Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-207

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 46

மஹ்ரிப், இஷாத் தொழுகையில் ஓத வேண்டியவை

207. மஹ்ரிபுத் தொழுகையில் அத்தூர் என்ற (52 வது) அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதிட நான் கேட்டுள்ளேன் என ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «قَرَأَ بِالطُّورِ فِي الْمَغْرِبِ»


muwatta-malik-203

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

203. ஒரு மனிதன் ருகூஉ வை அடைந்து அவர் ஒரே தக்பீர் மட்டும் (தொழுகையை ஆரம்பிக்கவும், ருகூஉ வுக்கும் சேர்த்து) கூறினால், அவனுக்கு இந்த (ஒரு) தக்பீர் போதுமாகும் என இப்னு ஷிஹாப் கூறுவார்கள்.

தொழுகையை ஆரம்பிக்கவும் இந்த தக்பீர் மூலம் என எண்ணி இருந்தால் இது போதும், என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


«إِذَا أَدْرَكَ الرَّجُلُ الرَّكْعَةَ فَكَبَّرَ تَكْبِيرَةً وَاحِدَةً، أَجْزَأَتْ عَنْهُ تِلْكَ التَّكْبِيرَةُ»


muwatta-malik-202

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

202. தொழுகையில் தக்பீர் கூறுவதை மக்களுக்குக் கற்றுத் தந்த ஜாபிர் இப்னு அப்துல்லா(ரலி) அவர்கள், நாங்கள் (தொழுகையில்) குனியும் போதும் உயரும் போதும் தக்பீர் கூற எங்களுக்கு கட்டளையிடுபவர்களாக இருந்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர் வஹ்பு இப்னு கைஸான் அவர்கள் இதைக் கூறுகின்றார்கள்).


أَنَّهُ كَانَ يُعَلِّمُهُمُ التَّكْبِيرَ فِي الصَّلَاةِ، قَالَ: فَكَانَ «يَأْمُرُنَا أَنْ نُكَبِّرَ كُلَّمَا خَفَضْنَا وَرَفَعْنَا»


muwatta-malik-201

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

201. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள், தொழுகையை ஆரம்பிக்கும் போது தன் தோள் புஜத்திற்கு நேராக தன் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉ வில் இருந்து தலையை உயர்த்தும் போதும், அதை விட கொஞ்சம் குறைவாக உயர்த்துவார்கள் என நாபிஉ அவர்கள் கூறுகின்றார்கள்.

(இது புகாரி யில் உள்ளது).


«إِذَا افْتَتَحَ الصَّلَاةَ، رَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ. وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا دُونَ ذَلِكَ»


muwatta-malik-200

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

200. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகையில் குனியும் போதும், நிமிரும் போதும் தக்பீர் கூறுவார்கள் என ஸாலிம் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ ” يُكَبِّرُ فِي الصَّلَاةِ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ


muwatta-malik-199

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

199. அபூஹுரைரா(ரலி) அவர்கள், மக்களுக்கு தொழ வைக்கும் போது, குனியும் போதும், நிமிரும் போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுது முடித்ததும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி(ஸல்) அவர்களின் தொழுகையைத் தான் உங்களுக்குக் காண்பித்தேன், என்றும் கூறுவார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு(ரலி) அவர்களின் மகன் அபூஸலமா கூறுகின்றார்கள்.


أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يُصَلِّي لَهُمْ فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ، فَإِذَا انْصَرَفَ، قَالَ: وَاللَّهِ إِنِّي لَأَشْبَهُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


muwatta-malik-198

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

198. நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் தன் கைகளை உயர்த்துபவர்களாக இருந்தனர் என சுலைமான் இப்னு யஸார் அறிவிக்கின்றார்கள். (இவர் நபித்தோழர் அல்ல).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ فِي الصَّلَاةِ


muwatta-malik-197

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

197. நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் குனியும் போதும், நிமிரும் போதும் தக்பீர் கூறுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை (மரணிக்கும் வரை) அவர்களின் தொழுகை அப்படியே இருந்தது என்று அலீ(ரலி) அவர்களின் பேரர் அலீ இப்னு ஹுஸைன் கூறுகின்றார்கள்.

(நபி(ஸல்) அவர்களை இந்த அலீ சந்தித்ததில்லை)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُ فِي الصَّلَاةِ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ، فَلَمْ تَزَلْ تِلْكَ صَلَاتَهُ حَتَّى لَقِيَ اللَّهَ


muwatta-malik-196

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 44

தொழுகையை ஆரம்பிக்கும் முறை.

196. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தால் தன் தோல் புஜத்திற்கு நேராக தன் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து தன் தலையை உயர்த்தினால் மீண்டும் அவ்வாறே கைகளிரண்டையும் உயர்த்துவார்கள். மேலும் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வலகல் ஹம்து’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான். எங்கள் இறைவா! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள். ஸஜ்தா செய்யும் சமயம் (கைகளை உயர்த்தும்) அந்த செயலை செய்ய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ: إِذَا افْتَتَحَ الصَّلَاةَ، رَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ» وَكَانَ لَا يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ


muwatta-malik-195

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

195. பிலால்(ரலி) அவர்கள் இரவின் பாங்கு கூறுவார். (அப்போதிருந்து) இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்கள் பாங்கு கூறும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸாலிம் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.

மேலும், இப்னு உம்மி மக்தூம்(ரலி) கண் தொரியாதவராக இருந்தார். அவர் சுப்ஹு நேரம் வந்து விட்டது. சுப்ஹு நேரம் வந்து விட்டது என அவரிடம் கூறப்படும் வரை பாங்கு கூற மாட்டார் என்றும் ஸாலிம் கூறுகிறார்கள்.


«إِنَّ بِلَالًا يُنَادِي بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ»

، قَالَ: وَكَانَ  ابْنُ أُمِّ مَكْتُومٍ رَجُلًا أَعْمَى، لَا يُنَادِي حَتَّى يُقَالَ لَهُ: أَصْبَحْتَ. أَصْبَحْتَ


Next Page » « Previous Page