Category: முஅத்தா மாலிக்

Muwatta Malik

muwatta-malik-560

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 136

அல்லாஹ்வை நினைவு கூர்தல்.

560.  ”லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷாரிகலஹூ லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்” என்று ஒருவர் நூறு தடவை கூறினால், அவருக்கு பத்து அடிமைகளை உரிமை விட்ட நன்மைகள் உண்டு. அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். மேலும் நூறு தீமைகள் அழிக்கப்பட்டு விடும். அந்நாளில் (காலை முதல்) மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் உண்டு. வேறு எவரும் இவர் செய்ததை விட சிறந்ததை செய்து விட முடியாது. ஆனால் இதை விட அதிகமாக செய்ததைத் தவிர என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(அரபி வாசகத்தின் பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, அவன் தனித்தவன். அவனுக்கு இணையாளன் இல்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம். அவனுக்கே புகழ் அனைத்தும். அவனே அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்).


مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ. كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ. وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ، يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ، إِلَّا أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ


muwatta-malik-559

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

559. “குல்ஹுவல்லாஹு அஹத்” எனும் (112 ஆவது) அத்தியாயம், குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு ஈடாகும்.

மேலும் ”தபாரகல்லதீ பியதிஹில் முல்க்” எனும் (67 ஆவது) அத்தியாயம், அதை ஓதியவருக்காக (மறுமையில் அல்லாஹ்விடம்) வாதிடும்” என்று ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ (ரஹ்)


أَنَّ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ، وَأَنَّ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ تُجَادِلُ عَنْ صَاحِبِهَا»


muwatta-malik-558

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

558. நபி (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் ”குல்ஹுவல்லாஹு அஹது”” சூராவை ஓதுவதைக் கேட்டார்கள். ”அவருக்கு அவசியமாகி விட்டது”” என்று அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”இறைத்தூதர் (ஸல்) அவர்களே! என்ன அவசியமாகி விட்டது? என்று கேட்டேன். ”சொர்க்கம்”” என்று கூறினார்கள். உடனே நான் அந்த மனிதரிடம் சென்று, இச்செய்தியைக் கூற எண்ணினேன். நபி (ஸல்) அவர்களிடம் நான் காலை நேர உணவு தவறிவிடுமோ எனப் பயந்தேன். எனவே நபி (ஸல்) அவர்களுடன் காலை நேர உணவைச் சாப்பிட்டேன். பின்பு அந்த மனிதரிடம் சென்றேன். அவர் சென்று விட்டதைக் கண்டேன் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என ஸைத் இப்னு கத்தாப் குடும்பத்தாரின் அடிமையான உபைத் இப்னு ஹுனைன் கூறுகிறார்.


أَقْبَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. «فَسَمِعَ رَجُلًا يَقْرَأُ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ» فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ»، فَسَأَلْتُهُ: مَاذَا يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «الْجَنَّةُ» فَقَالَ أَبُو هُرَيْرَةَ فَأَرَدْتُ أَنْ أَذْهَبَ إِلَيْهِ، فَأُبَشِّرَهُ. ثُمَّ فَرِقْتُ أَنْ يَفُوتَنِي الْغَدَاءُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَآثَرْتُ الْغَدَاءَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. ثُمَّ ذَهَبْتُ إِلَى الرَّجُلِ فَوَجَدْتُهُ قَدْ ذَهَبَ


muwatta-malik-557

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 135

”குல்ஹுவல்லாஹு அஹத்””, ”தபாரக்கல்லதீ பியதிஹில் முல்க்”” ஆகிய அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு!

557. ”குல்ஹுவல்லாஹு அஹது”” (எனத் துவங்கும் 112 வது) அத்தியாயத்தை திரும்ப திரும்ப ஒரு மனிதர் ஓதுவதைக் கேட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, இதுபற்றி கூறினேன். (ஓதிய) அம் மனிதர் அதை குறைவாக எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ”என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!, நிச்சயமாக அந்த அத்தியாயம், குர்ஆனின் மூன்றில் ஒரு பங்குக்குச் சமமாகும்”” என்று கூறினார்கள். அதை அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّهُ سَمِعَ رَجُلًا يَقْرَأُ: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ يُرَدِّدُهَا. فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ. وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ»


muwatta-malik-551

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

551. ஜும்ஆ நாளன்று மிம்பரில் இருக்கும் போது உமர் (ரலி) அவர்கள் ஸஜ்தா வசனத்தை ஓதினார்கள். உடனே மிம்பரை விட்டும் இறங்கி ஸஜ்தா செய்தார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து ஸஜ்தா செய்தனர். பின்பு மற்றொரு முறை ஜும்ஆ நாளன்று இதை ஓதினார்கள். மக்கள் ஸஜ்தா செய்ய ஆயத்தமானார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள், வேண்டாம். அப்படியே அமருங்கள். இதில் நம் விருப்பம் தானே தவிர அல்லாஹ் இதைக் கட்டாயமாக்கவில்லை” என்று கூறினார்கள். அவர்களும் ஸஜ்தா செய்யவில்லை. மக்கள் ஸஜ்தா செய்வதையும் தடுத்தார்கள்.

இதை உர்வா கூறுகின்றார்கள்.

.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَرَأَ سَجْدَةً، وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ. فَنَزَلَ فَسَجَدَ، وَسَجَدَ النَّاسُ مَعَهُ، ثُمَّ قَرَأَهَا يَوْمَ الْجُمُعَةِ الْأُخْرَى. فَتَهَيَّأَ النَّاسُ لِلسُّجُودِ، فَقَالَ: «عَلَى رِسْلِكُمْ. إِنَّ اللَّهَ لَمْ يَكْتُبْهَا عَلَيْنَا، إِلَّا أَنْ نَشَاءَ». فَلَمْ يَسْجُدْ، وَمَنَعَهُمْ أَنْ يَسْجُدُوا


muwatta-malik-550

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

550. உமர்(ரலி) அவர்கள் நஜ்மு எனும் (53வது) அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது அதில் ஸஜ்தா செய்தார்கள். பின்பு நிலைக்கு வந்து, மற்றொரு அத்தியாத்தை ஓதினார்கள் என அஃரஜ் கூறுகின்றார்கள்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، «قَرَأَ بِالنَّجْمِ إِذَا هَوَى فَسَجَدَ فِيهَا»، ثُمَّ قَامَ، فَقَرَأَ بِسُورَةٍ أُخْرَى


muwatta-malik-549

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

549. அப்துல்லா இப்னுஉமர்(ரலி) அவர்கள் 23 வது அத்தியாயத்தை ஓதும் போது இரண்டு ஸஜ்தாக்கள் செய்வதை நான் பார்த்துள்ளேன் என அப்துல்லா இப்னு தீனார் கூறுகின்றார்கள்.


رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «يَسْجُدُ فِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَيْنِ»


muwatta-malik-548

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

548. உமர்(ரலி) அவர்கள் ஹஜ் (எனும் 23 வது) அத்தியாயத்தை ஓதினார்கள். அதில் இரண்டு ஸஜ்தாக்களையும் செய்தார்கள். பின்பு ‘இந்த (23வது) அத்தியாயம் இரண்டு ஸஜ்தாக்கள் மூலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது”” என்றும் கூறினார்கள் என எகிப்துவாசி கூறினார். இதை இப்னு உமர் அவர்களின் அடிமை நாபிஉ கூறுகின்றார்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ «قَرَأَ سُورَةَ الْحَجِّ فَسَجَدَ فِيهَا سَجْدَتَيْنِ»، ثُمَّ قَالَ: «إِنَّ هَذِهِ السُّورَةَ فُضِّلَتْ بِسَجْدَتَيْنِ»


muwatta-malik-547

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 134

குர்ஆனில் ‘ஸஜ்தா” வசனங்கள் பற்றி..

547. அபூஹுரைரா(ரலி) அவர்கள் 84 வது அத்தியாயத்தை (தொழுகையில்) மக்களுக்காக ஓதினார்கள். அதில் ஸஜ்தா செய்தார்கள். தொழுகையை முடித்ததும், ”நபி(ஸல்) அவர்களும் இவ்வாறே இதில் ஸஜ்தா செய்தார்கள்”” என்று மக்களிடம் அறிவித்தார்கள் என அபூஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் கூறுகின்றார்கள்.


أَنَّ أَبَا هُرَيْرَةَ ” قَرَأَ لَهُمْ: إِذَا السَّمَاءُ انْشَقَّتْ فَسَجَدَ فِيهَا «، فَلَمَّا انْصَرَفَ،» أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِيهَا


muwatta-malik-546

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

546. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அல்பகரா அத்தியாயத்தைக் கற்றுக் கொள்ள எட்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார்கள் என்ற செய்தி தமக்குக் கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «مَكَثَ عَلَى سُورَةِ الْبَقَرَةِ، ثَمَانِيَ سِنِينَ يَتَعَلَّمُهَا»


Next Page » « Previous Page