Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-304

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

304. மக்கள் ரமளானில் காபிர்களை அதிகமாக சந்திக்க நான் பார்த்துள்ளேன். (ரமளானில் இரவுத் தொழுகையில்) எட்டு ரக்அத்தில் தொழ வைப்பவர் பகரா என்ற இரண்டாவது அத்தியாயத்தை ஓதுவார். அதே பகராவை 12 ரக்அத்களில் ஓதி தொழ வைத்தால் மக்கள் அதை இலகுவாகக் கருதுவார்கள் என அஹ்ரஜ் கூறியதாக தாவூத் இப்னு ஹுஸைன் கூறுகின்றார்கள்.


«مَا أَدْرَكْتُ النَّاسَ إِلَّا وَهُمْ يَلْعَنُونَ الْكَفَرَةَ فِي رَمَضَانَ» قَالَ: «وَكَانَ الْقَارِئُ يَقْرَأُ سُورَةَ الْبَقَرَةِ فِي ثَمَانِ رَكَعَاتٍ فَإِذَا قَامَ بِهَا فِي اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً رَأَى النَّاسُ أَنَّهُ قَدْ خَفَّفَ»


muwatta-malik-303

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

303. உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ரமளான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர்.

அறிவிப்பவர் : யஸீத் பின் ரூமான்

 


«كَانَ النَّاسُ يَقُومُونَ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي رَمَضَانَ بِثَلَاثٍ وَعِشْرِينَ رَكْعَةً»


muwatta-malik-302

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

302. உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஃஹ்பு (ரலி) அவர்களையும், தமீமுத்தாரி (ரலி) அவர்களையும் மக்களுக்கு 11 ரக்அத் தொழ வைக்கும்படி கட்டளையிட்டார்கள்.

தொழுகையில் நீண்ட நேரம் நிற்பதால் (இயலாது போய்) கம்பின் மீது நாங்கள் சாய்ந்து கொள்ளும் அளவுக்கு நூற்றுக்கணக்கான வசனங்களை ஓதுவார். நாங்கள் சுபுஹின் நேரம் சமீபிக்கும் போது வீடு திரும்புவோம், என ஸாயிப் பின் யஸீத் கூறுகின்றார்கள்.


أَمَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أُبَيَّ بْنَ كَعْبٍ وَتَمِيمًا الدَّارِيَّ أَنْ يَقُومَا لِلنَّاسِ بِإِحْدَى عَشْرَةَ رَكْعَةً

قَالَ: وَقَدْ «كَانَ الْقَارِئُ يَقْرَأُ بِالْمِئِينَ، حَتَّى كُنَّا نَعْتَمِدُ عَلَى الْعِصِيِّ مِنْ طُولِ الْقِيَامِ، وَمَا كُنَّا نَنْصَرِفُ إِلَّا فِي فُرُوعِ الْفَجْرِ»


muwatta-malik-301

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

301. ரமளான் மாதத்தில் உமர்(ரலி) அவர்களுடன் ஒரு பள்ளிக்குச் சென்றேன். ஒருவன் தனித்துத் தொழுதார். மற்றொருவர் (தனித்துத்) தொழுத தொழுகையை ஒரு கூட்டம் (பின்பற்றியவராக) தொழுதது. இவ்வாறு மக்கள் பலவாறாக இருந்தனர். ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இவர்களனைவரையும் ஒரு இமாமின் கீழ் ஒன்று சேர்த்தால் மிக சிறப்பாக அமையும் எனக் கருதுகிறேன் என்று கூறிய உமர்(ரலி), உபை இப்னு கஹ்பு(ரலி) என்ற நபித்தோழாரின் தலைமையில் மக்களை ஒன்று சேர்த்(து தொழச் செய்)தார்கள்.

பின்பு ஒருநாள் இரவு அவர்களுடன் நான் வந்த போது மக்கள் ஒரு இமாமைப் பின்பற்றி தொழுது கொண்டிருந்தனர். மக்கள் இரவின் ஆரம்ப நேரத்திலேயே தொழ ஆரம்பித்து விட்டார்கள். இந்த புதிய ஏற்பாடு நல்லதாகி விட்டது. இப்போது தொழுவது சிறந்ததாகும் என உமர்(ரலி) கூறியதாக அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல் காரி கூறுகின்றார்கள்.


خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ، فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ. يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ، وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ. فَقَالَ عُمَرُ: وَاللَّهِ إِنِّي لَأَرَانِي «لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ»، فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى، وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ قَارِئِهِمْ، فَقَالَ عُمَرُ «نِعْمَتِ الْبِدْعَةُ هَذِهِ»،  «وَالَّتِي تَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنِ الَّتِي تَقُومُونَ» يَعْنِي آخِرَ اللَّيْلِ وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ


muwatta-malik-300

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

300. நபி(ஸல்) அவர்கள் ரமளானின் இரவு வணக்கத்திற்கு ஆர்வமூட்டினார்கள். ஆனால் அவர்கள் வலியுறுத்தி கட்டளையிடவில்லை. ஒருவர் மன உறுதியுடனும், நன்மையை நாடியும் ரமளானின் இரவில் வணங்கினால், அவரது முன் பாவங்களும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இஷ்டப்பட்டவர்கள் தொழலாம் என்ற) இந்த அடிப்படையில் தான் சட்டம் இருந்த நிலையிலேயே நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூபக்கர்(ரலி) ஆட்சியிலும் இப்படியே இருந்தது. உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் இவ்வாறே இருந்தது என இப்னு ஷிஹாப் அவர்கள் கூறுகிறார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يُرَغِّبُ فِي قِيَامِ رَمَضَانَ، مِنْ غَيْرِ أَنْ يَأْمُرَ بِعَزِيمَةٍ، فَيَقُولُ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

قَالَ ابْنُ شِهَابٍ: فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالْأَمْرُ عَلَى ذَلِكَ ثُمَّ كَانَ الْأَمْرُ، عَلَى ذَلِكَ فِي خِلَافَةِ أَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ خِلَافَةِ عُمَرَ بْنِ الْخَطَّابِ


muwatta-malik-299

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 69

ரமளானில் தொழுவது பற்றி ஆர்வமூட்டல்

299. நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவு பள்ளியில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி சில மக்களும் தொழுதார்கள். மறுநாளும் தொழுதார்கள். அப்போது மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது. மூன்றாம் இரவோ, நான்காவது இரவிலோ மக்கள் (தொழ) ஒன்று கூடிய போது, நபி(ஸல்) அவர்கள் (அவர்களுக்குத் தொழ வைக்க) அவர்களிடம் வரவில்லை. (மறுநாள்) காலையில், ‘நீங்கள் (ஒன்று கூடி) இருந்ததைப் பார்த்தேன். எங்கே இந்த (இரவுத்) தொழுகை உங்கள் மீது கடமையாகி விடுமோ என்று அஞ்சியே நான் உங்களுக்குத் தொழ வைக்க வரவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இது ரமளானில் நடந்தது என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي الْمَسْجِدِ ذَاتَ لَيْلَةٍ، فَصَلَّى بِصَلَاتِهِ نَاسٌ. ثُمَّ صَلَّى اللَّيْلَةَ الْقَابِلَةَ، فَكَثُرَ النَّاسُ. ثُمَّ اجْتَمَعُوا مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ، فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَلَمَّا أَصْبَحَ، قَالَ: «قَدْ رَأَيْتُ الَّذِي صَنَعْتُمْ، وَلَمْ يَمْنَعْنِي مِنَ الْخُرُوجِ إِلَيْكُمْ، إِلَّا أَنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ» وَذَلِكَ فِي رَمَضَانَ


muwatta-malik-298

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

298. நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளன்று இரண்டு பிரசங்கம் செய்தார்கள். அவ்விரண்டுக்கும் மத்தியில் உட்காருவார்கள் என முஹம்மத் கூறுகிறார்கள்.


أنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «خَطَبَ خُطْبَتَيْنِ يَوْمَ الْجُمُعَةِ، وَجَلَسَ بَيْنَهُمَا»


muwatta-malik-297

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

297. எவ்வித காரணமும் தடையின்றி மூன்று தடவை ஒருவன் ஜும்ஆவை விட்டு விட்டால் அவனது இதயத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் என ஸஃப்வான் சுலைம்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஸஃப்வான் அறிவித்தாரா? இல்லையா? என்பதை நான் அறிய மாட்டேன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


«مَنْ تَرَكَ الْجُمُعَةَ ثَلَاثَ مَرَّاتٍ، مِنْ غَيْرِ عُذْرٍ وَلَا عِلَّةٍ، طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ»


muwatta-malik-296

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 68

ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை மற்றும் காரணமின்றி ஜும்ஆவை விடுதல்

296. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ என்ற 63வது அத்தியாயத்தை ஓதி விட்டு, அடுத்து என்ன ஓதுவார்கள்? என நுஃமான் இப்னு பஷீர் ரலி) அவர்களிடம் கேட்ட போது, 88 வது அத்தியாயத்தை ஓதுவார்கள் என பதில் கூறினார்கள் என்று லஹ்ஹான் இப்னு கைஸ் அறிவிக்கின்றார்கள்.


أَنَّ الضَّحَّاكَ بْنَ قَيْسٍ، سَأَلَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ مَاذَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ، عَلَى إِثْرِ سُورَةِ الْجُمُعَةِ؟ قَالَ: كَانَ ” يَقْرَأُ {هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ} [الغاشية: 1]


muwatta-malik-294

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

294. இமாம், மக்களுக்கு பிரசங்கம் செய்யும் போது ஜும்ஆ வில் மக்களைத் தாண்டி வந்து உட்கார்ந்து இருப்பதை விட சூடான பூமியில் தொழுவது சிறந்தது என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّهُ كَانَ يَقُولُ: لَأَنْ يُصَلِّيَ أَحَدُكُمْ بِظَهْرِ الْحَرَّةِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَقْعُدَ، حَتَّى إِذَا قَامَ الْإِمَامُ يَخْطُبُ، جَاءَ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ يَوْمَ الْجُمُعَةِ


Next Page » « Previous Page