Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-483

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

483. பள்ளியில் வியாபாரம் செய்வோரைக் கண்டால் அவரை அழைத்து உன்னிடம் இருப்பது என்ன? நீ என்ன விரும்புகின்றாய்? என்று அதாஉ இப்ன யஸார் அவர்கள் கேட்பார்கள். அவர் தன் வியாபாரம் செய்வதைப் பற்றிக் கூறினால், ‘நீ உலக கடைவீதிக்குச் செல், இதுவோ மறுமையின் கடையாகும்’ என்று கூறுவார்கள் என்று தனக்கு செய்தி கிடைத்தாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ كَانَ إِذَا مَرَّ عَلَيْهِ بَعْضُ مَنْ يَبِيعُ فِي الْمَسْجِدِ، دَعَاهُ فَسَأَلَهُ مَا مَعَكَ؟ وَمَا تُرِيدُ؟ فَإِنْ أَخْبَرَهُ أَنَّهُ يُرِيدُ أَنْ يَبِيعَهُ، قَالَ: «عَلَيْكَ بِسُوقِ الدُّنْيَا. وَإِنَّمَا هَذَا سُوقُ الْآخِرَةِ»


muwatta-malik-482

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

482. இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவ்விருவாரில் ஒருவர் மற்றவருக்கு 40 நாட்களுக்கு (இரவுகளுக்கு) முன் இறந்து விட்டார். நபி(ஸல்) அவர்களிடம் முதல் நபாரின் சிறப்புப் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இரண்டாம் நபர் முஸ்லிமாக இருக்கவில்லையா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! ஆம். அவர் குற்றமற்றவராக இருந்தார் என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அவாரின் தொழுகை எதை ஏற்படுத்தும் என்பதை உங்களுக்கு அறிவித்தது எது?’ நிச்சயமாக தொழுகையின் உதாரணம், உங்களிருவாரின் வாசலில் நிறைந்து ஓடும் ஆறு உதாரணமாகும். அதில் அவர் ஐந்து தடவை ஒவ்வொரு நாளும் குளிக்கிறார். அவாரின் அழுக்கு ஏதும் இருக்காது என அறிவீர்கள் தானே. (இவ்வாறு தான்) அவாரின் தொழுகை எதைப் பெற்றுத்தந்தது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்’ என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள். இதை ஸஹ்து இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் கூறியதாக ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

….

இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் தனது சகோதரருக்கு நாற்பது இரவுகள் முன்னதாக மரணமடைந்தார். முந்தியவரின் சிறப்பு நபி (ஸல்) அவர்களிடம் குறிப்பிடப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மற்றவர் முஸ்லிமாக இருக்கவில்லையா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம், அல்லாஹ்வின்

كَانَ رَجُلَانِ أَخَوَانِ. فَهَلَكَ أَحَدُهُمَا قَبْلَ صَاحِبِهِ بِأَرْبَعِينَ لَيْلَةً. فَذُكِرَتْ فَضِيلَةُ الْأَوَّلِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ: «أَلَمْ يَكُنِ الْآخَرُ مُسْلِمًا؟» قَالُوا: بَلَى. يَا رَسُولَ اللَّهِ، وَكَانَ لَا بَأْسَ بِهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا يُدْرِيكُمْ مَا بَلَغَتْ بِهِ صَلَاتُهُ؟» إِنَّمَا مَثَلُ الصَّلَاةِ كَمَثَلِ نَهْرٍ غَمْرٍ عَذْبٍ بِبَابِ أَحَدِكُمْ. يَقْتَحِمُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ. فَمَا تَرَوْنَ ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ؟ فَإِنَّكُمْ لَا تَدْرُونَ مَا بَلَغَتْ بِهِ صَلَاتُهُ؟


muwatta-malik-481

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

481. எவர் தான் செய்யும் (வணக்க வழிபாட்டுச்) செயலில் நிரந்தரமாக இருக்கிறாரோ அவாரின் அந்தச் செயலே நபி(ஸல்) அவர்களுக்கு மிக விருப்பமாகும் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


كَانَ «أَحَبُّ الْعَمَلِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي يَدُومُ عَلَيْهِ صَاحِبُهُ»


muwatta-malik-480

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

480. ஒரு அடியானின் செயலில் எதிர்ப்பார்க்கப்படுவதில் முதன்மையானது தொழுகை தான். அதை ஏற்கப்பட்டு விட்டால், அவனின் இதரச் செயல்கள் கவனத்தில் கொள்ளப்படும். அது ஏற்கப்படா விட்;டால்அவனின் செயல்கள் எதுவும் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்று தான் செய்தி அறிந்ததாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


بَلَغَنِي أَنَّ: «أَوَّلَ مَا يُنْظَرُ فِيهِ مِنْ عَمَلِ الْعَبْدِ الصَّلَاةُ. فَإِنْ قُبِلَتْ مِنْهُ، نُظِرَ فِيمَا بَقِيَ مِنْ عَمَلِهِ. وَإِنْ لَمْ تُقْبَلْ مِنْهُ، لَمْ يُنْظَرْ فِي شَيْءٍ مِنْ عَمَلِهِ»


muwatta-malik-479

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

479. அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘நீ அறிஞர்கள் அதிகம் உள்ள காலத்தில் உள்ளாய். மேலும் ஓதுபவர்கள் குறைவாக உள்ளனர். இக்காலத்தில் குர்ஆன் சட்டங்கள் பேணப்படும். அதக் எழுத்து வடிவம் கவனத்தில் விடப்படும். யாசகம் கேட்போர் குறைவாக உள்ளனர். நன்கொடை வழங்குவோர் அதிகம் உள்ளனர். இக்காலத்தில் தொழுகையை நீட்டுவார்கள். (குத்பா) உரையை குறைத்து விடுவார்கள். தங்களின் மனோ இச்சைகளுக்கு முன்பு தங்களின் செயல்களை முற்படுத்துவார்கள். இனி மக்களிடையே ஒரு காலம் வரும். அதில் அறிஞர்கள் குறைவாக இருப்பர். ஓதுபவர்கள் அதிகம் இருப்பார்கள். குர்ஆனின் எழுத்து வடிவம் பேணப்படும். அதன் சட்டங்கள் வீணடிக்கப்படும். யாசகம் கேட்போர் அதிகம் இருப்பார்கள். (நன்கொடை) வழங்குவோர் குறைவாக இருப்பார்கள். அதில் உரையை நீட்டுவார்கள். தொழுகையை குறைப்பார்கள். தங்களின் செயல்களுக்கு முன்பு தங்களின் மனோ இச்சைகளை முற்படுத்துவார்கள்’ என்று கூறினார்கள். இதை யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


قَالَ لِإِنْسَانٍ: «إِنَّكَ فِي زَمَانٍ كَثِيرٌ فُقَهَاؤُهُ، قَلِيلٌ قُرَّاؤُهُ، تُحْفَظُ فِيهِ حُدُودُ الْقُرْآنِ، وَتُضَيَّعُ حُرُوفُهُ. قَلِيلٌ مَنْ يَسْأَلُ. كَثِيرٌ مَنْ يُعْطِي. يُطِيلُونَ فِيهِ الصَّلَاةَ، وَيَقْصُرُونَ الْخُطْبَةَ يُبَدُّونَ. أَعْمَالَهُمْ قَبْلَ أَهْوَائِهِمْ، وَسَيَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ قَلِيلٌ فُقَهَاؤُهُ، كَثِيرٌ قُرَّاؤُهُ، يُحْفَظُ فِيهِ حُرُوفُ الْقُرْآنِ وَتُضَيَّعُ حُدُودُهُ. كَثِيرٌ مَنْ يَسْأَلُ، قَلِيلٌ مَنْ يُعْطِي، يُطِيلُونَ فِيهِ الْخُطْبَةَ، وَيَقْصُرُونَ الصَّلَاةَ. يُبَدُّونَ فِيهِ أَهْوَاءَهُمْ قَبْلَ أَعْمَالِهِمْ»


muwatta-malik-478

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

478. உமர்(ரலி), உதுமான்(ரலி), இருவரும் இவ்வாறே செய்வார்கள் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَعُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا كَانَا يَفْعَلَانِ ذَلِكَ


muwatta-malik-477

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

477. நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் கால் மேல் கால் போட்டு, மல்லாந்து படுத்திருக்க தான் கண்டதாக அப்பாத் இப்னு தமீம் அவர்களின் சிறிய தந்தை கூறுகின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது).


أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مُسْتَلْقِيًا فِي الْمَسْجِدِ وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى»


muwatta-malik-476

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

476. குருடரான நிலையில் தன் மக்களுக்கு இமாமாக தொழுகை நடத்தக் கூடிய கத்பான் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இவ்வூர் கடும் இருளும் மழையும், தண்ணீரும் கூடுதலாக உள்ளது. நானோ பார்வையற்ற மனிதன். எனவே, இறைத்தூதர் அவர்களே! என் வீட்டில் ஒரு இடத்தில் தொழுங்கள். நான் அதை என் தொழுமிடமாக நான் ஆக்கிக் கொள்வேனே?’ என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் (அவரது வீட்டுக்கு) வந்து, ‘நான் எங்கு தொழ விரும்புகிறீர்?’ எனக் கேட்டார்கள். வீட்டின் ஒரு இடத்தை சுட்டிக் காட்டினார். அதில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள் என் மஹ்மூத் இப்னு ரபீஉ அன்சாரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ كَانَ يَؤُمُّ قَوْمَهُ وَهُوَ أَعْمَى، وَأَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّهَا تَكُونُ الظُّلْمَةُ وَالْمَطَرُ وَالسَّيْلُ. وَأَنَا رَجُلٌ ضَرِيرُ الْبَصَرِ. فَصَلِّ يَا رَسُولَ اللَّهِ فِي بَيْتِي مَكَانًا أَتَّخِذْهُ مُصَلًّى، فَجَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ؟» فَأَشَارَ لَهُ إِلَى مَكَانٍ مِنَ الْبَيْتِ. فَصَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


muwatta-malik-475

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

475. ‘அல்லாஹும்ம லா தஜ்அல் கப்ரி வஸனய் யுஹ்பது” (இறைவா! என் கப்;ரை வணங்குமிடமாக ஆக்கி விடாதே) என்று நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு, தங்கள் நபிமார்களின் கப்ருகளை பள்ளிகளாக ஆக்கிக் கொண்ட சிலர் மீது அல்லாஹ்வின் கோபம் அதிகாரித்தது என்றும் கூறினார்கள். இதை அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.


«اللَّهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنًا يُعْبَدُ. اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ»


muwatta-malik-474

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

474. மக்களுக்கு மத்தியில் நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்திருந்த போது, அவர்களிடம் ஒருவர் வந்து, அவர்களிடம் ரகசியமாகக் கூறினார். எதை அவர் ரகசியமாகக் கூறினார் என்பது விளங்கப்படவில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் சப்தமிட்டு கூறியதன்பின்பே தொரிந்தது. அவர். நயவஞ்சகர்களில் ஒருவரைக் கொலை செய்ய நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி வேண்டி உள்ளர். (நயவஞ்சகரான) அவர், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்”” என்று சாட்சி கூறவில்லையா? என்று நபி(ஸல்) அவாகள் சப்தமிட்டுக் கேட்டார்கள். ”ஆம், (சாட்சி கூறினார்) ஆனால் அதன் சாட்சி பகர்தலாக அவருக்கு இல்லை”” என்று கூறினார். ” அவர் தொழவில்லையா?”” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ”ஆம் (தொழுதார்). ஆனால் அவருக்கு தொழுகையே இல்லை”” என்று அவர் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், இவர்களைத் தான் கொல்வதை விட்டும் அல்லாஹ் எனக்குத் தடை விதித்துள்ளான்”” என்று கூறினார்கள். இதை உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னுல் கியார் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ بَيْنَ ظَهْرَانَيِ النَّاسِ إِذْ جَاءَهُ رَجُلٌ فَسَارَّهُ. فَلَمْ يُدْرَ مَا سَارَّهُ بِهِ، حَتَّى جَهَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَإِذَا هُوَ يَسْتَأْذِنُهُ فِي قَتْلِ رَجُلٍ مِنَ الْمُنَافِقِينَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ جَهَرَ: «أَلَيْسَ يَشْهَدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ»، فَقَالَ الرَّجُلُ: بَلَى. وَلَا شَهَادَةَ لَهُ، فَقَالَ: «أَلَيْسَ يُصَلِّي؟» قَالَ: بَلَى. وَلَا صَلَاةَ لَهُ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُولَئِكَ الَّذِينَ نَهَانِي اللَّهُ عَنْهُمْ»


Next Page » « Previous Page