

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

354. வீட்டில் தொழுது கொண்ட ஒருவர் இமாமுடன் சேர்ந்து மீண்டும் தொழுவது குற்றமில்லை என்றே கருதுகின்றேன். ஆனால் மஃக்ரிபுத் தொழுகையைத் தவிர, அதை மீண்டும் தொழுதால் அது இரட்டையாக ஆகி விடும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: وَلاَ أَرَى بَأْسًا أَنْ يُصَلِّيَ مَعَ الإِمَامِ مَنْ كَانَ قَدْ صَلَّى فِي بَيْتِهِ، إِلاَّ صَلاَةَ الْمَغْرِبِ، فَإِنَّهُ إِذَا أَعَادَهَا، كَانَتْ شَفْعًا.


Muwatta-Malik-377

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

377. தன் தோள் புஜங்களின் மீது ஒரு ஆடையாக அல்லது தலைப்பாகையாக ஒரே ஆடையில் தொழுவது என்பது எனக்கு விருப்பமானது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: أَحَبُّ إِلَيَّ أَنْ يَجْعَلَ الَّذِي يُصَلِّي فِي الْقَمِيصِ الْوَاحِدِ عَلَى عَاتِقَيْهِ ثَوْبًا أَوْ عِمَامَةً.


Muwatta-Malik-399

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

399. பயணத்தை விரும்புவர் தன் ஊரில் (எல்கையில் உள்ள) வீட்டைக் கடக்கும் வரை தொழுகையை ‘கஸ்ர்” செய்யவும் கூடாது. (இது போல்) தன் ஊரின் (எல்லையில் உள்ள) வீட்டில் ஒன்றைத் தூண்டவோ அல்லது நெருங்கவோ செய்யும் வரை பூர்த்தி செய்யவும் கூடாது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: لاَ يَقْصُرُ الَّذِي يُرِيدُ السَّفَرَ الصَّلاَةَ، حَتَّى يَخْرُجَ مِنْ بُيُوتِ الْقَرْيَةِ، وَلاَ يُتِمُّ حَتَّى يَدْخُلَ أَوَّلَ بُيُوتِ الْقَرْيَةِ أَوْ يُقَارِبَ ذَلِكَ.


Muwatta-Malik-403

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

403. கைதியின் தொழுகை பற்றி மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவன், ஊரில் தங்கி உள்ளவன் போலாவான். எனினும் அவன் பயணியாக இருந்தால் தவிர என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن صَلاَةِ الأَسِيرِ؟ فَقَالَ: مِثْلُ صَلاَةِ الْمُقِيمِ، إِلاَّ أَنْ يَكُونَ مُسَافِرًا.


Next Page » « Previous Page