Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-217

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

217. நாபிஉ இப்னு ஜுபைர் மத்இம் அவர்களின் அருகே தொழுது கொண்டிருந்தேன். (தனக்கு ஆயத் தொடர் மறந்து விட்டால்) அவர் என்னைச் சுரண்டுவார். நாங்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவருக்கு எடுத்துக் கூறுவேன் என யஸீத் இப்னு ரூமான் கூறுகிறார்கள்.


كُنْتُ أُصَلِّي إِلَى جَانِبِ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، فَيَغْمِزُنِي، فَأَفْتَحُ عَلَيْهِ وَنَحْنُ نُصَلِّي


muwatta-malik-216

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

216. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு இமாம் சப்தமிட்டு கிராஅத் ஓதும் தொழுகையில் ஒரு ரக்அத் தவறி விட்டால் இமாம் ஸலாம் கொடுத்ததும் அப்துல்லா(ரலி) அவர்கள் எழுந்து நின்று (தனக்குத் தவறிய தொழுகையை) நிறைவேற்றும் சமயத்தில் சப்தமிட்டு கிராஅத் ஓதுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «إِذَا فَاتَهُ شَيْءٌ مِنَ الصَّلَاةِ مَعَ الْإِمَامِ، فِيمَا جَهَرَ فِيهِ الْإِمَامُ بِالْقِرَاءَةِ» أَنَّهُ إِذَا سَلَّمَ الْإِمَامُ، قَامَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ «فَقَرَأَ لِنَفْسِهِ فِيمَا يَقْضِي، وَجَهَرَ»


muwatta-malik-215

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

215. பிலாத் என்ற இடத்தில் உள்ள அபூஜஹ்ம் அவர்களின் வீடு வரை உமர்(ரலி) அவர்களின் கிராஅத்தை நாங்கள் கேட்போம் என அபூஸுஹைல் அவர்கள் தன் தந்தை மாலிக் கூறியதாக கூறுகிறார்கள்.


كُنَّا «نَسْمَعُ قِرَاءَةَ عُمَرَ بْنِ الْخَطَّابِ عِنْدَ دَارِ أَبِي جَهْمٍ بِالْبَلَاطِ»


muwatta-malik-214

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

214. அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உதுமான்(ரலி) அவர்கள் பின்னால் (தொழ) நான் நின்றுள்ளேன். அவர்கள் ஒவ்வொருவரும் தொழுகையை ஆரம்பிக்கும் போது, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஓத மாட்டார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


قُمْتُ وَرَاءَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ فَكُلُّهُمْ كَانَ «لَا يَقْرَأُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ»


muwatta-malik-213

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

213. மக்கள் தொழுதுக் கொண்டிருக்கும் போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள் அதிகம் சத்தமிட்டு ஓதிக் கொண்டிருந்தார்கள். (தொழுகை முடிந்தபிறகு) நபி (ஸல்) அவர்கள், “தொழுது கொண்டிருப்பவர், தன் இறைவனிடம் உரையாடுகிறார். எனவே எதன் மூலம் அவனிடம் உரையாட வேண்டும் என்பது பற்றி அவர் சிந்திக்கட்டும்! உங்களில் சிலர், சிலருக்கு இடையூறாக சத்தமிட்டு குர்ஆனை ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஃபர்வா பின் அம்ர் அல்பயாளீ (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَى النَّاسِ وَهُمْ يُصَلُّونَ. وَقَدْ عَلَتْ أَصْوَاتُهُمْ بِالْقِرَاءَةِ، فَقَالَ: «إِنَّ الْمُصَلِّيَ يُنَاجِي رَبَّهُ، فَلْيَنْظُرْ بِمَا يُنَاجِيهِ بِهِ، وَلَا يَجْهَرْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ بِالْقُرْآنِ»


muwatta-malik-212

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 46

ஓத வேண்டிய முறை

212. பட்டு கலந்த ஆடையை உடுத்தவும், தங்க மோதிரம் அணியவும், ருகூஉ வில் குர்ஆன் ஓதிடவும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என அலீ(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ لُبْسِ الْقَسِّيِّ، وَعَنْ تَخَتُّمِ الذَّهَبِ، وَعَنْ قِرَاءَةِ الْقُرْآنِ فِي الرُّكُوعِ»


muwatta-malik-211

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

211. நபி(ஸல்) அவர்களுடன் நான் இஷாத் தொழுகைக்குப் பின்னால் தொழுதேன். அதிலே, அத்தீன் என்ற (95 வது) அத்தியாயத்தை ஓதினார்கள் என பரா இப்னு ஆஸிப்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


«صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ، فَقَرَأَ فِيهَا بِالتِّينِ وَالزَّيْتُونِ»


muwatta-malik-210

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

210. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் நான்கு ரக்அத் தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும், அல்ஹம்து சூராவையும் குர்ஆனின் மற்றொரு சூராவையும் ஓதுவார்கள். சில சமயம் பர்ளான தொழுகைகளில் முதல் ரக்அத்தில் இரண்டு மூன்று சூராக்கள் ஓதுவார்கள். மஹ்ரிபின் (முந்தின) இரண்டு ரக்அத்திலும் இது போல் அல்ஹம்து சூராவுடன் மற்ற இரண்டு சூராக்கள் ஓதுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «إِذَا صَلَّى وَحْدَهُ، يَقْرَأُ فِي الْأَرْبَعِ جَمِيعًا. فِي كُلِّ رَكْعَةٍ، بِأُمِّ الْقُرْآنِ وَسُورَةٍ مِنَ الْقُرْآنِ. وَكَانَ يَقْرَأُ أَحْيَانًا بِالسُّورَتَيْنِ وَالثَّلَاثِ فِي الرَّكْعَةِ الْوَاحِدَةِ، مِنْ صَلَاةِ الْفَرِيضَةِ. وَيَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ، مِنَ الْمَغْرِبِ كَذَلِكَ بِأُمِّ الْقُرْآنِ وَسُورَةٍ سُورَةٍ»


muwatta-malik-209

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

209. அபூபக்கர்(ரலி) அவர்களது ஆட்சியின் போது நான் மதீனாவிற்கு வந்தேன். அவருக்குப் பின்னால் மஹ்ரிபைத் தொழுதேன். முந்திய இரண்டு ரக்அத் திலும் அல்ஹம்து சூராவையும், கிஸார் முஃபஸ்ஸலில் இருந்து இரண்டு சூராக்களையும் ஓதினார்கள். பின்பு மூன்றாவது ரக்அத்துக்காக எழுந்து நின்றார்கள். என்னுடைய ஆடை அவர்களின் ஆடையை தொடும் அளவுக்கு நான் அவர்களை நெருங்கி இருந்தேன். அது சமயம் அவர்கள் அல்ஹம்து சூராவையும், 3 வது அத்தியாயத்தின் 8 வது வசனத்தையும் ஓதியதை நான் கேட்டேன் என அபூ அப்துல்லா அஸ்ஸுனாபிஹ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


قَدِمْتُ الْمَدِينَةَ فِي خِلَافَةِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ فَصَلَّيْتُ وَرَاءَهُ الْمَغْرِبَ ” فَقَرَأَ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ بِأُمِّ الْقُرْآنِ، وَسُورَةٍ: سُورَةٍ مِنْ قِصَارِ الْمُفَصَّلِ، ثُمَّ قَامَ فِي الثَّالِثَةِ، فَدَنَوْتُ مِنْهُ حَتَّى إِنَّ ثِيَابِي لَتَكَادُ أَنْ تَمَسَّ ثِيَابَهُ. فَسَمِعْتُهُ قَرَأَ بِأُمِّ الْقُرْآنِ وَبِهَذِهِ الْآيَةِ {رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا، وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ} [آل عمران: 8]


muwatta-malik-208

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

208. வல் முர்ஸலாத்தில் உர்ஃபன் எனத் துவங்கும் (77 வது) அத்தியாயத்தை நான் ஓதியதைக் கேட்ட ஹாரித் அவர்களின் மகள் உம்முல் ஃபழ்லு(ரலி) அவர்கள், மகனே இந்த சூரா தான் நான், நபி(ஸல்) அவாகள் மஹ்ரிபு தொழுகையில்ஓதியதாக இறுதியாகக் கேட்டதாகும். இதை உன் கிராஅத் நினைவுபடுத்தி விட்டது என்று கூறினார்கள் என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ سَمِعَتْهُ وَهُوَ يَقْرَأُ {وَالْمُرْسَلَاتِ عُرْفًا} [المرسلات: 1] فَقَالَتْ لَهُ: يَا بُنَيَّ «لَقَدْ ذَكَّرْتَنِي بِقِرَاءَتِكَ هَذِهِ السُّورَةَ، إِنَّهَا لَآخِرُ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِهَا فِي الْمَغْرِبِ»


Next Page » « Previous Page