Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-611

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

611. இப்னு உமர் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையில் (அல்-ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓத மாட்டார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)


أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ لاَ يَقْرَأُ فِي الصَّلاَةِ عَلَى الْجَنَازَةِ.


Muwatta-Malik-951

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

951. முஹம்மத் பின் அபூபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது அனஸ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடன் நீங்கள் எவ்வாறு தல்பியா கூறிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “தல்பியா” சொல்பவர் தல்பியா சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்பட வில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை” என்று பதிலளித்தார்கள்.


أَنَّهُ سَأَلَ أَنَسَ بْنَ مَالِكٍ وَهُمَا غَادِيَانِ مِنْ مِنًى إِلَى عَرَفَةَ: كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ فِي هَذَا الْيَوْمِ مَعَ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ؟ قَالَ: كَانَ يُهِلُّ الْمُهِلُّ مِنَّا فَلاَ يُنْكَرُ عَلَيْهِ، وَيُكَبِّرُ الْمُكَبِّرُ فَلاَ يُنْكَرُ عَلَيْهِ.


Muwatta-Malik-1202

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1202.


الأَمْرُ عِنْدَنَا، أَنَّ التَّكْبِيرَ فِي أَيَّامِ التَّشْرِيقِ دُبُرَ الصَّلَوَاتِ، وَأَوَّلُ ذَلِكَ تَكْبِيرُ الإِمَامِ وَالنَّاسُ مَعَهُ، دُبُرَ صَلاَةِ الظُّهْرِ مِنْ يَوْمِ النَّحْرِ، وَآخِرُ ذَلِكَ تَكْبِيرُ الإِمَامِ وَالنَّاسُ مَعَهُ، دُبُرَ صَلاَةِ الصُّبْحِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ، ثُمَّ يَقْطَعُ التَّكْبِيرَ.


Muwatta-Malik-1201

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1201.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَرَجَ الْغَدَ مِنْ يَوْمِ النَّحْرِ حِينَ ارْتَفَعَ النَّهَارُ شَيْئًا، فَكَبَّرَ، فَكَبَّرَ النَّاسُ بِتَكْبِيرِهِ، ثُمَّ خَرَجَ الثَّانِيَةَ مِنْ يَوْمِهِ ذَلِكَ بَعْدَ ارْتِفَاعِ النَّهَارِ، فَكَبَّرَ، فَكَبَّرَ النَّاسُ بِتَكْبِيرِهِ، ثُمَّ خَرَجَ الثَّالِثَةَ حِينَ زَاغَتِ الشَّمْسُ، فَكَبَّرَ، فَكَبَّرَ النَّاسُ بِتَكْبِيرِهِ، حَتَّى يَتَّصِلَ التَّكْبِيرُ، وَيَبْلُغَ الْبَيْتَ، فَيُعْلَمَ أَنَّ عُمَرَ قَدْ خَرَجَ يَرْمِي.


Muwatta-Malik-2706

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2706.


أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، قَالَ: فَأَرْسَلَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ رَسُولاً، قَالَ عَبْدُ اللهِ بْنُ أَبِي بَكْرٍ: حَسِبْتُ أَنَّهُ قَالَ وَالنَّاسُ فِي مَقِيلِهِمْ: لاَ تَبْقَيَنَّ فِي رَقَبَةِ بَعِيرٍ قِلاَدَةٌ مِنْ وَتَرٍ، أَوْ قِلاَدَةٌ، إِلاَّ قُطِعَتْ.

قَالَ يَحيَى: سَمِعْتُ مُالكا يَقُولُ: أَرَى ذَلِكَ مِنَ الْعَيْنِ.


Muwatta-Malik-987

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

987.


الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ.


Muwatta-Malik-2673

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2673. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கொடுக்க ஏதும் இல்லாவிட்டால் குறைந்த பட்சம் கால்நடைப் பிராணிகளின்) கரிந்த கால்குளம்பே இருந்தாலும் அதைக் கொடுத்தேனும் ஏழையைத் திருப்பி அனுப்புங்கள்.

அறிவிப்பவர்: உம்மு புஜைத் (ரலி)


رُدُّوا الْمِسْكِينَ وَلَوْ بِظِلْفٍ مُحْرَقٍ.


Muwatta-Malik-1008

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1008. உமைர் பின் ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக (தனது தோழர்களுடன்) மக்காவை நோக்கி புறப்பட்டுச் சென்றார்கள். (வழியில்) ரவ்ஹா எனுமிடத்தில் ஒரு காயப்படுத்தப்பட்ட காட்டுக் கழுதையைக் கண்டார்கள். (அது நகரமுடியாமல் கிடந்தது). இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது அவர்கள், “அதை விட்டுவிடுங்கள். (அதை வேட்டையாடிய) அதன் உரிமையாளர் இங்கு வரக்கூடும் என்று கூறினார்கள்.

சிறிது நேரத்தில் அதன் உரிமையாளரான (ஸைத் பின் கஅப்) அல்பஹ்ஸீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். மேலும் அவர் அல்லாஹ்வின் தூதரே!, “இதை நீங்களே (உணவாக) வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் அதை தோழர்களுக்கு பங்கிடுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.

பிறகு அவர்கள் புறப்பட்டு ருவைஸா எனும் இடத்துக்கும் அர்ஜ் எனும் இடத்துக்கும் இடைப்பட்ட உஸாயா எனும் இடத்துக்கு வந்தார்கள். அங்கு ஒரு (மரத்தின்) நிழலில் மான் ஒன்று சுருண்டு (தூங்கிக் கொண்டவாறு) இருந்தது. அங்கு ஒரு அம்பும் கிடந்தது. (அல்லது அம்புப்பட்டு கொல்லப்பட்டுக் கிடந்தது)

உடனே நபி (ஸல்) அவர்கள், அந்த இடத்தை விட்டு அனைவரும் கடக்கும் வரை மக்களில் யாரும் அதன்பக்கம் சென்று அதற்கு தொல்லை தரக்கூடாது என்பதற்காக அங்கு

أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ خَرَجَ يُرِيدُ مَكَّةَ، وَهُوَ مُحْرِمٌ، حَتَّى إِذَا كَانَ بِالرَّوْحَاءِ، إِذَا حِمَارٌ وَحْشِيٌّ عَقِيرٌ، فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فَقَالَ: دَعُوهُ، فَإِنَّهُ يُوشِكُ أَنْ يَأْتِيَ صَاحِبُهُ، فَجَاءَ الْبَهْزِيُّ، وَهُوَ صَاحِبُهُ، إِلَى النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، شَأْنَكُمْ بِهَذَا الْحِمَارِ؟ فَأَمَرَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَبَا بَكْرٍ، فَقَسَمَهُ بَيْنَ الرِّفَاقِ، ثُمَّ مَضَى، حَتَّى إِذَا كَانَ بِالأَُثَايَةِ بَيْنَ الرُّوَيْثَةِ وَالْعَرْجِ، إِذَا ظَبْيٌ حَاقِفٌ فِي ظِلٍّ فِيهِ سَهْمٌ، فَزَعَمَ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَمَرَ رَجُلاً أَنْ يَقِفَ عِنْدَهُ، لاَ يَرِيبُهُ أَحَدٌ مِنَ النَّاسِ، حَتَّى يُجَاوِزَهُ.


Muwatta-Malik-2736

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2736. யஹ்யா அல்லைஸீ (ரஹ்) கூறுகிறார்:

மாலிக்-2733 இல் வரும் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தனது முடிக்கு சாயமிடவில்லை என்ற விளக்கம் உள்ளது. இது எப்படியெனில், நபி (ஸல்) அவர்கள் தனது முடிக்கு சாயமிட்டிருந்தால் அதை ஆயிஷா (ரலி) அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அஸ்வதுக்கு சொல்லியிருப்பார்கள். (அதைக் கூறாமல் அபூபக்ர் (ரலி) அவர்கள் சாயமிட்டதைத் தான் குறிப்பிட்டுள்ளார்கள்) என்று மாலிக் இமாம் கூறினார்.


وَسَمِعْتُ مَالِكًا يَقُولُ: فِي هَذَا الْحَدِيثِ بَيَانُ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ لَمْ يَصْبُغْ، وَلَوْ صَبَغَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ لأَرْسَلَتْ بِذَلِكَ عَائِشَةُ إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ.


Muwatta-Malik-2735

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2735. மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்:

(நரை) முடிக்கு எந்த நிறத்தையும் பூசாமலிருப்பதும் இன்ஷா அல்லாஹ் சரியானதே!. இது விசயத்தில் மக்கள் மீதும் எந்த நெருக்கடியும் (கட்டாயமும்) இல்லை.

அறிவிப்பவர்: யஹ்யா அல்லைஸீ (ரஹ்)


وَتَرْكُ الصَّبْغِ كُلِّهِ وَاسِعٌ، إِنْ شَاءَ اللهُ، لَيْسَ عَلَى النَّاسِ فِيهِ ضِيقٌ.


Next Page » « Previous Page