12. மாலை நேரத்தில் லுஹரைத் மக்களைத் தொழுபவர்களாக நான் அடையாமல் இருந்ததில்லை என காஸிம் இப்னு முஹம்மத் கூறுகின்றார்கள்.
«مَا أَدْرَكْتُ النَّاسَ إِلَّا وَهُمْ يُصَلُّونَ الظُّهْرَ بِعَشِيٍّ»
12. மாலை நேரத்தில் லுஹரைத் மக்களைத் தொழுபவர்களாக நான் அடையாமல் இருந்ததில்லை என காஸிம் இப்னு முஹம்மத் கூறுகின்றார்கள்.
«مَا أَدْرَكْتُ النَّاسَ إِلَّا وَهُمْ يُصَلُّونَ الظُّهْرَ بِعَشِيٍّ»
582. அல்லாஹும்ம ஜ்அல்னீ மின் அ இம்மத்தில் முத்தகீன் என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
பொருள்: இறைவா! இறையச்சமுடைய தலைவர்களில் ஒருவராக என்னை ஆக்குவாயாக!
«اللَّهُمَّ اجْعَلْنِي مِنْ أَئِمَّةِ الْمُتَّقِينَ»
581. நேர்வழியை கேட்கும் ஒரு பிரார்த்தனையாளருக்கு, அதைப் பின்பற்றி நடப்போரின் கூலி போன்று கொடுக்கப்படாமல் இருப்பதில்லை. இதனால் இவர்களின் கூலியில் எதையும் அது குறைத்து விடாது. மேலும் வழிகேட்டை கேட்டும் ஒரு பிரார்த்தனையாளருக்கு அதன் குற்றங்கள் போன்று அவருக்கு கொடுக்கப்படாமல் இருப்பதில்லை. அவர்களின் குற்றச் சுமையிலிருந்து எதையும் அது குறைத்து விடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
«مَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى هُدًى، إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ مَنِ اتَّبَعَهُ. لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا. وَمَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى ضَلَالَةٍ، إِلَّا كَانَ عَلَيْهِ مِثْلُ أَوْزَارِهِمْ. لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا»
580. அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக ஃபிஹலல் கய்ராதி வ தர்கல் முன்கராதி, வஹுப்பல் மஸாகீனி, வ இஃதா அரத் தஃபின்னாஸி பித்னதன் ஃபக்பிழ்னி இலய்க அய்ர மஃப்தூனீன்”” என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திக்கும் போது கூறுவார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
பொருள்: இறைவா! நல்லதைச் செய்திடவும், கெட்டதை தவிர்த்திடவும், ஏழைகளிடம் அன்பு கொள்வதையும் உன்னிடம் கேட்கின்றேன். மக்களிடையே குழப்ப நிலையை நீ நாடினால் குழப்ப நிலையை அடையாதவனாக உன்னிடம் என்னை எடுத்துக் கொள்வாயாக!
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فَيَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ، وَتَرْكَ الْمُنْكَرَاتِ، وَحُبَّ الْمَسَاكِينِ، وَإِذَا أَرَدْتَ فِي النَّاسِ فِتْنَةً فَاقْبِضْنِي إِلَيْكَ غَيْرَ مَفْتُونٍ»
579. ”மேலும், உம் தொழுகையில் (அதிக) சப்தமிடாதீர். அதில் மெதுவாக ஓதாதீர். மேலும் இந்த இரண்டுக்குமிடையே ஒரு வழியை தேர்ந்தெடுப்பீராக”” (அல்குர்ஆன் 18:110) என்ற வசனம் இறக்கப்பட்டது. பிரார்த்தனை விஷயத்தில் தான் என்று தன் தந்தை உர்வா கூறியதாக ஹிஷாம் கூறுகின்றார்கள்.
கடமையான தொழுகையில் பிரார்த்தனை செய்வது பற்றி கேட்கப்பட்ட போது, ”அதில் பிரார்த்தனை செய்வதால் குற்றமில்லை என மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகின்றார்கள்.
إِنَّمَا أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ {وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا، وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا} [الإسراء: 110]، فِي الدُّعَاءِ “
قَالَ يَحْيَى: وَسُئِلَ مَالِكٌ عَنِ الدُّعَاءِ فِي الصَّلَاةِ الْمَكْتُوبَةِ؟ فَقَالَ: «لَا بَأْسَ بِالدُّعَاءِ فِيهَا»
576. பிரார்த்தனை செய்யும் எவருக்கும் மூன்றில் ஒன்று ஏற்படாமல் இருப்பதில்லை.அவரது பிரார்த்தனை ஏற்கப்படும். அல்லது அவரின் பிரார்த்தனையை ஏற்பது தாமதப்படுத்தப்படும் அல்லது அவாரின் பிரார்த்தனை நிராகரிக்கப்படக் கூடும் என்று ஸைத் இப்னு அஸ்லம் கூறுகின்றார்கள்.
مَا مِنْ دَاعٍ يَدْعُو، إِلَّا كَانَ بَيْنَ إِحْدَى ثَلَاثٍ: إِمَّا أَنْ يُسْتَجَابَ لَهُ، وَإِمَّا أَنْ يُدَّخَرَ لَهُ، وَإِمَّا أَنْ يُكَفَّرَ عَنْهُ
575. மதீனாவிற்கு அருகில் உள்ள பனூ முஆபியா குடியிருப்புப் பகுதியில் இருந்த எங்களிடம் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் வந்தார்கள். ”இந்த உங்களின் பள்ளிவாசலில் நபி(ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள் என்பதை அறிவீர்களா?”” என்று கேட்டார். அவரிடம் ‘ஆம்” என்றேன். மேலும் அதில் மூலைப் பகுதியை நான் காண்பித்தேன். ”இங்கே மூன்று விஷயங்களுக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்தித்ததை நீர் அறிவீரா?”” என்று கேட்டார். ‘ஆம்” என்றேன். ”அவற்றை எனக்குக் கூறு”” என்று கேட்டார்கள்;. ”முஸ்லிம்களை முஸ்லிம் அல்லாத எதிரி வெற்றி கொள்ளாமல் இருக்கவும், பஞ்சம், வெள்ளத்தால் அவர்கள் அழிக்கப்படாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்தார்கள். அவ்விரண்டையும் கொடுக்கப்பட்டார்கள். மேலும் அவர்களுக்கிடையே பிணக்கு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தார்கள். ஆனால் அது ஏற்கப்படவில்லை என்று கூறினேன். ”நீர் உண்மை கூறினீர்”” என்று கூறிய இப்னு உமர்(ரலி) அவர்கள், ”மறுமை நாள் வரை குழப்பம் (பிணக்கு) தொடரும்”” என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜாபிர் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
جَاءَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فِي بَنِي مُعَاوِيَةَ، وَهِيَ قَرْيَةٌ مِنْ قُرَى الْأَنْصَارِ، فَقَالَ: هَلْ تَدْرُونَ أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَسْجِدِكُمْ هَذَا؟ فَقُلْتُ لَهُ: نَعَمْ، وَأَشَرْتُ لَهُ إِلَى نَاحِيَةٍ مِنْهُ. فَقَالَ: هَلْ تَدْرِي مَا الثَّلَاثُ الَّتِي دَعَا بِهِنَّ فِيهِ؟ فَقُلْتُ: نَعَمْ، قَالَ: فَأَخْبِرْنِي بِهِنَّ. فَقُلْتُ: «دَعَا بِأَنْ لَا يُظْهِرَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ. وَلَا يُهْلِكَهُمْ بِالسِّنِينَ. فَأُعْطِيَهُمَا. وَدَعَا بِأَنْ لَا يَجْعَلَ بَأْسَهُمْ بَيْنَهُمْ. فَمُنِعَهَا» قَالَ: صَدَقْتَ، قَالَ ابْنُ عُمَرَ فَلَنْ يَزَالَ الْهَرْجُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ
574. நபி(ஸல்) அவர்கள் இரவின் ஒரு பகுதியில் தொழத் தயாரானார்கள். அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த நூருஸ் ஸமாவாத்தி வல் அர்ழி, வலகல் ஹம்து, அன்த கய்யாமுஸ் ஸமாவாத்தி வல் அர்ழி, வலகல் ஹம்து, அன்த ரப்புஸ் ஸமாவாத்தி வல் அர்ழி வமன் ஃபீஹின்ன, அன்தல் ஹக்கு, வ கவ்லுகல் ஹக்கு, வ வஹ்துகல் ஹக்கு, வலிகாஉக ஹக்குன் வல் ஜன்னத்த ஹக்கு, வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅது ஹக்குன், அல்லாஹும்ம லக்கல் ஹம்து, வபிக ஆமன்து, வஅலய்க தவக்கல்து, வஇலய்க அனய்து, வபிக காஸம்து, வஇலய்க ஹாகம்து, ஃபஹ்ஃபிர்லீ மா கத்தம்து வ அக்கர்த்து வ அஸ்ரர்து, வ அஹ்லன்து, அன்த இலாஹு லாஇலாஹ இல்லா அன்த என்று பிரார்த்திப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்;(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமியின் ஒளி ஆவாய். உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமியை நிர்வாகம் செய்பவன். உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் இவ்விரண்டிலும் உள்ளவர்கள் இறைவன் ஆவாய். நீயே உண்மையாளன். உன் வார்த்தை உண்மையானது. உன் வாக்குறுதி உண்மையானது. உன் சந்திப்பு உண்மையானது. சொர்க்கம் உண்மையாகும். நரகம் உண்மையாகும். மறுமையும் உண்மையானது. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பிக்கை கொள்கிறேன். உன் மீதே பொறுப்பேற்படுத்துகின்றேன். உன் பக்கமே
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ مِنْ جَوْفِ اللَّيْلِ، يَقُولُ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ. أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ. وَلَكَ الْحَمْدُ. أَنْتَ قَيَّامُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ. أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، أَنْتَ الْحَقُّ، وَقَوْلُكَ الْحَقُّ، وَوَعْدُكَ الْحَقُّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ. فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَأَخَّرْتُ. وَأَسْرَرْتُ وَأَعْلَنْتُ. أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ»
573. குர்ஆனிலிருந்து ஒரு அத்தியாயத்தை மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தது போல், இந்த (பின்வரும்) துஆவையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
அவர்கள் கூறினார்கள்:
”அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபி ஜஹன்னம். வ அஊது பிக மின் அதாபில் கப்ர். வ அஊது பிக மின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால். வ அஊது பிக மின் ஃபித்னதில் மஹ்யா வல்மமாத்”
(பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் நரக வேதனை, மண்ணறை வேதனை, மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ هَذَا الدُّعَاءَ. كَمَا يُعَلِّمُهُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ، يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ»
572. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரார்த்தனையில் மிகச் சிறந்தது, அரஃபா நாளின் போது செய்யும் பிரார்த்தனையாகும்.
நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது, ”லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாரிகலஹு” என்பதாகும்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லா பின் கரீஸ் (ரஹ்)
أَفْضَلُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَأَفْضَلُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ
சமீப விமர்சனங்கள்