தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-462

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மது அருந்துபவன், திருடுபவன், விபச்சாரம் செய்பவன் ஆகியோரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் (நபித்தோழர்களிடம்) கேட்டார்கள். (இவர்கள் சம்பந்தமான தண்டனை பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்பு இது நடந்ததாகும்) எனவே அவர்கள், “அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதருமே மிக அறிந்தவர்கள் என்று பதில் கூறினர். ”அவைகள் மோசமான செயல்கள். அவைகளுக்கு தண்டனையுண்டு. தன்னுடைய தொழுகையில் ஒருவன் திருடுவதே திருட்டில் மிகக் கெட்டது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! ஒருவர் தொழுகையில் எப்படித் திருட முடியும்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ”தொழுகையின் ருகூஉ வையும், ஸஜ்தாவையும் முழுமையாக நிறைவேற்றாமல் தொழுவதே (தொழுகையில் திருடுவதாகும்) என்று நபி (ஸல்) அவா்கள் பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் முர்ரா அல்அன்ஸாரீ (ரஹ்)

(முஅத்தா மாலிக்: 462)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ النُّعْمَانِ بْنِ مُرَّةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«مَا تَرَوْنَ فِي الشَّارِبِ، وَالسَّارِقِ وَالزَّانِي؟ وَذَلِكَ قَبْلَ أَنْ يُنْزَلَ فِيهِمْ»، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «هُنَّ فَوَاحِشُ. وَفِيهِنَّ عُقُوبَةٌ. وَأَسْوَأُ السَّرِقَةِ الَّذِي يَسْرِقُ صَلَاتَهُ»، قَالُوا: وَكَيْفَ يَسْرِقُ صَلَاتَهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودَهَا»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-462.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-401.




எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

5 . இந்தக் கருத்தில் நுஃமான் பின் முர்ரா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-462 ,முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3740 , குப்ரா பைஹகீ-16902 ,

மேலும் பார்க்க: அஹ்மத்-22642 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.