Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-571

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

571. நான் நபி(ஸல்) அவர்களின் அருகே தூங்கிக் கொண்டிருந்தேன். இரவில் அவர்களை நான் (தேடி) துளாவினேன். என் கையால் அவர்களைத் தொட்டேன். என் கை அவர்களின் பாதங்கள் மீது இருந்தது. அவர்கள் ஸஜ்தா செய்தவர்களாக, ”அஊது பிரிழாக மின் ஸக்திக, வபி முஆஃபதிக மின் உகூபதிக்க, வபிக மின்க லா உஹ்ஸீ ஃஸனாஅன் அலய்க, அன்த கமா அஸ்னய்த அலா நஃப்ஸிக”” என்று கூறினார்கள். இதை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இதன் பொருள்: இறைவனே! உன் திருப்தி மூலம் உன் கோபத்தை விட்டும், உன் விடுதலை மூலம் உன் தண்டனையை விட்டும், உன் அரவணைப்பு மூலம் உன் புறக்கணிப்பை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். உனக்கு எதிராக புகழை நான் எண்ணவில்லை. நீ, உன்னை நீ புகழ்வது போல் உள்ளவனாவாய்.


كُنْتُ نَائِمَةً إِلَى جَنْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَفَقَدْتُهُ مِنَ اللَّيْلِ، فَلَمَسْتُهُ بِيَدِي، فَوَضَعْتُ يَدِي عَلَى قَدَمَيْهِ، وَهُوَ سَاجِدٌ، يَقُولُ: «أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَبِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ»


muwatta-malik-570

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

570. நம் இறைவன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்தில் இறங்கி, இரவின் மூன்றில் இறுதிப் பகுதி வரை இருந்து கொண்டு. ”என்னிடம் பிரார்த்திப்பவர் யார்? அதை நான் ஏற்கிறேன், என்னிடம் கேட்பவர் யார்? அதை நான் தருகின்றேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் யார்? அவரை நான் மன்னிக்கிறேன்”” என்று கூறுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


يَنْزِلُ رَبُّنَا، تَبَارَكَ وَتَعَالَى، كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا. حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ، فَيَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ؟ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ؟


muwatta-malik-569

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

569. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை” என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، فَيَقُولُ: قَدْ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي


muwatta-malik-568

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

568. ”இறைவனே! நீ விரும்பினால் என்னை மன்னிப்பாயாக! நீ விரும்பினால் எனக்கு அருள் புரிவாயாக! என உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் போது கூற வேண்டாம். (மாறாக) கேட்பதை வலியுறுத்திக் கேட்கட்டும்! அவனை கட்டாயப்படுத்துவர் எவருமில்லை என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


لَا يَقُلْ أَحَدُكُمْ إِذَا دَعَا: اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ. اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ. لِيَعْزِمِ الْمَسْأَلَةَ فَإِنَّهُ لَا مُكْرِهَ لَهُ


muwatta-malik-567

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

567. ”அல்லாஹும்ம ஃபாலிகில் இஸ்பாஹி, வஜாஇலில் லய்லி ஸகனன், வஷ்ஷம்சி வல் கமாரி ஹுஸ்பானன் இக்ழி அன்னீத் தய்ன, வ அஹ்னினீ மினல் ஃபக்ரி அவம்திஹ்னீ பிஸம்ஈ வ பஸாரி வகுவ்வத்தீ ஃபீ ஸபீலிக”” என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்தாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.

(இதன் பொருள்: இறைவனே! காலை நேரத்தை உருவாக்கியவனே! இரவை அமைதி பெற ஏற்படுத்தியவனே! சூரியனையும், சந்திரனையும் பிரகாசிக்கச் செய்தவனே! என்னை விட்டும் கடனை நீக்குவாயாக! என்னை ஏழ்மையை விட்டும் பாதுகாப்பாயாக! என் செவிப்புலன், என் பார்வை, என் வலிமை மூலம் உன் வழியில் என்னை பயன்படுத்துவாயாக!)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فَيَقُولُ: ” اللَّهُمَّ فَالِقَ الْإِصْبَاحِ، وَجَاعِلَ اللَّيْلِ سَكَنًا، {وَالشَّمْسِ وَالْقَمَرِ حُسْبَانًا} [الأنعام: 96]، اقْضِ عَنِّي الدَّيْنَ، وَأَغْنِنِي مِنَ الْفَقْرِ، وَأَمْتِعْنِي بِسَمْعِي وَبَصَرِي، وَقُوَّتِي فِي سَبِيلِكَ


muwatta-malik-566

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 137

பிரார்த்தனை பற்றி வந்துள்ளவை.

566. ”ஒவ்வொரு நபிக்கும் தனிப்பட்ட ஒரு பிரார்த்தனை உண்டு. நான் என் பிரார்த்தனையை மறுமையில் என் சமுதாயத்திற்கு பரிந்துரை செய்ய பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ يَدْعُو بِهَا، فَأُرِيدُ أَنْ أَخْتَبِئَ دَعْوَتِي، شَفَاعَةً لِأُمَّتِي فِي الْآخِرَةِ»


muwatta-malik-565

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

565. நாங்கள் நபி( ஸல்) அவர்களின் பின்னே தொழுது கொண்டிருந்தோம். நபி (ஸல்) அவாகள் ருகூஉ விலிருந்து தன் தலையை உயர்த்தி ‘ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா” என்று அவர்கள் கூறிய போது அவர்களின் பின்னே இருந்த ஒருவர் ‘ரப்பனா வலகல் ஹம்து, ஹம்தன் கதீரன் தப்பியபன் முபாரகன் ஃபீஹி” என்று கூறினார்.

நபி (ஸல்) அவா்கள் தொழுகையை முடித்ததும், ”சற்று முன் கூறியவர் யார்?”” என்று கேட்டார்கள். அந்த மனிதர் ”இறைத்தூதர் (ஸல்) அவர்களே! நான் தான்”” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், ”(நீ கூறியதை) தங்களில் யார் முதலில் பதிவு செய்வது என முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் போட்டி போட்டதை நான் பார்த்தேன்”” என்று கூறினார்கள்.

இதை ரிஃபாஆ இப்னு ராஃபிஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.


كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَلَمَّا رَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ، وَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ»، قَالَ رَجُلٌ وَرَاءَهُ: «رَبَّنَا وَلَكَ الْحَمْدُ. حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ». فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنِ الْمُتَكَلِّمُ آنِفًا؟» فَقَالَ الرَّجُلُ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ رَأَيْتُ بِضْعَةً وَثَلَاثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهُنَّ أَوَّلًا»


muwatta-malik-564

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

564. ”உங்களின் அந்தஸ்துகளை உயர்த்துகின்ற, உங்கள் எஜமானனிடம் உங்களை தூய்மைப்படுத்துகின்ற உங்களின் செயல்களில் சிறந்ததாகவும், தங்கம், பட்டை தர்மம் செய்வதை விட உங்களுக்கு சிறந்ததாகவும், மேலும் உங்களின் எதிரிகளை நீங்கள் சந்தித்து, அவர்களின் கழுத்தை நீங்கள் வெட்டி, உங்கள் கழுத்தை அவர்கள் வெட்டுவது என்பதை விட உங்களுக்கு சிறந்ததாகவும் உள்ளதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று அபுத்தர்தா (ரலி) கேட்ட போது, மக்கள் ‘சரி” என்று கூறினார்கள்.

”அது, அல்லாஹ்வை துதிப்பது தான் என்று அபுத்தர்தா (ரலி) கூறினார்கள்.

இதை அறிவிக்கும் ஸியாத் பின் அபூஸியாத் என்பவர் ”அல்லாஹ்வின் வேதனையிலிருந்து ஆதமின் மகனைக் காப்பாற்றும் செயல்களில் அல்லாஹ்வைத் திக்ர் செய்தல் என்பதை விட வேறு இல்லை” என முஆத் இப்னு ஜபல் (ரலி) கூறியதாகவும் கூறுகின்றார்கள்.


أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ أَعمَالِكُمْ، وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ، وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ، وَخَيْرٍ لَكُمْ مِنْ إِعْطَاءِ الذَّهَبِ وَالْوَرِقِ، وَخَيْرٍ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ، وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ؟ قَالُوا: بَلَى، قَالَ: ذِكْرُ اللَّهِ تَعَالَى ” قَالَ زِيَادُ بْنُ أَبِي زِيَادٍ، وَقَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ مُعَاذُ بْنُ جَبَلٍ: «مَا عَمِلَ ابْنُ آدَمَ مِنْ عَمَلٍ أَنْجَى لَهُ مِنْ عَذَابِ اللَّهِ، مِنْ ذِكْرِ اللَّهِ»


muwatta-malik-563

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

563. நிலையான நற்செயல்களில் ஒன்றாக, ஒரு அடியான் ”அல்லாஹு அக்பர், சுப்ஹான்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹு லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்”” என்று கூறுவதும் ஆகும் என்று ஸயீத் இப்னு முஸய்யப்(ரலி) கூறியதாக உமாரா இப்னு ஸய்யத் கூறுகின்றார்கள்.


«فِي الْبَاقِيَاتِ الصَّالِحَاتِ»: إِنَّهَا قَوْلُ الْعَبْدِ: «اللَّهُ أَكْبَرُ. وَسُبْحَانَ اللَّهِ. وَالْحَمْدُ لِلَّهِ. وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ. وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


muwatta-malik-562

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

562. யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 முறை ஸுப்ஹானல்லாஹ் என்றும், 33 முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், 33 முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் 99 முறை கூறி, இறுதியில் 100 வது முறையாக “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்”

(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்)

என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே! என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் யஸீத் (ரஹ்)


«مَنْ سَبَّحَ دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَخَتَمَ الْمِائَةَ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، غُفِرَتْ ذُنُوبُهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»


Next Page » « Previous Page