Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-293

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

293. இஹ்ராம் கட்டியிருந்தாலே தவிர அனுமதிக்கப்பட்ட எண்ணெய் தேய்த்தல், நறுமணம் பூசுதல் இவைகளைச் செய்தே, ஜும்ஆ விற்கு அப்துல்லா இப்னு உமர்(ரலி) வருவார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «لَا يَرُوحُ إِلَى الْجُمُعَةِ إِلَّا ادَّهَنَ وَتَطَيَّبَ إِلَّا أَنْ يَكُونَ حَرَامًا»


muwatta-malik-292

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 67

ஜும்ஆ நாளன்று, நல்ல ஆடை அணிதல், இமாமை முன்னோக்கி இருத்தல்

292. வழக்கமான இரண்டு ஆடையைத் தவிர ஜும்ஆவிற்காக இரண்டு ஆடைகளை வைத்துக் கொண்டால் என்ன? என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்ததாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


«مَا عَلَى أَحَدِكُمْ لَوِ اتَّخَذَ ثَوْبَيْنِ لِجُمُعَتِهِ سِوَى ثَوْبَيْ مِهْنَتِهِ»


muwatta-malik-291

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

291. நான் தூர் மலைப்பகுதிக்கு வந்தேன். கஹ்புல் அஹ்பார் அவர்களைச் சந்தித்தேன். அவருடன் அமர்ந்திருந்த சமயம், அவர் எனக்கு தவ்ராத் வேதம் பற்றிக் கூறினார். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றி அவருக்கு நான் கூறினேன்.

சூரியன் உதயமாகும் நாளிலேயே சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் பூமியில் இறக்கப்பட்டார்கள். அன்று தான் அவர்களின் பாவம் பன்னிக்கப்பட்டது. அன்று தான் இறந்தார்கள். அன்று தான் கியாமத் நாளும் ஏற்படும். ஜும்ஆ நாளன்று சுப்ஹு முதல் சூரியன் உதயமாகும் வரை மனித, ஜின் இனத்தைத் தவிர மற்ற பிராணிகள் அனைத்தும் கியாமத் நாளை அஞ்சியதாக சப்தமிட்டபடி இருக்கும். அன்று ஒரு நேரம் உண்டு. (அந்நேரத்தில்) அல்லாஹ்விடம் ஏதேனும் கேட்டவனாக தொழுது கொண்டிருக்கும் ஒரு முஸ்லிமுக்கு அவன் கேட்டதைக் கொடுத்த நிலையில் தான் அந்த நேரத்தை அவன் அடைந்து கொள்வான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக நான் கூறியதும் அவரிடம் நான் பேசியபற்றில் ஒன்றாக இருந்தது.

அது ஒவ்வொரு வருடத்திலும் உள்ள ஏதேனும் ஒரு ஜும்ஆ நாளில் தான் என கஹ்பு கூறினார். ‘இல்லை ஒவ்வொரு ஜும்ஆ விலும் தான்’ என்று நான் கூறினேன். உடனே கஹ்பு அவர்கள் தவ்ராத்தை எடுத்துப் படித்து விட்டு, நபி(ஸல்) அவர்கள் உண்மையைக் கூறியுள்ளார்கள்

خَرَجْتُ إِلَى الطُّورِ فَلَقِيتُ كَعْبَ الْأَحْبَارِ فَجَلَسْتُ مَعَهُ، فَحَدَّثَنِي عَنِ التَّوْرَاةِ، وَحَدَّثْتُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ فِيمَا حَدَّثْتُهُ، أَنْ قُلْتُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ، يَوْمُ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ أُهْبِطَ مِنَ الْجَنَّةِ، وَفِيهِ تِيبَ عَلَيْهِ، وَفِيهِ مَاتَ. وَفِيهِ تَقُومُ السَّاعَةُ. وَمَا مِنْ دَابَّةٍ إِلَّا وَهِيَ مُصِيخَةٌ يَوْمَ الْجُمُعَةِ، مِنْ حِينِ تُصْبِحُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ  شَفَقًا مِنَ السَّاعَةِ. إِلَّا الْجِنَّ وَالْإِنْسَ. وَفِيهِ سَاعَةٌ لَا يُصَادِفُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ يُصَلِّي، يَسْأَلُ اللَّهَ شَيْئًا، إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ» قَالَ كَعْبٌ ذَلِكَ فِي كُلِّ سَنَةٍ يَوْمٌ فَقُلْتُ بَلْ فِي كُلِّ جُمُعَةٍ فَقَرَأَ كَعْبٌ التَّوْرَاةَ فَقَالَ صَدَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

قَالَ أَبُو هُرَيْرَةَ فَلَقِيتُ بَصْرَةَ بْنَ أَبِي بَصْرَةَ الْغِفَارِيَّ فَقَالَ: مِنْ أَيْنَ أَقْبَلْتَ؟ فَقُلْتُ: مِنَ الطُّورِ فَقَالَ: لَوْ أَدْرَكْتُكَ قَبْلَ أَنْ تَخْرُجَ إِلَيْهِ، مَا خَرَجْتَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” لَا تُعْمَلُ الْمَطِيُّ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: إِلَى الْمَسْجِدِ الْحَرَامِ، وَإِلَى مَسْجِدِي هَذَا، وَإِلَى مَسْجِدِ إِيلِيَاءَ أَوْ بَيْتِ الْمَقْدِسِ ” يَشُكُّ

قَالَ أَبُو هُرَيْرَةَ: ثُمَّ لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ سَلَامٍ، فَحَدَّثْتُهُ بِمَجْلِسِي مَعَ كَعْبِ الْأَحْبَارِ، وَمَا حَدَّثْتُهُ بِهِ فِي يَوْمِ الْجُمُعَةِ، فَقُلْتُ: قَالَ كَعْبٌ ذَلِكَ فِي كُلِّ سَنَةٍ يَوْمٌ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ: كَذَبَ كَعْبٌ. فَقُلْتُ: ثُمَّ قَرَأَ كَعْبٌ التَّوْرَاةَ، فَقَالَ: بَلْ هِيَ فِي كُلِّ جُمُعَةٍ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ: صَدَقَ كَعْبٌ، ثُمَّ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ قَدْ عَلِمْتُ أَيَّةَ سَاعَةٍ هِيَ. قَالَ أَبُو هُرَيْرَةَ: فَقُلْتَ لَهُ أَخْبِرْنِي بِهَا وَلَا تَضَنَّ عَلَيَّ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ: «هِيَ آخِرُ سَاعَةٍ فِي يَوْمِ الْجُمُعَةِ»
قَالَ أَبُو هُرَيْرَةَ: فَقُلْتُ وَكَيْفَ تَكُونُ آخِرَ سَاعَةٍ فِي يَوْمِ الْجُمُعَةِ؟ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُصَادِفُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ يُصَلِّي وَتِلْكَ السَّاعَةُ سَاعَةٌ لَا يُصَلَّى فِيهَا»
فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ أَلَمْ يَقُلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ جَلَسَ مَجْلِسًا يَنْتَظِرُ الصَّلَاةَ فَهُوَ فِي صَلَاةٍ حَتَّى يُصَلِّيَ؟» قَالَ أَبُو هُرَيْرَةَ فَقُلْتُ: بَلَى، قَالَ: فَهُوَ ذَلِكَ


muwatta-malik-287

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 65

பயணம் செல்லும் இமாம், ஜும்ஆ நாளில் ஒரு ஊரில் இருந்தால்…

287. ஒரு ஊருக்கு இமாம் சென்றால் இமாம் பயணியாக இருக்கும் போதே அந்த ஊரில் ஜும்ஆ கடமையாகும். அவர் பிரசங்கம் செய்து அவர்களுக்கு ஜும்ஆ நடத்துவார். அவ்வூர் மக்களும், மற்றவர்களும் அவருடன் ஜும்ஆத் தொழுவார்கள் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


قَالَ مَالِكٌ: «إِذَا نَزَلَ الْإِمَامُ بِقَرْيَةٍ تَجِبُ فِيهَا الْجُمُعَةُ، وَالْإِمَامُ مُسَافِرٌ. فَخَطَبَ وَجَمَّعَ بِهِمْ، فَإِنَّ أَهْلَ تِلْكَ الْقَرْيَةِ وَغَيْرَهُمْ يُجَمِّعُونَ مَعَهُ»


muwatta-malik-282

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 63

ஜும்ஆவின் பொழுது மூக்கில் இரத்தம் வந்தால்..!

282. இமாம் உரை நிகழ்த்தும் போது, ஜும்ஆ நாளில் மூக்கில் இரத்தம் வந்தவர், உடனே வெளியேறி, இமாம் தொழுகையை முடிக்கும் வரை அவர் திரும்பா விட்டால், அவர் நான்கு ரக்அத் (லுஹராக) தொழுவார் என மாலிக் இமாம் (ரஹ்) கூறுகிறார்கள்.

 


قَالَ مَالِكٌ: «مَنْ رَعَفَ يَوْمَ الْجُمُعَةِ، وَالْإِمَامُ يَخْطُبُ، فَخَرَجَ فَلَمْ يَرْجِعْ، حَتَّى فَرَغَ الْإِمَامُ مِنْ صَلَاتِهِ، فَإِنَّهُ يُصَلِّي أَرْبَعًا»


muwatta-malik-279

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 62

ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர்

279. ஜும்ஆத் தொழுகையின் ஒரு ரக்அத்தைப் பெற்றுக் கொண்டவர், மற்றொரு ரக்அத்தை அவர் தொழட்டும் என்று இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள். இது தான் நபிவழி என்றும் இப்னு ஷிஹாப் கூறுகிறார்கள்.


«مَنْ أَدْرَكَ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ رَكْعَةً فَلْيُصَلِّ إِلَيْهَا أُخْرَى»،

قَالَ ابْنُ شِهَابٍ: وَهِيَ السُّنَّةُ


muwatta-malik-277

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

277. இமாம் பிரசங்கம் செய்யும் போது ஒருவர் தும்மினால் (அல்ஹம்து லில்லாஹி கூறினார்) அருகில் இருந்தவர் யர்ஹமுகுமுல்லாஹ் என்று கூறினார். (இப்படிச் செய்யலாமா?) என்று ஸயீத் இப்னு முஸய்யப்(ரலி) அவர்களிடம் கேட்ட போது, இனி இவ்வாறு செய்யாதே, என்று கூறித் தடுத்தார்கள் என்று தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ رَجُلًا عَطَسَ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ، فَشَمَّتَهُ إِنْسَانٌ إِلَى جَنْبِهِ، فَسَأَلَ عَنْ ذَلِكَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، فَنَهَاهُ عَنْ ذَلِكَ، وَقَالَ: «لَا تَعُدْ»


muwatta-malik-276

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

276. இமாம் ஜும்ஆ நாளன்று பிரசங்கம் செய்யும் போது பேசிக் கொண்டிருந்த இரண்டு நபர்களைக் கண்ட அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அவ்விருவருக்கும் சிறு கல்லால் எறிந்து சமிக்ஞை செய்தார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «رَأَى رَجُلَيْنِ يَتَحَدَّثَانِ وَالْإِمَامُ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فَحَصَبَهُمَا أَنِ اصْمُتَا»


muwatta-malik-275

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

275. ஜும்ஆ நாளன்று இமாம் பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விட்டால் அமைதியாக இருந்து, அதைக் கேளுங்கள். உரையைக் கேட்பதற்காகவே அமைதியாக இருப்பவனுக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே உரையைக் கேட்காமல் (அது சமயம்) அமைதியாக இருப்பவனுக்கும் உண்டு. தொழுகைக்கு நின்றால், வரிசைகளை சரி செய்து கொள்வது, தொழுகையைப் பூர்த்தி செய்வதில் உள்ளதாகும் என்று உஸ்மான்(ரலி) அவர்கள் தன் உரையில் கூறுவார்கள். பிரசங்கம் செய்யும் போது இப்படி அவர்கள் கூறாமல் இருப்பது மிகக் குறைவாகவே இருந்தது. பின்பு வரிசைகளை சரி செய்ய அவர்கள் நியமித்திருந்தவர்கள் வந்து கூறும் வரை தக்பீர் கூற மாட்டார்கள். வரிசைகள் சரியாக உள்ளன என அவர்களிடம் அவர்கள் கூறிய பின்பே தக்பீர் கூறுவார்கள்.


أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ كَانَ يَقُولُ فِي خُطْبَتِهِ، قَلَّ مَا يَدَعُ ذَلِكَ إِذَا خَطَبَ: «إِذَا قَامَ الْإِمَامُ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فَاسْتَمِعُوا وَأَنْصِتُوا. فَإِنَّ لِلْمُنْصِتِ، الَّذِي لَا يَسْمَعُ، مِنَ الْحَظِّ، مِثْلَ مَا لِلْمُنْصِتِ السَّامِعِ. فَإِذَا قَامَتِ الصَّلَاةُ فَاعْدِلُوا الصُّفُوفَ، وَحَاذُوا بِالْمَنَاكِبِ، فَإِنَّ اعْتِدَالَ الصُّفُوفِ مِنْ تَمَامِ الصَّلَاةِ». ثُمَّ لَا يُكَبِّرُ، حَتَّى يَأْتِيَهُ رِجَالٌ قَدْ وَكَّلَهُمْ بِتَسْوِيَةِ الصُّفُوفِ، فَيُخْبِرُونَهُ أَنْ قَدِ اسْتَوَتْ، فَيُكَبِّرُ


muwatta-malik-274

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

274. உமர்(ரலி) அவர்கள் காலத்தில் ஜும்ஆ நாளன்று உமர்(ரலி) அவர்கள் (பள்ளிக்கு) வரும் வரை மக்கள் தொழுது கொண்டிருப்பார்கள். உமர்(ரலி) அவர்கள் வந்து மேடையில் அமர்ந்ததும் பாங்கு கூறுவார்களேயானால் நாங்கள் பேசிக் கொண்டே தான் உட்கார்ந்திருப்போம். பாங்கு கூறுபவர் பாங்கை முடித்ததும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து உரை நிகழ்த்த ஆரம்பித்து விட்டால் நாங்கள எவருமே பேச மாட்டோம் என தஹ்லபா இப்னு மாலிக் அல் குரளீ கூறுகின்றார்கள். இமாம் வருவதே தொழுகையை நிறுத்தி விடும். அவர் பேசுவது, பேச்சை நிறுத்தி விடும் என்று இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்.


أَنَّهُمْ كَانُوا فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، يُصَلُّونَ يَوْمَ الْجُمُعَةِ، حَتَّى يَخْرُجَ عُمَرُ. فَإِذَا خَرَجَ عُمَرُ، وَجَلَسَ عَلَى الْمِنْبَرِ، وَأَذَّنَ الْمُؤَذِّنُونَ – قَالَ ثَعْلَبَةُ – جَلَسْنَا نَتَحَدَّثُ. «فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُونَ وَقَامَ عُمَرُ يَخْطُبُ، أَنْصَتْنَا، فَلَمْ يَتَكَلَّمْ مِنَّا أَحَدٌ» قَالَ ابْنُ شِهَابٍ: «فَخُرُوجُ الْإِمَامِ يَقْطَعُ الصَّلَاةَ، وَكَلَامُهُ يَقْطَعُ الْكَلَامَ»


Next Page » « Previous Page