Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-441

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 103

தொழுகையை எதிர்பார்த்திருத்தல், அதற்காக நடந்து செல்லுதல்

441. எங்கே தொழுதாரோ அதே தொழுகை இடத்தில் ஒளு முறியாத நிலையில் அடுத்த தொழுகையை எதிர்பார்த்து இருப்பவருக்காக, ”இறைவா! அவரை மன்னிப்பாயாக! அவருக்கு அருள் புரிவாயாக!”” என மலக்குகள் துஆச் செய்வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி யில் இடம் பெற்றுள்ளது).

”ஒளு முறியாத வரை என்ற வார்த்தைக்கு, ஒளுவை முறிக்கும் காரியங்கள் தான்”” என்றே கருதுகிறேன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


«الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ. اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ»

قَالَ مَالِكٌ: ” لَا أَرَى قَوْلَهُ: مَا لَمْ يُحْدِثْ، إِلَّا الْإِحْدَاثَ الَّذِي يَنْقُضُ الْوُضُوءَ


muwatta-malik-440

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

440. தன் தொடைகளுக்கு மத்தியில் அடக்கியவராக உங்களில் ஒருவர்தொழ வேண்டாம் என உமர்(ரலி) அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு அஸ்லம் கூறுகின்றார்கள்.


لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ وَهُوَ ضَامٌّ بَيْنَ وَرِكَيْهِ


muwatta-malik-439

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 102

தேவைகளை நாடிய நிலையில் ஒரு மனிதன் தொழாதிருத்தல்.

439. அப்துல்லா இப்னு அர்கம்(ரலி) அவர்கள் தன் தோழர்களுக்கு இமாமத் செய்பவர்களாக இருந்தனர். ஒரு நாள் தொழுகை நேரம் வந்ததம், தன்னுடைய (மலம் ஜலம் கழிக்கும்) தேவைக்காகச் சென்றார்கள். பின்பு திரும்பி வந்து, ”ஒருவர் மலம் ஜலம் கழிக்க விரும்பினால் தொழுகைக்கு முன்னால் அதை முதலில் செய்யட்டும்”” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள். இதை உர்வா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الْأَرْقَمِ كَانَ يَؤُمُّ أَصْحَابَهُ، فَحَضَرَتِ الصَّلَاةُ يَوْمًا، فَذَهَبَ لِحَاجَتِهِ، ثُمَّ رَجَعَ. فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا أَرَادَ أَحَدُكُمُ الْغَائِطَ فَلْيَبْدَأْ بِهِ قَبْلَ الصَّلَاةِ»


muwatta-malik-438

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 101

சுப்ஹில் குனூத் ஓதுதல்.

438. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகை எதிலும் குனூத் ஓத மாட்டார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «لَا يَقْنُتُ فِي شَيْءٍ مِنَ الصَّلَاةِ»


muwatta-malik-437

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

437. தொழுகையில் ஒருவர் தன் வலது கையை இடது குடங்கையில் வைக்க வேண்டும் என மக்கள் ஏவப்பட்டிருந்தனர் என்று ஸஹ்ல் இப்னு ஸஹ்து அஸ்ஸுஇதி(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ் (நபி(ஸல்) வரை) உயர்த்தப்பட்டதாகவே தவிர நான் அறியவில்லை என அபூ ஹாஸிம் கூறுகின்றார்கள்.

(இது புகாரியில் இடம் பெற்றுள்ளது).


«كَانَ النَّاسُ يُؤْمَرُونَ أَنْ يَضَعَ الرَّجُلُ الْيَدَ الْيُمْنَى عَلَى ذِرَاعِهِ الْيُسْرَى فِي الصَّلَاةِ» قَالَ أَبُو حَازِمٍ: لَا أَعْلَمُ إِلَّا أَنَّهُ يَنْمِي ذَلِكَ


muwatta-malik-436

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 100

தொழுகையில் கைகளை ஒன்றின் மீது ஒன்று வைத்தல்

436. உனக்கு வெட்கமில்லையானால் நீ விரும்பியதை செய்து கொள் என்பது நபி(ஸல்) அவர்களின் சொல்லில் உள்ளதாகும். இரண்டு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது தொழுகையில் வைப்பதும், வலது கையை இடது கையின் மீது வைப்பதும், நோன்பு திறப்பதை சீக்கிரம் செய்வதும், ஸஹர் செய்வதை தாமதமாகச் செய்வதும் நபிவழியாகும் என அபூமகாரிகல் பஸ்ரி அவர்களின் மகன் அப்துல் காரிம் கூறுகிறார்கள்.


«مِنْ كَلَامِ النُّبُوَّةِ إِذَا لَمْ تَسْتَحْيِ فَافْعَلْ مَا شِئْتَ، وَوَضْعُ الْيَدَيْنِ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فِي الصَّلَاةِ، يَضَعُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى وَتَعْجِيلُ الْفِطْرِ وَالِاسْتِينَاءُ بِالسَّحُورِ»


muwatta-malik-435

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

435. உதுமான்(ரலி) அவர்களுடன் நான் இருந்தேன். தொழுகை நேரம் வந்தது. நான் எனக்குரிய கடமைகள் பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். தன் செருப்புகளால் பொடிக் கற்களை சரிசமப்படுத்திய அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஸஃப்புகளைச் சரி செய்யும்படி அவர்கள் நியமித்த சிலர் அவர்களிடம் வந்து ஸஃப்புகள் சரியாகி விட்டது என தகவல் கூறினார்கள். ”ஸஃப்பில் சேர்ந்து கொள்”” என என்னிடம் கூறினார்கள். பின்பு தக்பீர் கூறினார்கள் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


كُنْتُ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَقَامَتِ الصَّلَاةُ، وَأَنَا أُكَلِّمُهُ فِي أَنْ يَفْرِضَ لِي، فَلَمْ أَزَلْ أُكَلِّمُهُ، وَهُوَ يُسَوِّي الْحَصْبَاءَ بِنَعْلَيْهِ، حَتَّى جَاءَهُ رِجَالٌ، قَدْ كَانَ وَكَلَهُمْ بِتَسْوِيَةِ الصُّفُوفِ، فَأَخْبَرُوهُ أَنَّ الصُّفُوفَ قَدِ اسْتَوَتْ. فَقَالَ لِي: «اسْتَوِ فِي الصَّفِّ، ثُمَّ كَبَّرَ»


muwatta-malik-434

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 99

ஸஃப்பு(வரிசை)களைச் சரி செய்தல்

434. உமர்(ரலி) அவர்கள் ஸஃப்புகளைச் சரி செய்யும்படி (சிலருக்குக்) கட்டளையிட்டார்கள். அவர்கள், அவர்களிடம் வந்து ஸஃப்பு சரியாக உள்ளது என தகவல் கூறியதுமே தக்பீர் (தஹ்ரிமா) கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ «يَأْمُرُ بِتَسْوِيَةِ الصُّفُوفِ»، فَإِذَا جَاءُوهُ فَأَخْبَرُوهُ أَنْ قَدِ اسْتَوَتْ. «كَبَّرَ»


muwatta-malik-433

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

433. பொடிக் கற்களை அப்புறப்படுத்துவது என்பது ஒரு தடவை தான் அதை விடுவது சிவப்பு ஒட்டகங்களை விட (அதாவது அவை கிடைப்பதை விட) சிறந்ததாகும் என்று அபூதர்(ரலி) அவர்கள் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்தது என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


أَنَّ أَبَا ذَرٍّ كَانَ يَقُولُ: «مَسْحُ الْحَصْبَاءِ مَسْحَةً وَاحِدَةً، وَتَرْكُهَا، خَيْرٌ مِنْ حُمْرِ النَّعَمِ»


muwatta-malik-432

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 98

தொழுகையில் பொடிக் கற்களை தடவுதல்

432. அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் ஸஜ்தா செய்யும் போது தன் நெற்றியை வைப்பதற்காக (தரையில் உள்ள) பொடிக் கற்களை லேசாகத் தடவுவதை நான் பார்த்தேன் என அபூ ஜஹ்ஃபர் காரி கூறுகின்றார்கள்.


رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ إِذَا أَهْوَى لِيَسْجُدَ، «مَسَحَ الْحَصْبَاءَ لِمَوْضِعِ جَبْهَتِهِ، مَسْحًا خَفِيفًا»


Next Page » « Previous Page