Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-493

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

493. நோன்புப் பெருநாள் அன்று பெருநாள் தொழுகைக்கு முன் சாப்பிட மக்கள் கட்டளையிடப்பட்டனர் என ஸயித் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


أَنَّ النَّاسَ كَانُوا «يُؤْمَرُونَ بِالْأَكْلِ يَوْمَ الْفِطْرِ قَبْلَ الْغُدُوِّ»

قَالَ مَالِكٌ: «وَلَا أَرَى ذَلِكَ عَلَى النَّاسِ فِي الْأَضْحَى»


muwatta-malik-492

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 113

பெருநாள் தொழுகைக்குச் செல்லும் முன் சாப்பிடுதல்

492. உர்வா அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று (காலையில்) ஈத்கா செல்லும் முன் சாப்பிடுவார்கள் என அவர்களின் மகன் ஹிஷாம் கூறுகின்றார்கள்.


أَنَّهُ كَانَ «يَأْكُلُ يَوْمَ عِيدِ الْفِطْرِ قَبْلَ أَنْ يَغْدُوَ»


muwatta-malik-491

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

491. நான் ஒரு பெருநாளில் உமர்(ரலி) அவர்களுடன் கலந்திருந்தேன். அவர்கள் தொழுகை நடத்தி விட்டு பிரசங்கம் செய்வார்கள். (அதில) ‘இந்த இரண்டு பெருநாட்களில் நோன்பு வைப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இன்று உங்களை நோன்பிலிருந்து விடுவித்த நாளாகும். மற்றொரு நாளோ நீங்கள் கொடுத்த குர்பானியில் இருந்து உண்ணும் நாளாகும் என்று கூறினார்கள்.

(இது போல்) உதுமான்(ரலி) அவர்களுடன் ஒரு பெருநாளில் கலந்து கொண்ட போது அவர்கள் வந்து தொழுகை நடத்தினார்கள். அது முடிந்ததும் பிரசங்கம் செய்தார்கள். (அதில்) ‘இன்று உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் (ஜும்ஆ வும் பெருநாளும்) சேர்ந்து வந்து விட்டது. ஜும்ஆ விலும் கலந்து கொள்ளலாம். எனவே விரும்புவோர் ஜும்ஆ தொழுது கொள்ளுங்கள். வீட்டிற்குச் செல்ல விரும்புவோருக்கு (ஜும்ஆ தொழாமல் செல்ல) அனுமதிக்கிறேன் என்று கூறினார்கள்.

(இது போல்) உதுமான்(ரலி) முற்றுகையிடப்பட்டிருந்த நேரத்தில் அவர்களுடன் பெருநாளில் கலந்து கொண்டேன். அவர்கள் தொழ வைத்து விட்டு, பின்பு பிரசங்கம் செய்தார்கள் என அபூ உபைத் அவர்கள் கூறுகின்றார்கள்.


شَهِدْتُ الْعِيدَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ فَخَطَبَ النَّاسَ، فَقَالَ: ” إِنَّ هَذَيْنِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صِيَامِهِمَا: يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَالْآخَرُ يَوْمٌ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ ”  قَالَ أَبُو عُبَيْدٍ ثُمَّ شَهِدْتُ الْعِيدَ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ. فَجَاءَ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ فَخَطَبَ. وَقَالَ: إِنَّهُ قَدِ «اجْتَمَعَ لَكُمْ فِي يَوْمِكُمْ هَذَا عِيدَانِ. فَمَنْ أَحَبَّ مِنْ أَهْلِ الْعَالِيَةِ أَنْ يَنْتَظِرَ الْجُمُعَةَ فَلْيَنْتَظِرْهَا، وَمَنْ أَحَبَّ أَنْ يَرْجِعَ، فَقَدْ أَذِنْتُ لَهُ»

قَالَ أَبُو عُبَيْدٍ ثُمَّ شَهِدْتُ الْعِيدَ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَعُثْمَانُ مَحْصُورٌ فَجَاءَ «فَصَلَّى ثُمَّ انْصَرَفَ فَخَطَبَ»


muwatta-malik-490

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

490. அபூபக்கர்(ரலி) அவர்கள், உமர்(ரலி) அவர்கள் ஆகியோரும் இவ்வாறே செய்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ أَبَا بَكْرٍ وَعُمَرَ كَانَا يَفْعَلَانِ ذَلِكَ


muwatta-malik-489

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 112

பெருநாட்களில் குத்பாவிற்கு முன் தொழுதல் !

489. நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாட்களில் பிரசங்கம் செய்யும் முன் நபி(ஸல்) அவர்கள் தொழ வைப்பார்கள் என இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ الْأَضْحَى قَبْلَ الْخُطْبَةِ»


muwatta-malik-488

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

488. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் பெருநாள் அன்று தொழுமிடத்திற்கு தொழச் செல்லும் முன் குளித்துக் கொள்வார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ قَبْلَ أَنْ يَغْدُوَ إِلَى الْمُصَلَّى»


muwatta-malik-487

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 111

பெருநாட்களில் குளித்தல். அவற்றில் பாங்கு, இகாமத்?

487. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இரந்து இன்று வரை நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாட்களில் தொழ பாங்கு, இகாமத் இல்லை என பல அறிஞர்களும் கூறியதாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


لَمْ يَكُنْ فِي عِيدِ الْفِطْرِ وَلَا فِي الْأَضْحَى، نِدَاءٌ، وَلَا إِقَامَةٌ، مُنْذُ زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَوْمِ،

قَالَ مَالِكٌ وَتِلْكَ السُّنَّةُ الَّتِي لَا اخْتِلَافَ فِيهَا عِنْدَنَا


muwatta-malik-486

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

486. உங்களில் ஒருவர் தூங்கும் போது, அவாரின் தலை உச்சியில் ஷைத்தான் மூன்று முடிச்சுக்களைப் போடுகின்றான். ஒவ்வொரு முடிச்சின் போதும் நீண்ட இரவு நேரம் உள்ளது. நன்றாகத் தூங்கு’ என்று கூறுவான். அப்போது அவர் விழித்து, அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒருமுடிச்சு அவிழ்ந்து விடும். அவர் ஒளுச் செய்து விட்டால், ஒரு முடிச்சு அவிழ்ந்து விடும். அடுத்து அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. இதனால் அவர் சுதந்திரமானவராக உளத்தூய்மையானவராக காலையில் எழுவார். இவ்வாறு நடந்து கொள்ளவில்லையென்றால், கடின இதயமானவராக, சோம்பேறியாக எழுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ، إِذَا هُوَ نَامَ، ثَلَاثَ عُقَدٍ. يَضْرِبُ مَكَانَ كُلِّ عُقْدَةٍ، عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ، فَارْقُدْ. فَإِنِ اسْتَيْقَظَ، فَذَكَرَ اللَّهَ، انْحَلَّتْ عُقْدَةٌ. فَإِنْ تَوَضَّأَ، انْحَلَّتْ عُقْدَةٌ. فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقَدُهُ. فَأَصْبَحَ نَشِيطًا، طَيِّبَ النَّفْسِ. وَإِلَّا، أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلَانَ»


muwatta-malik-485

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 110

தொழுகையில் ஆர்வமூட்டல்.

485. ‘நஜ்த் என்ற ஊரைச் சார்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரின் குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளைத் தொழுகைகள்’ என்றார்கள்.

உடனே அவர் ‘அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?’ என்றார். அதற்கவர்கள் ‘நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை’ என்றார்கள். அடுத்து ‘ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் ‘அதைத்தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமையுண்டா?’ என்றார். அதற்கவர்கள் ‘நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை’ என்றார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் கூறினார்கள். அதற்கவர் ‘அதைத் தவிர வேறு தர்மங்கள் கடமையில்லை’ என்றார்கள். உடனே அம்மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்றார். அப்போது ‘இவர் கூறியதற்கேற்ப நடந்தால் வெற்றியடைந்துவிட்டார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ، ثَائِرُ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ، وَلَا نَفْقَهُ مَا يَقُولُ. حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الْإِسْلَامِ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ»، قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ»، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ»، قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ»، قَالَ: وَذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «الزَّكَاةَ». فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ»، قَالَ: فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا، وَلَا أَنْقُصُ مِنْهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ الرَّجُلُ إِنْ صَدَقَ»


muwatta-malik-484

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

484. உமர்(ரலி) அவர்கள் பள்ளியில் ஓரத்தில் ‘பதீஹா’ என்று பெயாரிடப்பட்ட ஒரு திண்ணையைக் காட்டினார்கள். ‘ஒருவர் சப்தமிட்டு பேசவோ, பாட்டுப் பாடவோ விரும்பினால் இந்த திண்ணையின் பக்கம் வரட்டும்’ என்று உமர்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ بَنَى رَحْبَةً فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، تُسَمَّى الْبُطَيْحَاءَ، وَقَالَ: «مَنْ كَانَ يُرِيدُ أَنْ يَلْغَطَ أَوْ يُنْشِدَ شِعْرًا، أَوْ يَرْفَعَ صَوْتَهُ، فلْيَخْرُجْ إِلَى هَذِهِ الرَّحْبَةِ»


Next Page » « Previous Page