Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-261

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

261. அபூதல்ஹா அன்சாரி(ரலி) அவர்கள், தன் தோட்டத்தில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது துப்ஷீ என்ற பறவை பறந்து வந்தது. அதை இவர் உற்று நோக்கினார். அது வட்டமிட்டு பறந்து, தன் கூண்டில் அடைந்தது. அது அவரைக் கவர்ந்தது. சிறிது நேரம் அதையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு மீண்டும் தொழுகையில் கவனம் செலுத்தினார். தான் எத்தனை தொழுதோம் என்பது அவருக்கு நினைவில்லை. இந்த சொத்து எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதே என்று கூறிக் கொண்டார். உடனே அவர், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தன் தோட்டத்தில் தனக்கு ஏற்பட்ட குழப்பம் பற்றிக் கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! இந்த தோட்டம் அல்லாஹ்வுக்காக தர்மம் செய்கிறேன். நீங்கள் விரும்பியபடி இதே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதை அப்துல்லா இப்னு அபூபக்கர் கூறுகின்றார்.


أَنَّ أَبَا طَلْحَةَ الْأَنْصَارِيَّ كَانَ يُصَلِّي فِي حَائِطِهِ فَطَارَ دُبْسِيٌّ، فَطَفِقَ يَتَرَدَّدُ، يَلْتَمِسُ مَخْرَجًا. فَأَعْجَبَهُ ذَلِكَ. فَجَعَلَ يُتْبِعُهُ بَصَرَهُ سَاعَةً. ثُمَّ رَجَعَ إِلَى صَلَاتِهِ، فَإِذَا هُوَ لَا يَدْرِي كَمْ صَلَّى؟ فَقَالَ: لَقَدْ أَصَابَتْنِي فِي مَالِي هَذَا فِتْنَةٌ، فَجَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ لَهُ الَّذِي أَصَابَهُ فِي حَائِطِهِ مِنَ الْفِتْنَةِ وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هُوَ صَدَقَةٌ للَّهِ فَضَعْهُ حَيْثُ شِئْتَ


muwatta-malik-260

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

260.

…வேலைப்பாடுடைய ஷாம் தேசத்து ஆடையை நபி (ஸல்) அவர்கள் அணிந்தார்கள். பின்பு அதை அபூஜஹ்ம் அவர்களிடம் கொடுத்தார்கள். அவருக்குரிய மதீனா நகர ஆடையை அவரிடமிருந்து (பதிலுக்கு) எடுத்துக் கொண்டார்கள். இறைத்தூதர் அவர்களே! ஏன்? (கொடுத்து விட்டீர்கள்) எனக் கேட்டார். நான் தொழும் போது வேலைப்பாட்டின் பக்கம் பார்த்து விட்டேன், (அது தொழுகையை குழப்பி விட்டது) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உர்வா கூறுகின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ خَمِيصَةً لَهَا عَلَمٌ ثُمَّ أَعْطَاهَا أَبَا جَهْمٍ وَأَخَذَ مِنْ أَبِي جَهْمٍ أَنْبِجَانِيَّةً لَهُ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَلِمَ؟ فَقَالَ: «إِنِّي نَظَرْتُ إِلَى عَلَمِهَا فِي الصَّلَاةِ»


muwatta-malik-259

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 58

கவனத்தை திசைதிருப்பும் ஒன்றை தொழுபவன் பார்த்தால்..?

259. அபூ ஜஹ்ம் இப்னு ஹுதைபா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு (கவர்ச்சியான) வேலைப்பாடு உள்ள ஸாம் தேசத்து பஞ்சாடையை அன்பாகக் கொடுத்தார்கள். அதை உடுத்தி தொழுகையில் கலந்து கொண்டார்கள். தொழுது முடித்ததும் (ஆயிஷா) இந்த ஆடையை அபூ ஜஹ்மிடம் கொடுத்து விடு. தொழும் போது இந்த ஆடையின் வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளதைப் பார்த்தேன். என்னை அது குழப்பத்திலாழ்த்தியது என்று நபி(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூதில் உள்ளது)


أَهْدَى أَبُو جَهْمِ بْنُ حُذَيْفَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمِيصَةً شَامِيَّةً، لَهَا عَلَمٌ. فَشَهِدَ فِيهَا الصَّلَاةَ. فَلَمَّا انْصَرَفَ قَالَ: «رُدِّي هَذِهِ الْخَمِيصَةَ إِلَى أبِي جَهْمٍ فَإِنِّي نَظَرْتُ إِلَى عَلَمِهَا فِي الصَّلَاةِ فَكَادَ يَفْتِنُنِي»


muwatta-malik-257

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

257. நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹர் தொழ வைத்தார்கள் இரண்டாவது ரக்அத்தில் உட்காராமல் எழுந்து நின்றார்கள். தன் தொழுகையை முடித்த போது, இரண்டு ஸஜ்தா செய்தார்கள். பின்பு அதன்பின் ஸலாம் கொடுத்தார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ، فَقَامَ فِي اثْنَتَيْنِ وَلَمْ يَجْلِسْ فِيهِمَا، فَلَمَّا قَضَى صَلَاتَهُ، سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ بَعْدَ ذَلِكَ»


muwatta-malik-256

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 57

நான்காவது ரக்அத்தில் அல்லது இரண்டாவது ரக்அத்தில் உட்காராமல் நிலைக்கு வந்து விட்டால்..

256. நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கே இரண்டு ரக்அத் தொழ வைத்தார்கள். பின்பு உட்காராமல் நிலைக்கு வந்து விட்டார்கள். அவர்களுடன் மக்களும் நிலைக்கு வந்து விட்டனர். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடிக்கும் சமயம் ஸலாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். (ஆனால் அவர்களோ) தக்பீர் கூறினார்கள். பின்பு ஸலாம் கொடுக்கும் முன்பே இரண்டு ஸஜ்தாச் செய்தனர். பின்பு ஸலாம் கொடுத்தார்கள் என அப்துல்லா இப்னு புஹைனா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ»، ثُمَّ قَامَ فَلَمْ يَجْلِسْ، فَقَامَ النَّاسُ مَعَهُ. فَلَمَّا قَضَى صَلَاتَهُ، وَنَظَرْنَا تَسْلِيمَهُ، «كَبَّرَ. ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ، وَهُوَ جَالِسٌ قَبْلَ التَّسْلِيمِ. ثُمَّ سَلَّمَ»


muwatta-malik-255

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

255. தொழுகையில் மறதி ஏற்படுவது பற்றி கேட்கப்பட்டால், மறதியானவா நினைபடுத்தி தீர்மானம் செய்து, தீர்மானப்படி தொழட்டும் என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் பதில் கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا سُئِلَ عَنِ النِّسْيَانِ فِي الصَّلَاةِ قَالَ: «لِيَتَوَخَّ أَحَدُكُمِ الَّذِي يَظُنُّ أَنَّهُ نَسِيَ مِنْ صَلَاتِهِ، فَلْيُصَلِّهِ»


muwatta-malik-254

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

254. தன் தொழுகையில் ஒருவர் தான் தொழுதது எத்தனை முறை மூன்றா? நான்கா? என அறியாமல் சந்தேகம் கொண்டால் என்ன செய்வார்? என அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்களிடமும், கஹ்புல் அஹ்பார்(ரலி) அவர்களிடமும் கேட்டேன். அவர்மற்றொரு ரக்அத் தொழட்டும். இருப்பில் இருந்தவாறே இரண்டு ஸஜ்தா செய்யட்டும் என இருவரும் பதில் கூறினார்கள் என அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.


سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ وَكَعْبَ الْأَحْبَارِ عَنِ الَّذِي يَشُكُّ فِي صَلَاتِهِ فَلَا يَدْرِي كَمْ صَلَّى أَثَلَاثًا أَمْ أَرْبَعًا؟ فَكِلَاهُمَا قَالَ: «لِيُصَلِّ رَكْعَةً أُخْرَى، ثُمَّ لْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ»


muwatta-malik-253

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

253. உங்களில் ஒருவருக்கு தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் தொழுகையில் மறந்ததாக கருதுபவர் நினைவுபடுத்தி தீர்மானம் செய்யட்டும். அதை தொழட்டும். பின்பு உட்கார்ந்த நிலையில் மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும் என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறினார்கள் என ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் கூறுகிறார்கள்.


«إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَتَوَخَّ الَّذِي يَظُنُّ أَنَّهُ نَسِيَ مِنْ صَلَاتِهِ، فَلْيُصَلِّهِ، ثُمَّ لْيَسْجُدْ سَجْدَتَيِ السَّهْوِ وَهُوَ جَالِسٌ»


muwatta-malik-252

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 56

தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால், தொழுபவர் அதனை முழுமைப்படுத்துதல்

252. உங்களில் ஒருவருக்கு தொழுகையில் தான் தொழுதது மூன்றா? நான்கா? என அவரால் அறியாத அளவுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவர் மற்றொரு ரக்அத் தொழட்டும்! பின்பு ஸலாம் கொடுக்கு முன் உட்கார்ந்த நிலையில் இரண்டு சஜ்தா செய்யட்டும். அவர் தொழுதது ஐந்தாவது ரக்அதாக இருந்தால் அவர் செய்த இரண்டு ஸஜ்தாக்களும் (ஐந்தாவது ரக்அத்தும் சேர்ந்து) இரண்டு ரக்அத்தாக ஆகி விடும். அது நான்காவதாக இருந்தால் அந்த இரண்டு ஸஜ்தாக்களும் ஷைத்தானுக்கு மூக்குடைப்பாக அமையும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அதாஉ இப்னு யஸார் கூறுகிறார்கள்.

(இது அபூ ஸயீதில் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிப்பதாக முஸ்லிம், அஹ்மதில் உள்ளது).


«إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى أَثَلَاثًا أَمْ أَرْبَعًا؟ فَلْيُصَلِّي رَكْعَةً. وَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ، قَبْلَ التَّسْلِيمِ. فَإِنْ كَانَتِ الرَّكْعَةُ الَّتِي صَلَّى خَامِسَةً، شَفَعَهَا بِهَاتَيْنِ السَّجْدَتَيْنِ، وَإِنْ كَانَتْ رَابِعَةً فَالسَّجْدَتَانِ تَرْغِيمٌ لِلشَّيْطَانِ»


muwatta-malik-250

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

250. இதே போல் அபூஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் அவர்களும் அறிவிக்கின்றார்கள்.


مِثْلَ ذَلِكَ


Next Page » « Previous Page