Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-463

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

463. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்!

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


«اجْعَلُوا مِنْ صَلَاتِكُمْ فِي بُيُوتِكُمْ»


muwatta-malik-462

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

462. மது அருந்துபவன், திருடுபவன், விபச்சாரம் செய்பவன் ஆகியோரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் (நபித்தோழர்களிடம்) கேட்டார்கள். (இவர்கள் சம்பந்தமான தண்டனை பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்பு இது நடந்ததாகும்) எனவே அவர்கள், “அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதருமே மிக அறிந்தவர்கள் என்று பதில் கூறினர். ”அவைகள் மோசமான செயல்கள். அவைகளுக்கு தண்டனையுண்டு. தன்னுடைய தொழுகையில் ஒருவன் திருடுவதே திருட்டில் மிகக் கெட்டது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! ஒருவர் தொழுகையில் எப்படித் திருட முடியும்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ”தொழுகையின் ருகூஉ வையும், ஸஜ்தாவையும் முழுமையாக நிறைவேற்றாமல் தொழுவதே (தொழுகையில் திருடுவதாகும்) என்று நபி (ஸல்) அவா்கள் பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் முர்ரா அல்அன்ஸாரீ (ரஹ்)


«مَا تَرَوْنَ فِي الشَّارِبِ، وَالسَّارِقِ وَالزَّانِي؟ وَذَلِكَ قَبْلَ أَنْ يُنْزَلَ فِيهِمْ»، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «هُنَّ فَوَاحِشُ. وَفِيهِنَّ عُقُوبَةٌ. وَأَسْوَأُ السَّرِقَةِ الَّذِي يَسْرِقُ صَلَاتَهُ»، قَالُوا: وَكَيْفَ يَسْرِقُ صَلَاتَهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودَهَا»


muwatta-malik-461

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

461. நபி(ஸல்) அவர்கள் வாகனத்திலோ, நடந்தோ ‘குபா” விற்கு வருவார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَأْتِي قُبَاءَ رَاكِبًا وَمَاشِيًا»


muwatta-malik-460

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

460. ”இங்கே என் கிப்லாவை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களின் பக்தியோ, உங்களின் ருகூஉ களோ எனக்கு மறைந்து விடவில்லை. நிச்சயமாக நான் என் முதுகுக்குப் பின்னேயும் உங்களை நான் அறிவேன்”” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«أَتَرَوْنَ قِبْلَتِي هَاهُنَا؟ فَوَاللَّهِ مَا يَخْفَى عَلَيَّ خُشُوعُكُمْ وَلَا رُكُوعُكُمْ، إِنِّي لَأَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي»


muwatta-malik-459

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 108

தொழுகையின் இதர சட்டங்கள்

459. நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்தும், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்தும், மஹ்ரிபுக்குப் பின் தன் வீட்டில் இரண்டு ரக்அத்தும், இஷாத் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்தும் தொழுவார்கள். ஜும்ஆவிற்குப் பின் தொழ மாட்டார்கள். ஆனால் (வீட்டிற்கு) திரும்பியதும் இரண்டு ரக்அத் தொழுவார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ، وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَبَعْدَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَبَعْدَ صَلَاةِ الْعِشَاءِ رَكْعَتَيْنِ، وَكَانَ لَا يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ، فَيَرْكَعَ رَكْعَتَيْنِ»


muwatta-malik-458

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

458. நபி(ஸல்) அவர்களின் கப்ரு அருகே அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களைக் கண்டேன். அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கும், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோருக்கும் துஆச் செய்தார்கள் என அப்துல்லா இப்னு தீனார் கூறுகின்றார்கள்.


رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «يَقِفُ عَلَى قَبْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى أَبِي بَكْرٍ وَعُمَرَ»


muwatta-malik-455

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

455. (ஸஃப்பில் சேர்ந்து கொள்வதற்காக ருகூஉ செய்தவாறே) குனிந்தவாறே அப்துல்லா இப்னு மஸ்ஊது(ரலி) நடந்து செல்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்தாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ كَانَ «يَدِبُّ رَاكِعًا»


muwatta-malik-454

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 106

இமாம் ருகூஉ வில் இருக்கும் போது வந்தவர் செய்ய வேண்டியது

454. ஸைது இப்னு ஸாபித்(ரலி) அர்கள் பள்ளிக்கு வந்தார்கள். அது சமயம் ருகூஉ வில் மக்களைக் கண்டதும், உடனே ருகூஉ செய்தார்கள். குனிந்தவாறே நடந்து சென்று ஸஃப்பில் இணைந்து கொண்டார்கள் என அபூ உமாமா இப்னு ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் கூறுகின்றார்கள்.


دَخَلَ زَيْدُ بْنُ ثَابِتٍ الْمَسْجِدَ، ” فَوَجَدَ النَّاسَ رُكُوعًا فَرَكَعَ، ثُمَّ دَبَّ حَتَّى وَصَلَ الصَّفَّ


muwatta-malik-453

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

453. நான் தொழ வைத்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் இருந்ததை நான் அறியவில்லை. பின்பு (தெரிந்ததும்) திரும்பினேன். என்னை அவர்கள் (திரும்பாதிருக்கும்படி) சுரண்டினார்கள் என அபூ ஜஹ்ஃபர் அல்காரி கூறுகின்றார்கள்.


«كُنْتُ أُصَلِّي وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَرَائِي. وَلَا أَشْعُرُ بِهِ، فَالْتَفَتُّ فَغَمَزَنِي»


muwatta-malik-452

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

452. இப்னு உமர்(ரலி) அவர்கள் த ன் தொழுகையில் திரும்பிட மாட்டார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ ابْنَ عُمَرَ «لَمْ يَكُنْ يَلْتَفِتُ فِي صَلَاتِهِ»


Next Page » « Previous Page