Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-238

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

238. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகையில் சம்மணமிட்டு அமர்ந்தார்கள். நானும் அவ்வாறே அமர்ந்தேன். அதுசமயம் நான் சிறுவனாக இருந்தேன். அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் (நான் அப்படி உட்கார) தடை செய்து விட்டு, ‘உனது வலது காலை நட்டு வைத்தும் கடது காலை வெளியாக்குவது தான் தொழுகையின் சுன்னத் என்று கூறினார்கள்.

அப்படியானால் நீங்கள் இப்படி அமர்ந்தீர்களே எனக் கேட்டேன். என் கால்கள் என்னை சுமக்க வலுவிழந்து போய் விட்டன. (எனவே சம்மணமிட்டேன்) என்று கூறினார்கள். இதை அவர்களின் மகன் உபைதுல்லாஹ் கூறுகிறார்கள்.


أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ: كَانَ يَرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَتَرَبَّعُ فِي الصَّلَاةِ إِذَا جَلَسَ، قَالَ: فَفَعَلْتُهُ وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ، فَنَهَانِي عَبْدُ اللَّهِ

وَقَالَ: «إِنَّمَا سُنَّةُ الصَّلَاةِ أَنْ تَنْصِبَ رِجْلَكَ الْيُمْنَى، وَتَثْنِيَ رِجْلَكَ الْيُسْرَى». فَقُلْتُ لَهُ: فَإِنَّكَ تَفْعَلُ ذَلِكَ. فَقَالَ: «إِنَّ رِجْلَيَّ لَا تَحْمِلَانِي»


muwatta-malik-237

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

237. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகைகளில் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையே தங்கள் பாதங்களின் முனையை ஊண்றி அதன் மீது அமர்ந்தார்கள். தொழுகை முடிந்ததும் இது பற்றி அவர்களிடம் நான் கேட்டேன். ‘இது தொழுகையின் சுன்னத்தல்ல! நான் நோயாளி என்பதாலேயே அப்படிச் செய்தேன்” என்று பதில் கூறினார்கள் என முகீரா இப்னு ஹகீம் கூறுகின்றார்கள்.


أَنَّهُ رَأَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَرْجِعُ فِي سَجْدَتَيْنِ فِي الصَّلَاةِ، عَلَى صُدُورِ قَدَمَيْهِ، فَلَمَّا انْصَرَفَ ذَكَرَ لَهُ ذَلِكَ. فَقَالَ: «إِنَّهَا لَيْسَتْ سُنَّةَ الصَّلَاةِ. وَإِنَّمَا أَفْعَلُ هَذَا مِنْ أَجْلِ أَنِّي أَشْتَكِي»


muwatta-malik-236

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

236. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அருகில் தொழுத ஒருவர் 4 வது ரக்அத்தில் உட்கார்ந்த போது தன் கால்களை உள் கொடுத்து, சம்மணமிட்டு அமர்ந்தார்கள். தொழுது முடிந்த அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவாகள் அவரிடம் இது பற்றி குறை கூறினார். நீங்கள் இப்படித் தானே அமர்ந்தீர்கள் என அம்மனிதர் கூறியதும் ‘நான் நோயாளி” என்று கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து கேட்டதாகக அப்துல்லா இப்னு தீனார் கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، وَصَلَّى إِلَى جَنْبِهِ رَجُلٌ، فَلَمَّا جَلَسَ الرَّجُلُ فِي أَرْبَعٍ، تَرَبَّعَ وَثَنَى رِجْلَيْهِ، فَلَمَّا انْصَرَفَ عَبْدُ اللَّهِ عَابَ ذَلِكَ عَلَيْهِ، فَقَالَ الرَّجُلُ: فَإِنَّكَ تَفْعَلُ ذَلِكَ. فَقَالَ: عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ «فَإِنِّي أَشْتَكِي»


muwatta-malik-235

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 52

தொழுகை இருப்பில் அமரும் முறை

235. தொழுகையில் பொடிக் கற்களால் நான் சுண்டிக் கொண்டிருந்தேன். இதைக் கண்ட அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவாகள் தொழுகை முடிந்ததும், என்னைத் தடுத்தார்கள். ”நபி(ஸல்) அவர்கள்; செய்தது போல் செய்”” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் (இருப்பில்) அமர்ந்தால் தனது வலது தொடை மீது தனது உள்ளங்கையை வைப்பார்கள். தன் விரல்களை வளைத்து பெரு விரலை அடுத்துள்ள விரலால் இஷாரா செய்வார்கள். தனது இடது தொடை மீது இடது உள்ளங்கையை வைப்பார்கள். இவ்வாறே அவர்கள் செய்வார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறினார்கள்.

இதை அலீ இப்னு அப்துர் ரஹ்மான் அல் மஆதி கூறுகின்றார்கள்.


رَآنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَأَنَا أَعْبَثُ بِالْحَصْبَاءِ فِي الصَّلَاةِ. فَلَمَّا انْصَرَفْتُ نَهَانِي. وَقَالَ: اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ. فَقُلْتُ: وَكَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ؟ قَالَ: كَانَ «إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ، وَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَقَبَضَ أَصَابِعَهُ كُلَّهَا، وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ، وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى»، وَقَالَ هَكَذَا كَانَ يَفْعَلُ


muwatta-malik-234

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

234. ஸமிஅல்லாஹுலிம் ஹமிதா என்று இமாம் கூறினால் உடனே நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா வலகல் ஹம்து என்று கூறுங்கள். இப்படி ஒருவர் சொல்வது, மலக்குகளின் இந்தச் சொல்லுடன் இணைந்து விட்டால் அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


إِذَا قَالَ الْإِمَامُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ


muwatta-malik-232

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

232. கைரில் மஹ்ழூபி அலய்ஹிம் வலழ்ழால்லீன் என்று இமாம் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஒருவர் தன் ஆமினை மலக்குகளின் ஆமினுடன் சரியாக கூறி விட்டால் அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது அஹ்மத், நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).

إِذَا قَالَ الإِمَامُ: {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ} فَقُولُوا: آمِينَ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.


muwatta-malik-233

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

233. உங்களில் ஒருவர் ஆமீன் கூறுவதும், அதேசமயம் வானில் உள்ள வானவர்கள் ஆமீன் கூறுவதும் ஒன்றோடு மற்றொன்று இணைந்து விட்டால் அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


إِذَا قَالَ أَحَدُكُمْ آمِينَ، وَقَالَتِ الْمَلاَئِكَةُ فِي السَّمَاءِ آمِينَ، فَوَافَقَتْ إِحْدَاهُمَا الأَُخْرَى، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.


muwatta-malik-231

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 51

இமாமுக்கு பின்னே ஆமீன் கூறுதல்

231. இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஒருவரது ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு சாரியாக அமைந்து விட்டால் அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி(ஸல்) அவர்களும் ஆமீன் கூறுவார்கள் என (இதன் அறிவிப்பாளாரில் ஒருவரான) இப்னு ஷிஹாப் கூறுகிறார்.

இது புகாரி, முஸ்னத் அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜாவில் இடம் பெற்றுள்ளது. இப்னு ஷிஹாமின் வார்த்தை இல்லாமல் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது).


«إِذَا أَمَّنَ الْإِمَامُ فَأَمِّنُوا، فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»،

قَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «آمِينَ»


muwatta-malik-230

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

230. சப்தமிட்டு ஓதித் தொழுத தொழுகையை முடித்த நபி(ஸல்) அவர்கள், உங்களில் எவரேனும்சற்று முன் என்னுடன் ஓதினாரா? என்று கேட்டார்கள். ஒருவர், இறைத்தூதர் அவர்களே! ஆம்! நான் தான் என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள், நான் குர்ஆன் ஓதுவதற்கு (இது) இடையூறாக உள்ளது என நான் கூறிக் கொண்டிருக்கின்றேன். (பிறகு ஏன் ஓதுகின்றீர்கள்?) என்று கேட்டார்கள். உடனே நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்கள் சப்தமிட்டு தொழுகையில் ஓதும் கிராஅத்தைக் கேட்டதும், தாங்களும் ஓதுவதை விட்டு விட்டனர் என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது அபூதாவூது, நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், முஸ்னதுஷ்ஷாபி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنْ صَلَاةٍ جَهَرَ فِيهَا بِالْقِرَاءَةِ، فَقَالَ: «هَلْ قَرَأَ مَعِي مِنْكُمْ أَحَدٌ آنِفًا»؟ فَقَالَ رَجُلٌ: نَعَمْ. أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أَقُولُ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ»، فَانْتَهَى النَّاسُ عَنِ الْقِرَاءَةِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا جَهَرَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْقِرَاءَةِ، حِينَ سَمِعُوا ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


muwatta-malik-228

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 50

சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாமுக்குப் பின்னால் ஓதாமல் இருப்பது

228. இமாமுக்குப் பின்னால் தொழுபவர் ஓதலமா? எனக் கேட்கப்பட்டால், உங்களில் ஒருவர் இமாமுக்குப் பின்னால் தொழுதால் அவருக்கு இமாமின் கிராஅத்தே போதும். தனித்துத் தொழுதால் அவர் ஓதட்டும் என்ற அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள். மேலும் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவாகள் இமாமுக்குப் பின்னே தொழுதால் ஓத மாட்டார்கள் ன நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا سُئِلَ: هَلْ يَقْرَأُ أَحَدٌ خَلْفَ الْإِمَامِ؟ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ خَلْفَ الْإِمَامِ فَحَسْبُهُ قِرَاءَةُ الْإِمَامِ، وَإِذَا صَلَّى وَحْدَهُ فَلْيَقْرَأْ»، قَالَ: وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ «لَا يَقْرَأُ خَلْفَ الْإِمَامِ»


Next Page » « Previous Page