Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-546

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

546. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அல்பகரா அத்தியாயத்தைக் கற்றுக் கொள்ள எட்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார்கள் என்ற செய்தி தமக்குக் கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «مَكَثَ عَلَى سُورَةِ الْبَقَرَةِ، ثَمَانِيَ سِنِينَ يَتَعَلَّمُهَا»


muwatta-malik-545

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

545. ”உங்களில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். உங்களின் தொழுகையே அவர்களின் தொழுகையேயாகும். உங்களின் நோன்புகளே அவர்களின் நோன்புகளாகும், உங்களின் செயல்களே அவர்களின் செயல்களாகும் நீங்ள் ஒப்பிட்டு நோக்குவீர்கள். (அந்த அளவுக்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆனால்) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். அவர்களின் தொண்டைக் குழிகளை விட்டும் அது கடக்காது. வேட்டைப் பிராணியிலிருந்து அம்பு (பட்டு) வெளியாவது போல் மார்க்கத்தை விட்டும் அவர்கள் வெளியயேறுவார்கள். அம்பின் நுனியில் போய் பார்ப்பீர்.அதில் (அடையாளம்) எதையும் காண மாட்டீர். அம்பின் அடியில் பார்ப்பீர். எதையும் அப்போது காண மாட்டீர். அம்பின் இறகையும் பார்ப்பீர். அதிலும் (அடையாளம்) எiதையும் காண மாட்டீர். (இறுதியில் அம்பு வேட்டைப் பிராணியை) குத்தியதா? என சந்தேகம் கொள்வீர். (அந்த மாதிரி அவர்களின் வழிபாட்டின் பயன் அமையும்)”” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இது புகாரியிலும் இடம் பெற்றுள்ளது.


يَخْرُجُ فِيكُمْ قَوْمٌ تَحْقِرُونَ صَلَاتَكُمْ مَعَ صَلَاتِهِمْ، وَصِيَامَكُمْ مَعَ صِيَامِهِمْ، وَأَعْمَالَكُمْ مَعَ أَعْمَالِهِمْ، يَقْرَءُونَ الْقُرْآنَ، وَلَا يُجَاوِزُ حَنَاجِرَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، تَنْظُرُ فِي النَّصْلِ، فَلَا تَرَى شَيْئًا، وَتَنْظُرُ فِي الْقِدْحِ فَلَا تَرَى شَيْئًا، وَتَنْظُرُ فِي الرِّيشِ، فَلَا تَرَى شَيْئًا، وَتَتَمَارَى فِي الْفُوقِ


muwatta-malik-544

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

544. நபி (ஸல்) அவர்கள் இரவில் பயணம் சென்றார்கள். அவர்களுடன் உமர் (ரலி) அவர்களும் சென்றார்கள். ஒரு விஷயம் பற்றி அவர் அவர்களிடம் கேட்டார்கள். அவருக்கு அவர்கள் பதில் கூறவில்லை. பின்பு மீண்டும் அவர்களிடம் கேட்டார்கள். அவருக்கு அவர்கள் பதில் கூறவில்லை. அப்போது உமர் (ரலி) அவர்கள், ”உம்மை உமரின் தாய் இழக்கட்டுமாக! மூன்று முறை இறைத்தூதாரிடம் வற்புறுத்தினாய், ஒவ்வொரு முறையும் உமக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லையே”” என்று (தமக்குத்தாமே) கூறிக் கொண்டார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:-

நான் உடனே என் ஒட்டகையை ஓட்டிக் கொண்டு, மக்கள் முன் சென்றேன். என் விஷயமாக குர்ஆன் வசனம் இறக்கப்படக் கூடும் என பயந்தேன். சிறிது நேரம் கூட இல்லை. என்னை சப்தமிட்டு அழைப்பவரின் குரல் கேட்டேன். என் விஷயமாக குர்ஆன் வசனம் இறக்கபட்டிருக்கலாம் என நான் பயந்தவனாகக் கூறிக் கொண்டேன். உடனே நபி (ஸல்) அவா்களிடம் வந்து, ஸலாம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”இரவு என் மீது எனக்கு ஒரு அத்தியாயம் இறக்கப்பட்டுள்ளது. அது சூரியன் உதயமான இன்றைய நாளை விட எனக்கு மிக விருப்பமானதாக உள்ளது”” என்று கூறி விட்டு, நிச்சயமாக நாம் உமக்கு தெளிவான வெற்றியை அளித்து விட்டோம் (என்று துவங்கும்) 48:1 வசனத்தை ஓதினார்கள்.

இதை அஸ்லம் கூறியதாக அவர்களின் மகன் ஸைத் கூறுகின்றார்கள்.

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسِيرُ فِي بَعْضِ أَسْفَارِهِ. وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يَسِيرُ مَعَهُ لَيْلًا، فَسَأَلَهُ عُمَرُ عَنْ شَيْءٍ، فَلَمْ يُجِبْهُ. ثُمَّ سَأَلَهُ، فَلَمْ يُجِبْهُ. ثُمَّ سَأَلَهُ، فَلَمْ يُجِبْهُ. فَقَالَ عُمَرُ: ثَكِلَتْكَ أُمُّكَ، عُمَرُ نَزَرْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مَرَّاتٍ. كُلُّ ذَلِكَ لَا يُجِيبُكَ. قَالَ عُمَرُ فَحَرَّكْتُ بَعِيرِي. حَتَّى إِذَا كُنْتُ أَمَامَ النَّاسِ وَخَشِيتُ أَنْ يُنْزَلَ فِيَّ قُرْآنٌ. فَمَا نَشِبْتُ أَنْ سَمِعْتُ صَارِخًا يَصْرُخُ بِي قَالَ، فَقُلْتُ: لَقَدْ خَشِيتُ أَنْ يَكُونَ نَزَلَ فِيَّ قُرْآنٌ، قَالَ: فَجِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمْتُ عَلَيْهِ. فَقَالَ: «لَقَدْ أُنْزِلَتْ عَلَيَّ، هَذِهِ اللَّيْلَةَ، سُورَةٌ. لَهِيَ أَحَبُّ إِلَيَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ»، ثُمَّ قَرَأَ: ” {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا} [الفتح: 1]


muwatta-malik-543

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

543. அப்துல்லாஹ் இப்னு உம்மீ மக்தூம் (ரலி) அவர்கள் விஷயத்தில் தான் ”அபஸ வதவல்லா”” எனத் துவங்கும் அத்தியாயம் இறக்கப்பட்டது. அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். ”முஹம்மது அவர்களே! என்னை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்”” என்று கூறினார். (அது சமயம்) நபி(ஸல்) அவர்களிம், இணைவைப்போரில் உள்ள முக்கியமானவர்களில் ஒருவர் இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரை (உம்மீ மக்தூம்(ரலி))ப் புறக்கணித்தார்கள். மேலும் (இணைவைக்கும்) மற்ற நபரை நோக்கி, ”இன்னாரின் தந்தையே! நான் கூறுவதில் குறை ஏதும் கண்டீர்களா?”” என்று கேட்டார்கள். ”இல்லை, ரத்த (உறவின்) மீது சத்தியமாக, நீர் கூறியதில் குறையை நான் காணவில்லை”” என்று அவர் கூறினார். அப்போது தான், ”குருடன் அவரிடம் வந்த போது அவர் புறக்கணித்தார், கடுகடுத்தார்”” என்று வசனம் இறக்கியருளப்பட்டது. இதை தன் தந்தை உர்வா கூறியதாக ஹிஷாம் கூறுகின்றார்கள்.


أُنْزِلَتْ {عَبَسَ وَتَوَلَّى} [عبس: 1] فِي عَبْدِ اللَّهِ بْنِ أُمِّ مَكْتُومٍ “. جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَقُولُ: يَا مُحَمَّدُ اسْتَدْنِينِي. وَعِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مِنْ عُظَمَاءِ الْمُشْرِكِينَ. فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرِضُ عَنْهُ، وَيُقْبِلُ عَلَى الْآخَرِ، وَيَقُولُ: «يَا أَبَا فُلَانٍ هَلْ تَرَى بِمَا أَقُولُ بَأْسًا؟» فَيَقُولُ: لَا وَالدِّمَاءِ. مَا أَرَى بِمَا تَقُولُ بَأْسًا. فَأُنْزِلَتْ {عَبَسَ وَتَوَلَّى، أَنْ جَاءَهُ الْأَعْمَى} [عبس: 2]


muwatta-malik-542

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

542. ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

மேலும், ‘கடும் குளிரான நாள்களில் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி (ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்’

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


أَنَّ الْحَارِثَ بْنَ هِشَامٍ، سَأَلَ رَسُولَ اللَّهِ، كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْيَانًا يَأْتِينِي فِي مِثْلِ صَلْصَلَةِ الْجَرَسِ، وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ. فَيَفْصِمُ عَنِّي، وَقَدْ وَعَيْتُ مَا قَالَ. وَأَحْيَانًا يَتَمَثَّلُ لِيَ الْمَلَكُ رَجُلًا، فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ».

قَالَتْ عَائِشَةُ: «وَلَقَدْ رَأَيْتُهُ يَنْزِلُ عَلَيْهِ فِي الْيَوْمِ الشَّدِيدِ الْبَرْدِ، فَيَفْصِمُ عَنْهُ وَإِنَّ جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا»


muwatta-malik-541

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

541. குர்ஆனை (யுடையவருக்கு) உதாரணம் கட்டப்பட்ட ஒட்டகத்தைப் போன்றதாகும். ‘அதை ஒருவர் நன்கு கவனித்தால் அவர் தன் வசம் அதை வைத்துக் கொள்ளலாம். அதை அவிழ்த்து விட்டால், அது ஓடி விடும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ، كَمَثَلِ صَاحِبِ الْإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا، أَمْسَكَهَا. وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ»


muwatta-malik-540

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 133

குர்ஆன் பற்றி..

540. ஹிஷாம் இப்னு ஹகீம் (ரலி) அவர்கள், சூரா ஃபுர்கானை (அத்தியாயத்தை) நபி(ஸல்) அவர்களும், நானும் ஓதுவதற்கு மாற்றமாக ஓதுவதை நான் கேட்டேன். அவரிடம் வேகமாகச் சென்றேன். பின்பு அவர் ஓதி முடிக்கும் வரை காத்திருந்தேன். (முடிந்ததும்) அவரை அவரது மேலாடையால் சுற்றி (கட்டி) அவரை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களே! சூரா ஃபுர்கானை நீங்கள் ஓதுவதற்கு மாற்றமாக இவர் ஓதிடக் கேட்டேன்’ என்று கூறினேன். ‘அவரை அவிழ்த்து விடுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு, (அவரிடம்) ‘நீ ஓது’ என்றார்கள். நான் எப்படி ஓதக் கேட்டேனோ அதன்படியே அவர் ஓதினார். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘இவ்வாறே (குர்ஆன்) இறக்கியருளப்பட்டது’ என்று கூறினார்கள். பின்பு என்னிடம் ‘நீர் ஓதவும்’ என்று கூறினார்கள். அதை நான் ஓதினேன். ‘இவ்வாறே (குர்ஆன்) இறக்கியருளப்பட்டது. இந்தக் குர்ஆன் ஏழு விதத்தில் இறக்கப்பட்டது. எனவே நீங்கள் உங்களுக்கு எளிதானதையே ஓதுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَؤُهَا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِيهَا فَكِدْتُ أَنْ أَعْجَلَ عَلَيْهِ، ثُمَّ أَمْهَلْتُهُ حَتَّى انْصَرَفَ، ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ، فَجِئْتُ بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَأْتَنِيهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْسِلْهُ»، ثُمَّ قَالَ: اقْرَأْ يَا هِشَامُ فَقَرَأَ الْقِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَأُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَكَذَا أُنْزِلَتْ»، ثُمَّ قَالَ لِي: اقْرَأْ فَقَرَأْتُهَا. فَقَالَ: «هَكَذَا أُنْزِلَتْ»، «إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ»


muwatta-malik-539

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

539. நானும், முஹம்மது இப்னு யஹ்யா அவர்களும் அமர்ந்திருந்தோம். அப்போது முஹம்மது அவர்கள் ஒருவரை அழைத்து, ‘உன் தந்தையிடம் நீ கேட்டதை எனக்குக் கூறுங்கள்’ என்று கேட்டார்கள். அப்போது அவர் தந்தை கூறியதாக கூறினார் (அவர் தந்தை கூறியதாவது:-)

நான் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் சென்று, ‘ஏழு முறைகளில் குர்ஆன் ஓதுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு ஸைத் அவர்கள் (எல்லாமே) அழகானது தான் என்று கூறினார்கள். தொடர்ந்து அவர் 15 நாள்களில் அல்லது 20 நாட்களில் தான் தொடர்ந்து குர்ஆனை ஓதுவது எனக்கு விருப்பமானது என்று கூறி விட்டு, அது ஏன் என்று என்னிடம் கேட்பீராக! என்றார்கள். அதற்கு நான் அவ்வாறே கேட்கிறேன்’ என்றேன். அதை சிந்தித்து விளங்குவதற்காகவே என்று விடையளித்தார்கள். இதை யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


كُنْتُ أَنَا وَمُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ حَبَّانَ، جَالِسَيْنِ. فَدَعَا مُحَمَّدٌ رَجُلًا. فَقَالَ: أَخْبِرْنِي بِالَّذِي سَمِعْتَ مِنْ أَبِيكَ. فَقَالَ الرَّجُلُ: أَخْبَرَنِي أَبِي أَنَّهُ أَتَى زَيْدَ بْنَ ثَابِتٍ، فَقَالَ لَهُ: كَيْفَ تَرَى فِي قِرَاءَةِ الْقُرْآنِ فِي سَبْعٍ؟ فَقَالَ زَيْدٌ: «حَسَنٌ. وَلَأَنْ أَقْرَأَهُ فِي نِصْفٍ، أَوْ عَشْرٍ، أَحَبُّ إِلَيَّ». وَسَلْنِي لِمَ ذَاكَ؟ قَالَ: فَإِنِّي أَسْأَلُكَ. قَالَ زَيْدٌ «لِكَيْ أَتَدَبَّرَهُ وَأَقِفَ عَلَيْهِ»


muwatta-malik-538

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 132

குர்ஆனை பகுதி பகுதியாக ஓதுவது பற்றி..

538. இரவில் குர்ஆனின் ஒரு பகுதியை ஓதத் தவறியவர் சூரியன் சாய்ந்ததில் இருந்து லுஹர் தொழுகைக்குள் அதை ஓதி விட்டால் அவர் அதைத் தவற விட்டவராக ஆக மாட்டார் என்று (அல்லது அதை நிறைவேற்றியராவார் என்றோ) உமர்(ரலி) அவர்கள் கூறியதாக அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல் காரி அறிவிக்கின்றார்கள்.


«مَنْ فَاتَهُ حِزْبُهُ مِنَ اللَّيْلِ، فَقَرَأَهُ حِينَ تَزُولُ الشَّمْسُ، إِلَى صَلَاةِ الظُّهْرِ، فَإِنَّهُ لَمْ يَفُتْهُ. أَوْ كَأَنَّهُ أَدْرَكَهُ»


muwatta-malik-537

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 131

ஒளுவின்றி குர்ஆன் ஓதுவதற்குரிய அனுமதி

537. குர்ஆனை ஓதக் கூடிய கூட்டத்தினருடன் உமர்(ரலி) அவர்கள் இருந்தார்கள். மல ஜலம் கழிக்கச் சென்று விட்டு, குர்ஆனை ஓதியவாறே திரும்பி வந்தார்கள். அப்போது ஒருவர், ‘தலைவரே! ஒளுவின்றி குர்ஆனை ஓதுகின்றீர்களே!’ எனக் கூறினார். இது விஷயமாக (கூடாது என்று) உனக்கு தீர்ப்பு வழங்கியவன் யார்? முஸைலமாவா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். இதை முஹம்மது இப்னு சிரின் கூறுகின்றார்கள்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ فِي قَوْمٍ وَهُمْ يَقْرَءُونَ الْقُرْآنَ فَذَهَبَ لِحَاجَتِهِ، ثُمَّ رَجَعَ وَهُوَ يَقْرَأُ الْقُرْآنَ. فَقَالَ لَهُ رَجُلٌ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَتَقْرَأُ الْقُرْآنَ وَلَسْتَ عَلَى وُضُوءٍ؟ فَقَالَ لَهُ عُمَرُ: «مَنْ أَفْتَاكَ بِهَذَا أَمُسَيْلِمَةُ»


Next Page » « Previous Page