Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-523

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

523. நபி(ஸல்) அவர்கள் கிப்லாவின் (திசை) சுவற்றில் எச்சிலையோ, காரல் எச்சிலையோ, சளியையோ கண்டால் நபி(ஸல்) அவர்கள் அதை சுரண்டுவார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம் ல் இடம் பெற்றுள்ளது).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَأَى فِي جِدَارِ الْقِبْلَةِ بُصَاقًا أَوْ مُخَاطًا أَوْ نُخَامَةً فَحَكَّهُ»


muwatta-malik-522

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 126

‘கிப்லா’ திசையில் எச்சில் துப்புவது கூடாது

522. நபி(ஸல்) அவர்கள் கிப்லா – (திசை) சுவற்றில் காரல் எச்சிலைக் கண்டு, அதைச் சுரண்டினார்கள். பின்பு மக்களை நோக்கியவர்களாக ‘உங்களில் ஒருவர் தொழுதால் தன் முகத்தின் முன்பாக எச்சில் துப்ப வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் ஒருவன் தொழும் போது அவன் முன்னே இருக்கிறான்’ என்று கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى بُصَاقًا فِي جِدَارِ الْقِبْلَةِ، فَحَكَّهُ. ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَبْصُقْ قِبَلَ وَجْهِهِ، فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قِبَلَ وَجْهِهِ إِذَا صَلَّى»


muwatta-malik-520

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

520. சிறுநீர், மலம் கழித்து கிப்லாவை முன்னோக்குவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என அன்சாரி நபித் தோழர்களில் ஒருவர் கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ تُسْتَقْبَلَ الْقِبْلَةُ لِغَائِطٍ أَوْ بَوْلٍ»


muwatta-malik-519

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 124

மல, ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவது கூடாது

519. உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கச் சென்றால், மறைவுறுப்பின் மூலம் கிப்லாவை முன்னோக்குதல், பின்னோக்குதல் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்கும் நிலையில் நான் எப்படி இந்த கழிவறைகளை பயன்படுத்துவது என்பதை அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான்அறிய மாட்டேன் என்று எகிப்தில் இருக்கும் போது அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் கூறியதாக, அபூதல்ஹா(ரலி) அவர்களின் அடிமை என்று கூறப்படும் ராபிஉ இப்னு இஸ்ஹாக் கூறுகின்றார்கள்.

(இது நஸயீ யில் உள்ளது).


أَنَّهُ سَمِعَ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ بِمِصْرَ يَقُولُ: وَاللَّهِ مَا أَدْرِي كَيْفَ أَصْنَعُ بِهَذِهِ الْكَرَابِيسِ؟

وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا ذَهَبَ أَحَدُكُمُ الْغَائِطَ أَوِ الْبَوْلَ، فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا يَسْتَدْبِرْهَا بِفَرْجِهِ»


muwatta-malik-518

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

518. மக்கள் மழை கொடுக்கப்பட்ட நிலையில் காலையில் எழுந்தால், வளம் தரும் நட்சத்திரம் மூலமே மழை கொடுக்கப்பட்டோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அல்லாஹ், மக்களுக்கு தன் கருணையில் கொடுக்க எண்ணியதை, எவரும் தடுக்க முடியாது. அவன் தடுத்ததை அதன் பின் ஒருவருக்கு கொடுக்க (எவராலும்) முடியாது’ என்ற வசனத்தை அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

இந்தத் தகவல் தனக்கு செய்தியாக கிடைத்தது என மாலிக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது மற்ற அறிவிப்பாளர்கள் வழியாகவோ அறிவிக்கவில்லை.)


إِذَا أَصْبَحَ وَقَدْ مُطِرَ النَّاسُ، ” مُطِرْنَا بِنَوْءِ الْفَتْحِ ثُمَّ يَتْلُو هَذِهِ الْآيَةَ {مَا يَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِنْ رَحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا، وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِنْ بَعْدِهِ} [فاطر: 2]


muwatta-malik-516

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 123

நட்சத்திரங்கள் மூலம் மழை பெய்யத் தேடுவது

516. ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த போது இரவு மழை பெய்திருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு சுப்ஹ் தொழ வைத்தார்கள். (தொழுகை) முடிந்த போது, மக்களை முன்னோக்கிய அவர்கள், ‘உங்கள் இறைவன் என்ன கூறுகிறான்? என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள்’ என நபித்தோழர்கள் கூறினார்கள். ‘என் அடியார்களில் ஒருவர்என்னை நம்பியவராகவும், ஒருவர் என்னை மறுத்தவராகவும் காலையில் எழுகிறார்கள். ‘அல்லாஹ்வின் அருளால், அவன் கருணையினால் நாம் மழை கொடுக்கப்பட்டுள்ளோம்’ என்று கூறினால், இதன் மூலம் அவர் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவராக உள்ளார். இன்ன, இன்ன நட்சத்திரம் மூலமாக மழை கொடுக்கப்பட்டோம் என்று கூறினால், இதன் மூலம் அவர் என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவராவார்’ என்று அல்லாஹ் கூறினான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு காலித் அல் ஜுஹ்னீ(ரலி) அறிவிக்கின்றார்கள்.


صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ، عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلِ. فَلَمَّا انْصَرَفَ، أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «أَتَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ؟» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ، قَالَ: ” أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي، وَكَافِرٌ بِي. فَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ. فَذَلِكَ مُؤْمِنٌ بِي كَافِرٌ بِالْكَوْكَبِ. وَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا، فَذَلِكَ كَافِرٌ بِي، مُؤْمِنٌ بِالْكَوْكَبِ


muwatta-malik-514

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

514. நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, இறைத்தூதர்(ஸல்) அவர்களே! விவசாயம் அழிந்து விட்டது. கால்நடைகள் மடிகின்றன. அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்;’ என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தார்கள். வெள்ளிக் கிழமை கொடுக்கப்பட்டோம். (மறு வெள்ளிக்கிழமை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களே!” வீடுகள் இடிந்தன. கால்நடைகள் அழிந்து விட்டன. விவசாயம் அழிகிறது’ என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், இறைவா! மலைகள் மீதும், ஓடைகள் வெளிகளிலும், மரத்தின் வேர்களின் மீதும் (மழையைப்) பொழியச் செய்வாயாக! என்று கூறினார்கள். உடனே மழை, ஆடை விலகியது போல் விலகி விட்டது.

இதை அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்


جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَلَكَتِ الْمَوَاشِي، وَتَقَطَّعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ. «فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَمُطِرْنَا مِنَ الْجُمُعَةِ إِلَى الْجُمُعَةِ». قَالَ: فَجَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ تَهَدَّمَتِ الْبُيُوتُ، وَانْقَطَعَتِ السُّبُلُ، وَهَلَكَتِ الْمَوَاشِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ ظُهُورَ الْجِبَالِ وَالْآكَامِ وَبُطُونَ الْأَوْدِيَةِ وَمَنَابِتَ الشَّجَرِ». قَالَ: فَانْجَابَتْ عَنِ الْمَدِينَةِ انْجِيَابَ الثَّوْبِ


muwatta-malik-513

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 122

மழைக்காக வேண்டும் முறை

513. அல்லாஹும்மஸ்கி இபாதக்க வ பஹீமதக்க, வன்ஷுர் ரஹ்மதக்க, வ அஹ்யீ பலதக்க மய்யித’ என்று நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டி துஆச் செய்வார்கள் என அம்ரு இப்னு ஷுஐபு(ரலி) கூறுகின்றார்கள்.

(துஆவின் பொருள்: இறைவா! உன் அடியார்களுக்கும், உன் பிராணிகளுகு;கும் மழையைப் பொழிவாயாக! உன் அருளை (உலகம் முழுவதும்) பரத்துவாயாக! இறந்து (காய்ந்து) போன உன் ஊரை (மழை மூலம்) உயிர்ப்பிப்பாயாக!)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا اسْتَسْقَى قَالَ: «اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهِيمَتَكَ، وَانْشُرْ رَحْمَتَكَ، وَأَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ»


muwatta-malik-511

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 121

மழைத் தொழுகை முறை

511.  (திறந்த வெளியில் உள்ள) தொழுமிடத்திற்கு நபி(ஸல்) அவர்கள் வந்து மழைத் தொழுகை நடத்தினார்கள். பின்பு (கிப்லாவை) முன்னோக்கியவர்களாக தன் மேலாடையை புரட்டி விட்டுக் கொண்டார்கள் என்று அப்துல்லா இப்னு ஸைத்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى. فَاسْتَسْقَى، وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ»


muwatta-malik-510

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 120

கிரகணத் தொழுகை பற்றி..

510. சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, நான்ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது மக்கள் நின்று தொழுது கொண்டிருந்தனர். உடன் ஆயிஷா(ரலி) அவர்களும் நின்று தொழுதார்கள். மக்களுக்கு என்ன நேர்ந்தது? என நான் கேட்டேன். ஆயிஷா(ரலி) அவர்கள் வானத்தின் பக்கம் தன் கையால் சமிக்ஞை செய்தார்கள். பின்பு, ‘சுப்ஹானல்லாஹ்’ என்று கூறினார்கள். ‘இது ஒரு அத்தாட்சி தானே’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம்’ என தன் தலை மூலமாக சமிக்ஞை செய்தார்கள். நானும் தொழ நின்றேன். எனக்கு மயக்கம் ஏற்பட்டது. நான் என் தலை மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

”பின்பு” இதுவரை நான் பார்த்திராத சொர்க்கத்தையும், நரகத்தையும் என் இந்த இடத்திலேயே நான் காட்டப்பட்டேன். நீங்கள் கப்ரில் சோதிக்கப்படுவீர்கள். விரைவில் தஜ்ஜால் மூலமும் சோதிக்கப்படுவீர்கள். உங்களில் ஒருவர் கொண்டு வரப்பட்டதும், ‘இவர் பற்றி நீ அறிந்தது என்ன? என்று அவரிடம் கேட்கப்படும். அப்போது ஒரு இறைவிசுவாசி, ‘இவர், முஹம்மது(ஸல்) எனும் இறைத்தூதர் ஆவார். எங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் கொண்டு வந்தார். நாங்கள் ஏற்றோம். நம்பிக்கை கொண்டோம். நாங்கள் (அவரை) பின்பற்றினோம் என்று கூறுவார். அப்போது

أَتَيْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ خَسَفَتِ الشَّمْسُ فَإِذَا النَّاسُ قِيَامٌ يُصَلُّونَ. وَإِذَا هِيَ قَائِمَةٌ تُصَلِّي. فَقُلْتُ: مَا لِلنَّاسِ؟ فَأَشَارَتْ بِيَدِهَا نَحْوَ السَّمَاءِ، وَقَالَتْ: سُبْحَانَ اللَّهِ. فَقُلْتُ: آيَةٌ؟ فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ نَعَمْ. قَالَتْ: فَقُمْتُ حَتَّى تَجَلَّانِي الْغَشْيُ. وَجَعَلْتُ أَصُبُّ فَوْقَ رَأْسِي الْمَاءَ، فَحَمِدَ اللَّهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَثْنَى عَلَيْهِ. ثُمَّ قَالَ: ” مَا مِنْ شَيْءٍ كُنْتُ لَمْ أَرَهُ إِلَّا قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا. حَتَّى الْجَنَّةُ وَالنَّارُ. وَلَقَدْ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ مِثْلَ أَوْ قَرِيبًا مِنْ فِتْنَةِ الدَّجَّالِ لَا أَدْرِي أَيَّتَهُمَا قَالَتْ أَسْمَاءُ يُؤْتَى أَحَدُكُمْ فَيُقَالُ لَهُ: مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ؟ فَأَمَّا الْمُؤْمِنُ أَوِ الْمُوقِنُ لَا أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ، فَيَقُولُ هُوَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالْهُدَى. فَأَجَبْنَا، وَآمَنَّا، وَاتَّبَعْنَا، فَيُقَالُ لَهُ: نَمْ صَالِحًا، قَدْ عَلِمْنَا إِنْ كُنْتَ لَمُؤْمِنًا. وَأَمَّا الْمُنَافِقُ أَوِ الْمُرْتَابُ لَا أَدْرِي أَيَّتَهُمَا قَالَتْ أَسْمَاءُ، فَيَقُولُ: لَا أَدْرِي سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ


Next Page » « Previous Page