ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
2677. அபுல்முஸன்னா அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான், மர்வான் பின் ஹகம் அவர்களிடம் இருந்தபோது அபூஸயீத் (ரலி) அவர்கள் வந்தார்கள். அவரிடம் மர்வான் அவர்கள், பானத்தில் மூச்சுவிடுவதை நபி (ஸல்) தடுத்துள்ளார்கள் என்ற செய்தியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டுள்ளீர்களா? என்றுக் கேட்டார். அதற்கு அபூஸயீத் (ரலி) அவர்கள், “ஆம். கேட்டுள்ளேன்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) சொன்னார்கள்:
ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! என்னால் ஒரே மூச்சில் பானத்தைக் குடிக்க முடியாது என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் வாயிலிருந்து கோப்பையை அகற்றிவிட்டு மூச்சுவிட்டுக் கொள்! என்றுக் கூறினார்கள். அவர், நான் (பானத்தில்) தூசிப் போன்றதைக் கண்டால் என்ன செய்வது? என்றுக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதை (சிறிது சாய்த்துக்) கொட்டிவிடு! (தூசி போன்றவை நீங்கி விடும்) என்று கூறினார்கள்.
كُنْتُ عِنْدَ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، فَقَالَ لَهُ مَرْوَانُ بْنُ الْحَكَمِ: أَسَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَنَّهُ نَهَى عَنِ النَّفْخِ فِي الشَّرَابِ؟ فَقَالَ لَهُ أَبُو سَعِيدٍ: نَعَمْ، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، إِنِّي لاَ أَرْوَى مِنْ نَفَسٍ وَاحِدٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: فَأَبِنِ الْقَدَحَ عَن فِيكَ، ثُمَّ تَنَفَّسْ، قَالَ: فَإِنِّي أَرَى الْقَذَاةَ فِيهِ، قَالَ: فَأَهْرِقْهَا.
சமீப விமர்சனங்கள்