Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-509

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

509. யூதப் பெண் ஒருத்தி, ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து (கப்ரு வேதனை பற்றி) கேட்டாள். ‘கப்ரு வேதனையை விட்டும் அல்லாஹ் உன்னைக் காப்பாற்றுவானாக!’ என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். ‘மக்கள் தங்களின் கப்ருகளில் வேதனை செய்யப்படுவார்களா? என்று நபி(ஸல்) அவர்களிடம் ஆயிஷா(ரலி) கேட்டார்கள். இதிலிருந்து அல்லாஹ்விடம் காப்பாற்றிட வேண்டுகிறேன் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள், காலை நேரத்தில் வாகனத்தில் ஏறிச் சென்றார்கள். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் பகல் நேரத்தில் திரும்பினார்கள். இரு மலைக்குன்றுகளுக்கிடையில் நடந்து சென்று நின்றார்கள். தொழ வைத்தார்கள். அவர்களின் பின்னே மக்களும் நின்றார்கள். நீண்ட நேரம் நிலையில் இருந்தார்கள். பின்பு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு எழுந்து, முந்தின நிலை போன்று இல்லாமல் நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு முந்தின ருகூஉ போலன்றி நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு எழுந்து, ஸஜ்தாச் செய்தார்கள். பின்பு முந்திய நிலை போலன்றி நீண்ட நேரமாக நின்றார்கள். பின்பு முதல் ருகூஉ போலன்றி நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு எழுந்து, முந்திய நிலை போலன்றி நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு எழுந்து, ஸஜ்தா செய்தார்கள். பின்பு திரும்பினார்கள். அப்போது அல்லாஹ் நாடிய அளவுக்கு கூற வேண்டியதைக்

أَنَّ يَهُوديَّةً جَاءَتْ تَسْأَلُهَا. فَقَالَتْ: أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابِ الْقَبْرِ. فَسَأَلَتْ عَائِشَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُعَذَّبُ النَّاسُ فِي قُبُورِهِمْ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «عَائِذًا بِاللَّهِ مِنْ ذَلِكَ». ثُمَّ رَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ذَاتَ غَدَاةٍ مَرْكَبًا. فَخَسَفَتِ الشَّمْسُ. فَرَجَعَ ضُحًى. فَمَرَّ بَيْنَ ظَهْرَانَيِ الْحُجَرِ. ثُمَّ قَامَ يُصَلِّي وَقَامَ النَّاسُ وَرَاءَهُ. فَقَامَ قِيَامًا طَوِيلًا. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا. ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ رَفَعَ فَسَجَدَ. ثُمَّ قَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ رَفَعَ ثُمَّ سَجَدَ. ثُمَّ انْصَرَفَ، فَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ. ثُمَّ «أَمَرَهُمْ أَنْ يَتَعَوَّذُوا مِنْ عَذَابِ الْقَبْرِ»


muwatta-malik-508

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

508. சூரிய கிரகணம் ஏற்பட்டது.அப்போது நபித்தோழர்களும், நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். நீண்ட நேரம் சூரா பகரா (2வது அத்தியாயம்) ஓதும் அளவுக்கு நின்றார்கள். பின்பு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு (இருமுறை) ஸஜ்தா செய்தார்கள். பின்பு முந்தின ரக்அத்தினைப் போன்று (நீண்ட நேரமின்றி சுமாரான அளவுக்கு) நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு முந்திய ருகூஉ போன்றில்லாமல் (சுமாரான அளவுக்கு) நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு ருகூஉ விலிருந்து எழுந்து முந்திய நிலை போன்றில்லாமல் (சுமாரான அளவுக்கு) நீண்ட நேரம் நின்றார்கள். முந்திய ருகூஉ போலன்றி (சுமாராக) நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பின்பு (இருமுறை) ஸஜ்தாச் செய்து (தொழுகையை) முடித்தார்கள். (அதுசமயம்) சூரியன் (கிரகண நிலையிலிருந்து வெளியேறி) பிரகாசமாயிருந்தது.

நிச்சயமாக சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இருந்து இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவர் இறந்திட்டதாலோ, பிறப்பதினாலோ அவ்விரண்டையும் கிரகணம் பீடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இந்த உங்களின் இடத்தில் எதையோ எடுப்பது போன்றும் பின்பு நீங்கள் பின் வாங்குவது போன்றும் கண்டோம்’ என்று நபித்தோழர்கள் கூறினர்.

خَسَفَتِ الشَّمْسُ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ مَعَهُ: فَقَامَ قِيَامًا طَوِيلًا نَحْوًا مِنْ سُورَةِ الْبَقَرَةِ، قَالَ: ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ سَجَدَ. ثُمَّ قَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ سَجَدَ. ثُمَّ انْصَرَفَ وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ. فَقَالَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ، فَاذْكُرُوا اللَّهَ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ رَأَيْنَاكَ تَنَاوَلْتَ شَيْئًا فِي مَقَامِكَ هَذَا، ثُمَّ رَأَيْنَاكَ تَكَعْكَعْتَ. فَقَالَ: «إِنِّي رَأَيْتُ الْجَنَّةَ. فَتَنَاوَلْتُ مِنْهَا عُنْقُودًا. وَلَوْ أَخَذْتُهُ لَأَكَلْتُمْ مِنْهُ مَا بَقِيَتِ الدُّنْيَا. وَرَأَيْتُ النَّارَ فَلَمْ أَرَ كَالْيَوْمِ مَنْظَرًا قَطُّ أَفْظَعَ. وَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ»، قَالُوا: لِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لِكُفْرِهِنَّ»، قِيلَ: أَيَكْفُرْنَ بِاللَّهِ؟ قَالَ: ” وَيَكْفُرْنَ الْعَشِيرَ، وَيَكْفُرْنَ الْإِحْسَانَ. لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ كُلَّهُ، ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ: مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ


muwatta-malik-507

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 119

கிரகணத் தொழுகை முறை

507. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அன்று நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு தொழ வைத்தார்கள். (அதுசமயம்) அவாகள் (தொழ)நின்றார்கள். (நீண்ட கிராஅத் மூலம்) நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு ருகூஉ செய்தார்கள். அப்போது ருகூஉ வையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்பு (கிராஅத் ஓதியவர்களாக) நின்றார்கள். அது முதல் நிலையை விட சற்றுக் குறைவாக நின்றார்கள். பின்பு ருகூஉ செய்தார்கள். முதலில் செய்த நீண்ட நேர ருகூஉ போன்று இல்லாமல் குறைவான நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு (ருகூஉ வில் இருந்து) எழுந்து ஸஜ்தா செய்தார்கள். பின்பு முன்பு போலவே மற்றொரு ரக்அத் தொழ வைத்து, தொழுகையை முடித்தார்கள். அப்போது சூரியன் கிரகண நிலையில் இருந்து நீங்கி இருந்தது. உடனே மக்களுக்கு உரை நிகழ்த்தலானார்கள். அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பின்பு, ‘நிச்சயமாக இந்த சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவர் இறந்து போனதற்காகவோ, பிறப்பதற்காகவோ, அவ்விரண்டும் கிரகணத்திற்கும் வருவதில்லை. நீங்கள் கிரகண நிலையைக் கண்டால், அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள். அவனைப் பெருமைப்படுத்துங்கள்.தர்மம் செய்யுங்கள் என்று கூறி விட்டு, முஹம்மதின் சமுதாயமே! அல்;லாஹ்வின் மீது சத்தியமாக

خَسَفَتِ الشَّمْسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاسِ، فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ قَامَ فَأَطَالَ الْقِيَامَ، وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ ثُمَّ رَفَعَ فَسَجَدَ. ثُمَّ فَعَلَ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ مِثْلَ ذَلِكَ. ثُمَّ انْصَرَفَ وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ. فَخَطَبَ النَّاسَ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: ” إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ. لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَادْعُوا اللَّهَ. وَكَبِّرُوا، وَتَصَدَّقُوا، ثُمَّ قَالَ: يَا أُمَّةَ مُحَمَّدٍ وَاللَّهِ مَا مِنْ أَحَدٍ أَغْيَرَ مِنَ اللَّهِ أَنْ يَزْنِيَ عَبْدُهُ أَوْ تَزْنِيَ أَمَتُهُ. يَا أُمَّةَ مُحَمَّدٍ وَاللَّهِ. لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ، لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا


muwatta-malik-506

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

506. சூரியன் மறையும் வரை நபி(ஸல்) அவர்கள் (கன்தக்) அகழ்ப் போரில் லுஹரையும், அஸரையும் தொழவில்லை என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.

பயத் தொழுகை விஷயத்தில் நான் கேள்விப்பட்டதில் எனக்கு மிக விருப்பமானது ஸாலிஹ் இப்னு கவ்வாத் வழியாக காஸிம் இப்னு முஹம்மத் அறிவிக்கும் ஹதீஸ்கள் தான் என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


«مَا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ وَالْعَصْرَ، يَوْمَ الْخَنْدَقِ حَتَّى غَابَتِ الشَّمْسُ»

قَالَ مَالِكٌ: «وَحَدِيثُ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي صَلَاةِ الْخَوْفِ»


muwatta-malik-505

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

505. அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களிடம் பயத்தொழுகையைப் பற்றி கேட்கப்பட்ட போது, ‘இமாமும், அவருடன் ஒருபிரிவினரும் (கிப்லாவை) முன்னோக்குவர். அவர்களுக்கு இமாம் ஒரு ரக்அத்தை தொழ வைப்பார். அவருக்கும் பகைவருக்குமிடையே தொழாத ஒரு பிரிவினர் இருப்பர். அவருடன் இருப்போர் ஒரு ரக்அதைத் தொழுததும் ஸலாம் கொடுக்காமல் தொழாமல் இருப்போரின் இடத்திற்கு பின்னோக்கி வருவார்கள். தொழாதவர்கள் முன்னோக்கி வந்து இமாமுடன் ஒரு ரக்அத் தொழுவார்கள். உடனே இமாம் இரண்டு ரக்அத் தொழுதவராக முடித்துக் கொள்வார்கள். பின்பு இரண்டு பிரிவினாரில் ஒவ்வொருவரும் இமாம் தொழுகையை முடித்த பின்பு தனித்தனியே ஒரு ரக்அத் தொழுவார்கள். இரண்டு பிரிவினருடைய இரண்டு ரக்அத் தொழுதவர்களாக ஆகிவிடுவர். போரில் பயம் கடுமையாக இருந்தால் அவர்கள் இருந்த இடத்தில் நின்றவாறு அ;லலது வாகனத்தில் இருந்து கிப்லாவை முன்னோக்கியோ அல்லது முன்னோக்காமலோ தொழுவார்கள் என்று பதில் கூறினார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.

இப்னு உமர்(ரலி) அவர்கள் இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்தே அறிவித்தார்கள் என நான் கருதுகிறேன் என நாபிஉ கூறியதாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا سُئِلَ عَنْ صَلَاةِ الْخَوْفِ قَالَ: «يَتَقَدَّمُ الْإِمَامُ وَطَائِفَةٌ مِنَ النَّاسِ. فَيُصَلِّي بِهِمُ الْإِمَامُ رَكْعَةً. وَتَكُونُ طَائِفَةٌ مِنْهُمْ بَيْنَهُ وَبَيْنَ الْعَدُوِّ لَمْ يُصَلُّوا. فَإِذَا صَلَّى الَّذِينَ مَعَهُ رَكْعَةً، اسْتَأْخَرُوا مَكَانَ الَّذِينَ لَمْ يُصَلُّوا، وَلَا يُسَلِّمُونَ. وَيَتَقَدَّمُ الَّذِينَ لَمْ يُصَلُّوا فَيُصَلُّونَ مَعَهُ رَكْعَةً. ثُمَّ يَنْصَرِفُ الْإِمَامُ، وَقَدْ صَلَّى رَكْعَتَيْنِ، فَتَقُومُ كُلُّ وَاحِدَةٍ مِنَ الطَّائِفَتَيْنِ فَيُصَلُّونَ لِأَنْفُسِهِمْ رَكْعَةً رَكْعَةً. بَعْدَ أَنْ يَنْصَرِفَ الْإِمَامُ. فَيَكُونُ كُلُّ وَاحِدَةٍ مِنَ الطَّائِفَتَيْنِ قَدْ صَلَّوْا رَكْعَتَيْنِ، فَإِنْ كَانَ خَوْفًا هُوَ أَشَدَّ مِنْ ذَلِكَ، صَلَّوْا رِجَالًا قِيَامًا عَلَى أَقْدَامِهِمْ. أَوْ رُكْبَانًا مُسْتَقْبِلِي الْقِبْلَةِ. أَوْ غَيْرَ مُسْتَقْبِلِيهَا»

قَالَ مَالِكٌ: قَالَ نَافِعٌ لَا أَرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ إِلَّا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


muwatta-malik-503

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 118

பயத் தொழுகை

503. (படையில்) ஒரு பிரிவினர் இமாமுடன் இருக்கவும், மற்றொரு பிரிவினர் எதிரிகளின் எதிரேயும் இருக்க இமாம் (தொழ) தயாராகுவார். ஒரு ரக்அத்தின் ருகூஉ வையும், ஸஜ்தாவையும் தன்னுடன் இருப்பவர்களுடன் சேர்ந்து இமாம் செய்வார். பின்பு நிலைக்கு வருவார். நிலையிலேயே இருப்பார். இமாம் நின்று கொண்டிருக்கும் போதே அவர்கள் தாங்களாகவே மற்றொரு ரக்அத்தை பூர்த்தி செய்து விட்டு. ஸலாம் கூறி முடிப்பார்கள். பின்பு எதிரிகளை எதிர் நோக்குவா. ஏற்கனவே தொழாமல் இருந்த மற்றவர்கள் முன்னோக்குவார்கள். இமாமுக்கும் பின்னே நின்று தக்பீர் கூறுவார்கள். அவர்களுடன் ருகூஉ ம், ஸஜ்தாவும் செய்து ஸலாம் கொடுத்து விடுவார். உடன் இவர்கள் எழுந்து தாங்களாகவே இரண்டாவது ரக்அத்தை முடித்து ஸலாம் கூறுவார்கள். இதுவே பயத் தொழுகை முறையாகும் என ஸாலிஹ் இப்னு கவ்வாத் அவர்களிடம் ஸஹ்ல் இப்னு அபூ ஹஸமா(ரலி) கூறினார்கள்.


عَمَّنْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ ذَاتِ الرِّقَاعِ «صَلَاةَ الْخَوْفِ، أَنَّ طَائِفَةً صَفَّتْ مَعَهُ، وَصَفَّتْ طَائِفَةٌ وِجَاهَ الْعَدُوِّ. فَصَلَّى بِالَّتِي مَعَهُ رَكْعَةً. ثُمَّ ثَبَتَ قَائِمًا، وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ. ثُمَّ انْصَرَفُوا فَصَفُّوا وِجَاهَ الْعَدُوِّ، وَجَاءَتِ الطَّائِفَةُ الْأُخْرَى، فَصَلَّى بِهِمُ الرَّكْعَةَ الَّتِي بَقِيَتْ مِنْ صَلَاتِهِ. ثُمَّ ثَبَتَ جَالِسًا، وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ، ثُمَّ سَلَّمَ بِهِمْ»


muwatta-malik-501

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 117

பெருநாள் அன்று இமாம் புறப்படுதல், குத்பா கேட்க காத்திருத்தல்

501. நோன்பு பெருநாளும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் தொழும் நேரத்தில் தொழுமிடத்தை அடையும் விதத்தில் இமாம் புறப்பட்டுச் செல்வது நம்மிடத்தில் கருத்து வேறுபாடு இல்லாத சுன்னத்தாகும் என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா கூறுகின்றார்கள்.


«مَضَتِ السُّنَّةُ الَّتِي لَا اخْتِلَافَ فِيهَا عِنْدَنَا، فِي وَقْتِ الْفِطْرِ وَالْأَضْحَى، أَنَّ الْإِمَامَ يَخْرُجُ مِنْ مَنْزِلِهِ قَدْرَ مَا يَبْلُغُ مُصَلَّاهُ، وَقَدْ حَلَّتِ الصَّلَاةُ»


muwatta-malik-500

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

500. நோன்புப் பெருநாள் அன்று தொழுகைக்கு முன் பள்ளியில் தன் தந்தை உர்வா தொழுவார்கள் என ஹாஷிம் இப்னு உர்வா கூறுகின்றார்கள்.

குறிப்பு: நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்-பின் நபில் தொழுகை தொழுததில்லை என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா வில் இடம் பெற்றுள்ளது).


أَنَّهُ كَانَ «يُصَلِّي يَوْمَ الْفِطْرِ قَبْلَ الصَّلَاةِ فِي الْمَسْجِدِ»


muwatta-malik-499

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 116

பெருநாள் தொழுகைக்கு முன்-பின் தொழுதிட அனுமதி

499. நோன்புப் பெருநாள் அன்னு தொழுமிடத்திற்கு செல்லும் முன் நான்கு ரக்அத்கள் தன் தந்தை ஸாலிம் தொழுவார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு காஸிம் கூறுகிறார்கள்.


أَنَّ أَبَاهُ الْقَاسِمَ كَانَ: «يُصَلِّي قَبْلَ أَنْ يَغْدُوَ إِلَى الْمُصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ»


muwatta-malik-498

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

498. சூரியன் உதயமாகும் முன் சுப்ஹு தொழதப் பின் பெருநாள் தொழுமிடத்திற்கு ஸயீத் இப்னு முஸய்யப் அவர்ள் செல்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ كَانَ «يَغْدُو إِلَى الْمُصَلَّى، بَعْدَ أَنْ يُصَلِّيَ الصُّبْحَ، قَبْلَ طُلُوعِ الشَّمْسِ»


Next Page » « Previous Page