Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-473

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

473. நபி(ஸல்) அவர்கள் அபூபக்கருக்கு கட்டளையிடுங்கள். மக்களுக்கு அவர் தொழ வைக்கட்டும்” என்று கூறினார்கள். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களே! உங்களின் இடத்தில் அபூபக்கர்(ரலி) அவர்கள் இருந்தால், அவர்களை மக்களுக்கு தன் அழுகை காரணமாக (ஓதுதல் எதையும்) கேட்கச் செய்ய மாட்டார். எனவே, உமருக்குக் கட்டளையிடுங்கள். அவர்கள் மக்களுக்கு தொழ வைக்கட்டும்”” என்று கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள் (மீண்டும்), ”அபூபக்கரை மக்களுக்கு தொழ வைக்கக் கட்டளையிடுங்கள்”” என்று கூறினார்கள். உடனே நான் ஹபஸா(ரலி) அவர்களிடம் வந்து, ”அபூபக்கர் அவர்கள் உங்கள் இடத்தில் இருந்தால் தன் அழுகை காரணமாக மக்களைக் கேட்கச் செய்ய மாட்டார். உமர்(ரலி) க்கு ஏவுங்கள். மக்களுக்கு அவர்கள் தொழ வைக்கட்டும்”” என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறுங்கள் என்று கூறினேன். ஹபஸாவும் அப்படியே செய்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், ”நீங்கள் என்ன யூசுஃப் நபியைச் சேர்ந்தவர்களா? ”அபூபக்கர்(ரலி) அவர்களை மக்களுக்குத் தொழ வைக்கக் கட்டளையிடுங்கள்”” என்று (மீண்டும்) கூறினார்கள். அப்போது ஹபஸா(ரலி) அவர்கள் என்னிடம், ”உம்மிடம் இருந்து சிறந்ததை நான் அடையவில்லையே”” என்று கூறினார்கள். இதை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ»، فَقَالَتْ عَائِشَةُ: إِنَّ أَبَا بَكْرٍ، يَا رَسُولَ اللَّهِ، إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ، قَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ»، قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ، مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ. فَفَعَلَتْ حَفْصَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكُنْ لَأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ. مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ»، فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ مَا كُنْتُ لِأُصِيبَ مِنْكِ خَيْرًا


muwatta-malik-472

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

472. இரவின் மலக்குகளும், பகலின் மலக்குகளும் உங்களிடையே மாறி, மாறி வருவார்கள். அவர்கள் அஸர் தொழுகையிலும், பஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேர்வார்கள். பின்பு உங்களுடன் இரவுத் தங்கியிருப்பவர்கள் உயர்வார்கள். அவர்களிடம் அவர்களை நன்கறிந்தவனான அல்லாஹ், ”என் அடியார்களை எப்படி விட்டு வந்தீர்கள் என்று கேட்பான். அதற்கு அவர்கள், அவர்கள் தொழும் நிலையிலேயே விட்டு விட்டு வந்தோம். அவாகள் தொழும் நிலையிலேயே அவர்களிடம் சென்றோம் என பதில் கூறுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلَائِكَةٌ بِاللَّيْلِ وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ. وَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْعَصْرِ، وَصَلَاةِ الْفَجْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ: «كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي؟» فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ


muwatta-malik-471

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 109

தொழுகையின் இதரச் சட்டங்கள்

471. தனது மகள் ஜைனப்(ரலி) – அபுல் ஆஸ் இப்னு ரபீஆ(ரலி) ஆகியோரின் மகளான (தனது பேத்தி) உமாமா அவர்களைச் சுமந்த நிலையில் நபி(ஸல்) அவாகள் தொழ வைத்தார்கள். அவர்கள் ஸஜ்தா செய்தால் கீழே பேத்தியை வைப்பார்கள்.எழுந்து விட்டால், சுமந்து கொள்வார்கள் என அபூ கதாதா அன்சாரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي وَهُوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ» بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلِأَبِي الْعَاصِ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ، «فَإِذَا سَجَدَ، وَضَعَهَا. وَإِذَا قَامَ حَمَلَهَا»


muwatta-malik-470

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

470. ஒவ்வொரு ரக்அத்திலும் (இருப்பில்) உட்கார வேண்டிய தொழுகை எது? எனக் கேட்ட ஸயீத் இப்னு முஸய்யப் அவர்கள், பின்பு அவர்களாகவே, ”அது மஹ்ரிப் தான்””.உமக்கு அதில் ஒரு ரக்அத் தவறி விட்டால் தான் (அந்நிலை ஏற்படும்) என்றும் கூறினார்கள் என இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்.


«مَا صَلَاةٌ يُجْلَسُ فِي كُلِّ رَكْعَةٍ مِنْهَا؟» ثُمَّ قَالَ سَعِيدٌ: «هِيَ الْمَغْرِبُ إِذَا فَاتَتْكَ مِنْهَا رَكْعَةٌ، وَكَذَلِكَ سُنَّةُ الصَّلَاةِ كُلُّهَا»


muwatta-malik-469

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

469. அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்களிடம் ”ஒட்டகம் கட்டுமிடத்தில் நான் தொழலாமா? என அங்கே தொழுவதை தவறாக கருதாத முஹாஜிரின்கள் ஒருவர் கேட்டார். அதற்கு அப்துல்லா(ரலி) அவர்கள் ”கூடாது””. எனினும் ஆட்டுத் தொழுவத்தில் தொழுது கொள்”” என்று கூறினார்கள் என உர்வா கூறுகின்றார்கள்.


أَأُصَلِّي فِي عَطَنِ الْإِبِلِ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ: «لَا وَلَكِنْ صَلِّ فِي مُرَاحِ الْغَنَمِ»


muwatta-malik-468

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

468. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கிப்லாவின் சுவற்றில் தன் முதுகை சாய்த்து (அமர்ந்து) இருந்த போது, நான் தொழுது கொண்டிருந்தேன். என் தொழுகையை நான் முடித்ததும், (என்) இடது புறத்தில் இருந்த அவர்களை நோக்கித் திரும்பினேன். ”நீ உன் வலது புறம் திரும்பாமல் இருக்கக் காரணம் என்ன?”” என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவாகள் கேட்டார்கள். உங்களை (இடதுபுறம்) பார்த்தேன். அதனால் உங்கள் பக்கம் திரும்பினேன் என்று நான் கூறினேன். ”நிச்சயமாக நீ சாரியாகச் சொன்னாய். சில பேர் வலது பக்கம் (மட்டும்) திரும்பு”” என்கின்றனர். (அவ்வாறு அல்ல). நீ தொழுதால் நீ உன் வலத புறம் (திரும்ப) விரும்பினாலும், இடப்புறம் (திரும்ப) விரும்பினாலும் நீ விரும்பும் பக்கம் திரும்பு என்னு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதாக வாயிஉ இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.


كُنْتُ أُصَلِّي وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مُسْنِدٌ ظَهْرَهُ إِلَى جِدَارِ الْقِبْلَةِ، فَلَمَّا قَضَيْتُ صَلَاتِي انْصَرَفْتُ إِلَيْهِ مِنْ قِبَلِ شِقِّي الْأَيْسَرِ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «مَا مَنَعَكَ أَنْ تَنْصَرِفَ عَنْ يَمِينِكَ؟» قَالَ فَقُلْتُ: رَأَيْتُكَ، فَانْصَرَفْتُ إِلَيْكَ. قَالَ عَبْدُ اللَّهِ: ” فَإِنَّكَ قَدْ أَصَبْتَ. إِنَّ قَائِلًا يَقُولُ: انْصَرِفْ عَنْ يَمِينِكَ، فَإِذَا كُنْتَ تُصَلِّي، فَانْصَرِفْ حَيْثُ شِئْتَ. إِنْ شِئْتَ عَنْ يَمِينِكَ. وَإِنْ شِئْتَ عَنْ يَسَارِكَ


muwatta-malik-467

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

467. ஒருவர் தொழுகையைத் (தொழ) மறந்து அவர் (மற்றொரு தொழுகையை) இமாமுடன் தொழும் போதே நினைவு வருமாயின் இமாம் சலாம் கொடுத்ததும் ஏற்கனவே மறந்த தொழுகையைத் தொழட்டும். பின்பு (அந்த நேரத்;திற்குரிய தொழுகையான) மற்றொன்றை மீண்டும் தொழட்டும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


«مَنْ نَسِيَ صَلَاةً فَلَمْ يَذْكُرْهَا إِلَّا وَهُوَ مَعَ الْإِمَامِ، فَإِذَا سَلَّمَ الْإِمَامُ، فَلْيُصَلِّ الصَّلَاةَ الَّتِي نَسِيَ، ثُمَّ لِيُصَلِّ بَعْدَهَا الْأُخْرَى»


muwatta-malik-466

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

466. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த ஒருவரைத் தாண்டி செல்லும் போது, அவருக்கு ஸலாம் கூறினார்கள். அவர் வார்த்தையால்( வ அலைக்குமுஸ் ஸலாம்) என்று பதில் கூறினார்கள். அவரிடம் திரும்பி வந்த அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகின்ற உங்களில் ஒருவருக்கு ஸலாம் கூறினால் அவர் பேச வேண்டாம், தன் கையால் சமிக்ஞை செய்யட்டும் எனக் கூறினார்கள் என்று நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ مَرَّ عَلَى رَجُلٍ وَهُوَ يُصَلِّي. فَسَلَّمَ عَلَيْهِ. فَرَدَّ الرَّجُلُ كَلَامًا. فَرَجَعَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فَقَالَ لَهُ: «إِذَا سُلِّمَ عَلَى أَحَدِكُمْ وَهُوَ يُصَلِّي فَلَا يَتَكَلَّمْ، وَلْيُشِرْ بِيَدِهِ»


muwatta-malik-465

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

465. மக்கள் தொழுது முடித்த நிலையில் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் பள்ளிக்கு வந்தால் அதற்கு முன்னால் எதையும் தொழாமல் கடமையான தொழுகையைத் தொழ ஆரம்பித்து விடுவார்கள். இதை ரபீஆ இப்னு அபூ அப்துர் ரஹ்மான் கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «كَانَ إِذَا جَاءَ الْمَسْجِدَ، وَقَدْ صَلَّى النَّاسُ، بَدَأَ بِصَلَاةِ الْمَكْتُوبَةِ، وَلَمْ يُصَلِّ قَبْلَهَا شَيْئًا»


muwatta-malik-464

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

464. நோயாளிக்கு ஸஜ்தா செய்ய இயலவில்லையானால் தன் தலையால் அவன் சைகை செய்வான். தன் நெற்றியின் பக்கம் எதையும் உயர்த்த வேண்டாம் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


«إِذَا لَمْ يَسْتَطِعِ الْمَرِيضُ السُّجُودَ، أَوْمَأَ بِرَأْسِهِ إِيمَاءً، وَلَمْ يَرْفَعْ إِلَى جَبْهَتِهِ شَيْئًا»


Next Page » « Previous Page