தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-482

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவ்விருவாரில் ஒருவர் மற்றவருக்கு 40 நாட்களுக்கு (இரவுகளுக்கு) முன் இறந்து விட்டார். நபி(ஸல்) அவர்களிடம் முதல் நபாரின் சிறப்புப் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இரண்டாம் நபர் முஸ்லிமாக இருக்கவில்லையா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! ஆம். அவர் குற்றமற்றவராக இருந்தார் என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அவாரின் தொழுகை எதை ஏற்படுத்தும் என்பதை உங்களுக்கு அறிவித்தது எது?’ நிச்சயமாக தொழுகையின் உதாரணம், உங்களிருவாரின் வாசலில் நிறைந்து ஓடும் ஆறு உதாரணமாகும். அதில் அவர் ஐந்து தடவை ஒவ்வொரு நாளும் குளிக்கிறார். அவாரின் அழுக்கு ஏதும் இருக்காது என அறிவீர்கள் தானே. (இவ்வாறு தான்) அவாரின் தொழுகை எதைப் பெற்றுத்தந்தது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்’ என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள். இதை ஸஹ்து இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் கூறியதாக ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

….

இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் தனது சகோதரருக்கு நாற்பது இரவுகள் முன்னதாக மரணமடைந்தார். முந்தியவரின் சிறப்பு நபி (ஸல்) அவர்களிடம் குறிப்பிடப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மற்றவர் முஸ்லிமாக இருக்கவில்லையா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! அவர் நல்லவராக இருந்தார்” என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், “அவருடைய தொழுகை எத்தகைய சிறப்புடையது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். தொழுகையின் உதாரணம் உங்களில் ஒருவரது வீட்டு வாசலில் உள்ள ஒரு ஆழமான, இனிமையான நதியைப் போன்றது. அதில் ஒருவர் தினமும் ஐந்து முறை மூழ்குகிறார். அவரது உடலில் அழுக்கு ஏதும் மிஞ்சுமா என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவரது தொழுகை எத்தகைய சிறப்புடையது என்று உங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 482)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ أَنَّهُ بَلَغَهُ عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ

كَانَ رَجُلَانِ أَخَوَانِ. فَهَلَكَ أَحَدُهُمَا قَبْلَ صَاحِبِهِ بِأَرْبَعِينَ لَيْلَةً. فَذُكِرَتْ فَضِيلَةُ الْأَوَّلِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ: «أَلَمْ يَكُنِ الْآخَرُ مُسْلِمًا؟» قَالُوا: بَلَى. يَا رَسُولَ اللَّهِ، وَكَانَ لَا بَأْسَ بِهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا يُدْرِيكُمْ مَا بَلَغَتْ بِهِ صَلَاتُهُ؟» إِنَّمَا مَثَلُ الصَّلَاةِ كَمَثَلِ نَهْرٍ غَمْرٍ عَذْبٍ بِبَابِ أَحَدِكُمْ. يَقْتَحِمُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ. فَمَا تَرَوْنَ ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ؟ فَإِنَّكُمْ لَا تَدْرُونَ مَا بَلَغَتْ بِهِ صَلَاتُهُ؟


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-482.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


 


மேலும் பார்க்க: அபூதாவூத்-2524.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.