Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-273

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 61

ஜுமுஆ நாளில் இமாம் உரை நிகழ்த்தும் போது மவுனமாக இருத்தல்.

273. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.’

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا قُلْتَ لِصَاحِبِكَ أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فَقَدْ لَغَوْتَ»


muwatta-malik-270

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

270. ஜும்ஆ விற்கு வரும் உங்களில் ஒருவர் குளிக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ»


muwatta-malik-269

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

269. ஜும்ஆ நாளன்று குளிப்பது, வயதுக்கு வந்த அனைவர் மீதும் கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»


muwatta-malik-268

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

268. ஜும்ஆ நான்று ஒரு நபித்தோழர் உமர்(ரலி) அவர்கள் பிரசங்கம் செய்யும் போது பள்ளிக்கு வந்தார். இன்று எந்த நாள்? (குளிக்காமல் வருகிறீர்களே) என்று உமர்(ரலி) கேட்டதும், அமீருல் முஹ்மினீன் அவர்களே! கடைவீதியில் இருந்து விட்டேன். பாங்கைக் கேட்டதும் என்னால் ஒளுவைத் தவிர அதிகப்படுத்த முடியவில்லை என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் குளிக்கும்படி கட்டளையிட்டுள்ளார்கள் என்பதை நீ அறிந்துள்ள நிலையில் ஒளு மட்டும் தான் (செய்தீரா) என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். இதை ஸாலிம் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.


دَخَلَ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يَخْطُبُ، فَقَالَ عُمَرُ: أَيَّةُ سَاعَةٍ هَذِهِ؟ فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ انْقَلَبْتُ مِنَ السُّوقِ، فَسَمِعْتُ النِّدَاءَ، فَمَا زِدْتُ عَلَى أَنْ تَوَضَّأْتُ. فَقَالَ عُمَرُ وَالْوُضُوءَ أَيْضًا؟ وَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَأْمُرُ بِالْغُسْلِ»


muwatta-malik-267

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

267. ஜும்ஆ நாளன்று குளிப்புக் கடமைக்காக குளிப்பது போல் குளிப்பது, வயதிற்கு வந்த அனைவர் மீதும் கடமையாகும் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


«غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ كَغُسْلِ الْجَنَابَةِ»


muwatta-malik-266

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 60

வெள்ளிக் கிழமை குளித்தல்

266. ஒருவர் ஜும்ஆ நாளன்று கடமையான குளிப்பு போல் குளித்து விட்டு முதல் நேரத்திலேயே வந்தால் அவர் ஒட்டகத்தை அறுத்(துத் தர்மம் செய்)தவர் போலாவார். இரண்டாவதாக வருபவர் மாட்டை அறுத்தவர் போலாவார். மூன்றாவதாக வருபவர் கொம்புள்ள ஆட்டை அறுத்தவர் போலாவார். நான்காவதாக வருபவர் கோழியை அறுத்தவர் போலாவார். ஐந்தாவதாக வருபவர் முட்டையை தர்மம் செய்தவர் போலாவார். இமாம் அவர்கள் (பிரசங்கம் செய்ய) வந்து விட்டால் (கணக்கு எடுத்த) வானவர்கள் பயானை (உரையை) கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ، ثُمَّ رَاحَ فِي السَّاعَةِ الْأُولَى، فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الْإِمَامُ حَضَرَتِ الْمَلَائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ»


muwatta-malik-265

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

265. தொழும் போது நான் சந்தேகமுருகிறேன். எனக்கு அதிகமாக இது ஏற்படுகின்றன. ஒருவர் காஸிம் இப்னு முஹம்மது அவர்களிடம் கேட்டார். ‘நீர் த தொழுகையைத் தொடர்வீராக! ஏனெனில், தொழுகையை முடிக்கும் வரை அந்த சந்தேகம் உன்னை விட்டுப் போவதில்லை. என் தொழுகையை நான் முழுமையாக்கவில்லை எனச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.(அதாவது, சந்தேகங்கள் தவிர்க்க இயலாதவை என்பதே இதன் கருத்தாகும்) எனப் பதில் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்தது என்று மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


بَلَغَهُ أَنَّ رَجُلًا سَأَلَ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ فَقَالَ: إِنِّي أَهِمُ فِي صَلَاتِي. فَيَكْثُرُ ذَلِكَ عَلَيَّ. فَقَالَ الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ ” امْضِ فِي صَلَاتِكَ. فَإِنَّهُ لَنْ يَذْهَبَ عَنْكَ، حَتَّى تَنْصَرِفَ وَأَنْتَ تَقُولُ: مَا أَتْمَمْتُ صَلَاتِي


muwatta-malik-264

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

264. (தொழுகையில் மறந்து விட்டால் என்ன செய்வது என்பதற்கு_ நான் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மறந்து விடுகிறேன் அல்லது மறக்கடிக்கப்படுகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்தது என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


«إِنِّي لَأَنْسَى أَوْ أُنَسَّى لِأَسُنَّ»


muwatta-malik-263

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 59

மறதிக்காக செய்ய வேண்டியது

263. உங்களில் ஒருவர் தொழும் சமயம் அவரிடம் ஷைத்தான் வந்து, அவர் தான் தொழுதது எத்தனை? என்று அறியாத அளவுக்கு அவருள் ஊடறுவுவான். அந்நிலை உங்களில் ஒருவருக்கு ஏற்பட்டால் (ஸலாம் கொடுக்கும் முன்) உட்கார்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தா செய்யட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ يُصَلِّي، جَاءَهُ الشَّيْطَانُ، فَلَبَسَ عَلَيْهِ. حَتَّى لَا يَدْرِيَ كَمْ صَلَّى؟ فَإِذَا وَجَدَ ذَلِكَ أَحَدُكُمْ، فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ»


muwatta-malik-262

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

262. அன்சாரி நபித்தோழர் ஒருவர் மதீனாவின் ஒரு ஓடை அருகே உள்ள “குஃப்” என்ற தன் தோட்டத்தில் தொழுது கொண்டிருந்தார். அது போரித்தம்பழமும், மற்ற கனிகளும் விளையும் காலம் அது. கனிகள் காய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதை அவர் பார்த்தார். அந்த கனிகளைப் பார்த்து, அவாரின் கவனத்தை ஈர்த்தது. பின்பு மீண்டும் தன் தொழுகையில் கவனம் செலுத்தினார். தான் எத்தனை தொழுதோம் என்பதை மறந்து விட்டார். “என் சொத்து காரணமாக எனக்கு இந்த குழப்பம் ஏற்பட்டு விட்டது” என்று கூறிக் கொண்டார். அன்றை நாளில் கலீபாவாக இருந்த உதுமான் பின் அஃப்பான்(ரலி) அவர்களிடம் வந்தார். இது பற்றி அவர்களிடம் கூறினார். இந்த தோட்டம் தர்மப் பொருளாகும். நல்வழியில் அதை நீங்கள் (செலவுக்கு) வையுங்கள் என்று கூறினார். உடனே உதுமான்(ரலி) அவர்கள் அதை 50 ஆயிரம் தினாருக்கு விற்றார்கள். அந்த சொத்துக்கு “ஐம்பது” என்று பெயர் வந்தது. இதை அப்துல்லா இப்னு அபுபக்கர் கூறுகின்றார்கள்.


أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ كَانَ يُصَلِّي فِي حَائِطٍ لَهُ بِالْقُفِّ – وَادٍ مِنْ أَوْدِيَةِ الْمَدِينَةِ – فِي زَمَانِ الثَّمَرِ، وَالنَّخْلُ قَدْ ذُلِّلَتْ، فَهِيَ مُطَوَّقَةٌ بِثَمَرِهَا فَنَظَرَ إِلَيْهَا، فَأَعْجَبَهُ مَا رَأَى مِنْ ثَمَرِهَا. ثُمَّ رَجَعَ إِلَى صَلَاتِهِ فَإِذَا هُوَ لَا يَدْرِي كَمْ صَلَّى؟ فَقَالَ: لَقَدْ أَصَابَتْنِي فِي مَالِي هَذَا فِتْنَةٌ، فَجَاءَ عُثْمَانَ بْنَ عَفَّانَ – وَهُوَ يَوْمَئِذٍ خَلِيفَةٌ – فَذَكَرَ لَهُ ذَلِكَ. وَقَالَ: هُوَ صَدَقَةٌ فَاجْعَلْهُ فِي سُبُلِ الْخَيْرِ. «فَبَاعَهُ عُثْمَانُ بْنُ عَفَّانَ بِخَمْسِينَ أَلْفًا» فَسُمِّيَ ذَلِكَ الْمَالُ الْخَمْسِينَ


Next Page » « Previous Page