Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-227

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

227. இமாம் சப்தமிட்டு ஓதாத தொழுகையில் இமாமின் பின்னே நாபிஉ இப்னு ஜுபைர் இப்னு முத்இம் அவர்கள் ஓதுவார்கள் என யஸீத் இப்னு ரூமான் கூறுகின்றார்கள்.

இந்த நிலை தான் இது விஷயமாக நான் கேட்டவற்றில் மிக விருப்பமானது என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ كَانَ «يَقْرَأُ خَلْفَ الْإِمَامِ فِيمَا لَا يَجْهَرُ فِيهِ بِالْقِرَاءَةِ»

قَالَ مَالِكٌ: «وَذَلِكَ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَ»


muwatta-malik-226

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

226. இமாம் சப்தமிட்டு ஓதாத தொழுகையில் இமாமுக்குப் பின்னால் காஸிம் இப்னு முஹம்மத் அவர்கள் ஓதுவார்கள் என ரபீஆ இப்னு அபூ அப்துர் ரஹ்மான் கூறுகின்றார்கள்.


أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ كَانَ «يَقْرَأُ خَلْفَ الْإِمَامِ فِيمَا لَا يَجْهَرُ فِيهِ الْإِمَامُ بِالْقِرَاءَةِ»


muwatta-malik-225

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

225. இமாம் சப்தமிட்டு ஓதாத தொழுகையில் இமாமுக்குப் பின்னால் (தொழுதால் என்தந்தை) உர்வா அவா்கள் (கிராஅத்) ஓதுவார்கள் என ஹிஷாம் கூறுகின்றார்கள்.


أَنَّهُ كَانَ «يَقْرَأُ خَلْفَ الْإِمَامِ، فِيمَا لَا يَجْهَرُ فِيهِ الْإِمَامُ بِالْقِرَاءَةِ»


muwatta-malik-224

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 49

சப்தமிட்டு ஓதாத தொழுகையில் இமாமுக்குப் பின்னால் ஓதுவது

224. உம்முல் குர்ஆனை (பாத்திஹா சூராவை) ஓதாமல் தொழுதால் அது குறைபாடு உடையதாகும். அது குறைபாடு உடையதாகும். பூர்த்தியாகாத குறைபாடு உடையதாகும் என நபி (ஸல்) அவாகள் கூற நான் கேட்டதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்களே, இமாமுக்குப் பின்னே பல் சமயங்களில் தொழுகிறேனே (என்ன செய்வது) என்று கேட்டேன். உடனே அவர்கள் என் கையில் விரலைக் குத்தி விட்டு, நீ உன் மனதிற்குள் ஓதிக் கொள். (காரணம்) எனக்கும் என் அடியானுக்கும் மத்தியில் சரி பாதியாக தொழுகையைப் பங்கிட்டுள்ளேன். ஒரு பாதி எனக்கும், மற்றொரு பாதி என் அடியானுக்குமாயிருக்கும். அதில் அவன் கேட்பது, என் அடியானுக்கு உண்டு என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும்ஒரு அடியான், அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.. என்று கூறினால் அப்போது அல்லாஹ் என் அடியான் புகழ்கிறான் என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் என்று கூறுவான். அப்போது அல்லாஹ், என் அடியான என்னை போற்றுகிறான் என்று கூறுவான். மாலிகி யவ்மித்தீன் என அடியான் கூறுவான். அப்போது அல்லாஹ் என் அடியான் என்னை மகத்துவப்படுத்தி விட்டான் என்று கூறுவான். இய்யாக்க நஃபுது வ இய்யாக நஸ்தஈன் என அடியான் கூறுவான். இந்த வசனம் எனக்கும்

«مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ هِيَ خِدَاجٌ هِيَ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ»،

قَالَ، فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ إِنِّي أَحْيَانًا أَكُونُ وَرَاءَ الْإِمَامِ. قَالَ: فَغَمَزَ ذِرَاعِي، ثُمَّ قَالَ: اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ يَا فَارِسِيُّ
فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: “قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ، فَنِصْفُهَا لِي وَنِصْفُهَا لِعَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ،

قَالَ رَسُولُ  اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْرَءُوا يَقُولُ الْعَبْدُ: {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]، يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: حَمِدَنِي عَبْدِي. وَيَقُولُ الْعَبْدُ: {الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]. يَقُولُ اللَّهُ: أَثْنَى عَلَيَّ عَبْدِي، وَيَقُولُ الْعَبْدُ: {مالِكٍ يَوْمِ الدِّينِ} يَقُولُ اللَّهُ: مَجَّدَنِي عَبْدِي، يَقُولُ الْعَبْدُ: {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} [الفاتحة: 5]، فَهَذِهِ الْآيَةُ بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ، يَقُولُ الْعَبْدُ: {اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، فَهَؤُلَاءِ لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ


muwatta-malik-223

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

223. இமாமுக்குப் பின்னாலேயே தவிர உம்முல் குர்ஆனை ஒரு ரக்அத்தில் ஓதாமல் ஒருவன் தொழுதால், அவன் தொழுதவனாக ஆக மாட்டான் என்று ஜாபிர்(ரலி) கூறியதாக வஹ்பு இப்னு கய்ஸான் கூறுகின்றார்கள்.


«مَنْ صَلَّى رَكْعَةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ، فَلَمْ يُصَلِّ إِلَّا وَرَاءَ الْإِمَامِ»


muwatta-malik-222

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 48

உம்முல் குர்ஆன் பற்றி..

222. நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஃஹ்பு(ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் தொழுது கொண்டிருந்தார். தன் தொழுகையை அவர் முடித்ததும், நபி(ஸல்) அவர்களை சந்தித்தார். நபி(ஸல்) அவர்கள் தன் கையை அவாரின் கை மீது வைத்தார்கள். பள்ளிவாசலின் வாசல் வரை வருவதற்கு நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், தவ்றாத்திலும், இன்ஜீலிலும் அல்லாஹ் இறக்கிய ஒரு சூராவை குர்ஆனிலும் அது போன்று உள்ளதை நீ அறிந்து கொள்ளும் வரை பள்ளியிலிருந்து நீ வெளியேறாமல் இருக்க நான் விரும்புகின்றேன்; என்று கூறினார்கள். அவர்கள் விரும்பியபடி நான் என் நடையை சுருக்கினேன். பின்பு, இறைத்தூதர் அவர்களே! என்னிடம் வாக்குறுதி தந்தபடி அந்த சூரா பற்றி (கூறுங்கள்) என்று கேட்டேன். தொழுகையை ஆரம்பிக்கும் போது எப்படி ஓதுவாய்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்… என ஓதினேன். அதன் இறுதிக்கு நான் வந்ததும், அது இந்த சூரா தான். இது, புகழுக்குரிய 7 வசனங்களை உள்ளடக்கியதாகும். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள மகத்தான குர்ஆன் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَادَى أُبَيَّ بْنَ كَعْبٍ وَهُوَ يُصَلِّي، فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ لَحِقَهُ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ عَلَى يَدِهِ. وَهُوَ يُرِيدُ أَنْ يَخْرُجَ مِنْ بَابِ الْمَسْجِدِ. فَقَالَ: «إِنِّي لَأَرْجُو أَنْ لَا تَخْرُجَ مِنَ الْمَسْجِدِ حَتَّى تَعْلَمَ سُورَةً، مَا أَنْزَلَ اللَّهُ فِي التَّوْرَاةِ، وَلَا فِي الْإِنْجِيلِ، وَلَا فِي الْقُرْآنِ مِثْلَهَا»، قَالَ أُبَيٌّ فَجَعَلْتُ أُبْطِئُ فِي الْمَشْيِ رَجَاءَ ذَلِكَ. ثُمَّ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ السُّورَةَ الَّتِي وَعَدْتَنِي، قَالَ: «كَيْفَ تَقْرَأُ إِذَا افْتَتَحْتَ الصَّلَاةَ؟» قَالَ فَقَرَأْتُ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]، حَتَّى أَتَيْتُ عَلَى آخِرِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ هَذِهِ السُّورَةُ وَهِيَ السَّبْعُ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُعْطِيتُ»


muwatta-malik-221

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

221. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் பயண காலத்தில் சுப்ஹுத் தொழுகையில் குர்ஆனில் இருந்து முதல் 10 சூராக்களை ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து சூராவையும் மற்றொரு சூராவையும் ஓதுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَقْرَأُ فِي الصُّبْحِ، فِي السَّفَرِ، بِالْعَشْرِ السُّوَرِ الْأُوَلِ مِنَ الْمُفَصَّلِ». فِي كُلِّ رَكْعَةٍ، بِأُمِّ الْقُرْآنِ وَسُورَةٍ


muwatta-malik-220

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

220. உதுமான் இப்னு அஃபான்(ரலி) அவர்கள் சுப்ஹு தொழுகையில் திருப்பி, திருப்பி அதிகமாக ஓதியதில் இருந்து தான் சூரா யூசுஃப் அத்தியாயத்தை நான் மனனம் செய்துள்ளேன் என ஃபராபிஸா இப்னு உமைர் அல் ஹன்பீ அவாகள் கூறினார்கள்.


«مَا أَخَذْتُ سُورَةَ يُوسُفَ إِلَّا مِنْ قِرَاءَةِ عُثْمَانَ بْنِ عَفَّانَ إِيَّاهَا فِي الصُّبْحِ»، مِنْ كَثْرَةِ مَا كَانَ يُرَدِّدُهَا لَنَا


muwatta-malik-219

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

219. நாங்கள் உமர்(ரலி) அவர்களுக்குப் பின்னால் சுபுஹுத் தொழுதோம். அது சமயம் அவர்கள் அதில் சூரா யூசுஃப் (என்ற 12 வது) அத்தியாயத்தையும், சூரா ஹஜ் (என்ற 22 வது) அத்தியாயத்தையும் நிதானமாக ஒதினார்கள் என அப்துல்லா இப்னு ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்படியானால் உமர்(ரலி) அவர்கள் சுப்ஹு நேரம் வந்ததுமே தொழுகைக்கு நின்றிருக்க வேண்டுமே என்று கேட்டேன். ஆம்! என்று கூறினார்கள் என உர்வா கூறுகின்றார்கள்.


صَلَّيْنَا وَرَاءَ عُمَرَ بْنِ الْخَطَّابِ الصُّبْحَ. «فَقَرَأَ فِيهَا بِسُورَةِ يُوسُفَ وَسُورَةِ الْحَجِّ»، قِرَاءَةً بَطِيئَةً، فَقُلْتُ: وَاللَّهِ، إِذًا، لَقَدْ كَانَ يَقُومُ حِينَ يَطْلُعُ الْفَجْرُ. قَالَ: أَجَلْ


muwatta-malik-218

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 47

சுப்ஹுத் தொழுகையில் கிராஅத் ஓதுதல்

218. அபூபக்கர்(ரலி) அவர்கள் சுப்ஹைத் தொழ வைக்கும் போது, அதில் இரண்டு ரக்அத்திலும் (குர்ஆனின்) பகரா என்ற (இரண்டாவது) அத்தியாயத்தை ஓதுவார்கள் என உர்வா கூறுகின்றார்கள்.

(இதைக் கூறும் உர்வா, அபூபக்கர்(ரலி) அவர்களைப் பார்த்ததில்லை).


أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ «صَلَّى الصُّبْحَ فَقَرَأَ فِيهَا سُورَةَ الْبَقَرَةِ، فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا»


Next Page » « Previous Page