Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-194

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 43

பாங்கின் மூலம் ஸஹர் நேர அளவு

194. பிலால்(ரலி) அவர்கள் இரவில் பாங்கு கூறுவார். (அப்போதிருந்து) இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்கள் பாங்கும் கூறும் வரை நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அஹ்மதிலும் இடம் பெற்றுள்ளது).


«إِنَّ بِلَالًا يُنَادِي بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ»


muwatta-malik-193

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

193. ஒருவன் தனித்து திறந்த வெளிக்காட்டில் தொழுதால் அவனது வலப்புறத்திலும், இடது புறத்திலும் தலா ஒரு வானவர் தொழுவார்கள். அவர் பாங்கு கூறி, இகாமத் கூறி தொழுதால் அவருக்குப் பின்னால் மலையைப் போன்று வானவர்கள் தொழுவார்கள் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


«مَنْ صَلَّى بِأَرْضٍ فَلَاةٍ صَلَّى عَنْ يَمِينِهِ مَلَكٌ، وَعَنْ شِمَالِهِ مَلَكٌ، فَإِذَا أَذَّنَ وَأَقَامَ الصَّلَاةَ أَوْ أَقَامَ، صَلَّى وَرَاءَهُ مِنَ الْمَلَائِكَةِ أَمْثَالُ الْجِبَالِ»


muwatta-malik-191

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

191. நீ பயணம் செய்யும் போதும், பாங்கும் இகாமத்தும் கூற விரும்பினால் அப்படியே செய்து கொள். விரும்பினால் இகாமத் மட்டும் கூறு. பாங்கு கூறாதே என தனக்கு தன் தந்தை உர்வா கூறியதாக ஹிஷாம் அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: பயணத்தின் போதும் பாங்கு, இகாமத் கூற வேண்டுமென 24, 25 வது ஹதீஸ்கள் கூறுகின்றன).


«إِذَا كُنْتَ فِي سَفَرٍ، فَإِنْ شِئْتَ أَنْ تُؤَذِّنَ وَتُقِيمَ فَعَلْتَ، وَإِنْ شِئْتَ فَأَقِمْ وَلَا تُؤَذِّنْ»


muwatta-malik-190

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

190. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் பயணத்தின் போது சுப்ஹில் தவிர (வேறு தொழுகையில்) இகாமத்தை விட அதிகப்படுத்த மாட்டார்கள். சுப்ஹில் மட்டும் பாங்கு கூறுவார்கள். இகாமத்தும் கூறுவார்கள். (தொழுகைக்காக) எவரிடம் ஒன்று கூடுவார்களோ அந்த இமாமுக்கு மட்டும்தான் பாங்கு கூறுவது என்பது உண்டு என்று கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ لَا يَزِيدُ عَلَى الْإِقَامَةِ فِي السَّفَرِ إِلَّا فِي الصُّبْحِ فَإِنَّهُ كَانَ يُنَادِي فِيهَا، وَيُقِيمُ. وَكَانَ يَقُولُ: «إِنَّمَا الْأَذَانُ لِلْإِمَامِ الَّذِي يَجْتَمِعُ النَّاسُ إِلَيْهِ»


muwatta-malik-189

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 42

பயணத்தின் போது பாங்கு கூறுதல், ஒளுவின்றியும் பாங்கு கூறுதல்

189. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் குளிரும், காற்றும் நிறைந்த இரவில் தொழுகைக்கு பாங்கு கூறி விட்டு, அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இருப்பிடங்களில் தொழுங்கள் என்று கூறி விட்டு, நபி(ஸல்) அவர்கள் மழை காலத்தில் குளிர் நிறைந்த இரவில் பாங்கு கூறுபவருக்கு (பாங்கு கூற) கட்டளையிட்ட அவர்கள், அறிந்து கொள்ளுங்கள், (உங்கள்) இருப்பிடங்களில் தொழுங்கள் என்று கூறினார்கள் என்றும் அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறினார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَذَّنَ بِالصَّلَاةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ، فَقَالَ: أَلَا صَلُّوا فِي الرِّحَالِ، ثُمَّ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ، إِذَا كَانَتْ لَيْلَةٌ بَارِدَةٌ ذَاتُ مَطَرٍ يَقُولُ: «أَلَا صَلُّوا فِي الرِّحَالِ»


muwatta-malik-188

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

188. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள், பகீஹ் என்ற இடத்தில் இருந்த போது இகாமத் கூறுவதைக் கேட்டார்கள். பள்ளிக்கு நடையை தீவிரப்படுத்தினார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «سَمِعَ الْإِقَامَةَ وَهُوَ بِالْبَقِيعِ فَأَسْرَعَ الْمَشْيَ إِلَى الْمَسْجِدِ»


muwatta-malik-187

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

187. தொழுகைக்கான பாங்கைத் தவிர (வேறு எதையும்) மதீனா வாசிகளின் செயல் முறையில் (இரண்டு தடவை கூறுவதை) நான் அறியவில்லை. (அதாவது இகாமத்தின் வாசகங்கள் இரு தடவை இல்லை) என அபூஹுஹைலின் தந்தை மாலிக் கூறுகிறார்கள்.


«مَا أَعْرِفُ شَيْئًا مِمَّا أَدْرَكْتُ عَلَيْهِ النَّاسَ، إِلَّا النِّدَاءَ بِالصَّلَاةِ»


muwatta-malik-186

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

186. சுப்ஹுத் தொழுகைக்காக உமர்(ரலி) அவர்களை அழைத்திட முஅத்தின் (பாங்கு கூறுபவர்) வந்தார். அப்போது உமர்(ரலி) அவர்கள் தூங்குவதைக் கண்ட அவர், முஃமின்களின் தலைவரே! அஸ்ஸலாது கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூறினார்கள். உடனே, உமர்(ரலி) அவர்கள் அந்த வாசகத்தை சுப்ஹின் பாங்கில் சேர்க்கும்படி கட்டளையிட்டார்கள் என்று தனக்கு செய்தி கிடைத்தது என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ الْمُؤَذِّنَ جَاءَ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ يُؤْذِنُهُ لِصَلَاةِ الصُّبْحِ، فَوَجَدَهُ نَائِمًا. فَقَالَ: «الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ، فَأَمَرَهُ عُمَرُ أَنْ يَجْعَلَهَا فِي نِدَاءِ الصُّبْحِ»


muwatta-malik-178

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

178. இரண்டு நேரங்கள் உண்டு. அதுசமயம் வானத்தின் வாசல்கள் திறக்கப்படும். துஆ ஏற்கப்படாதவர்கள் (அந்நேரங்களில்) மிகவும் குறைவே! (அவைகள்) 1. தொழுகைக்காக பாங்கு சொல்ல தயாராகுவது. 2. அல்லாஹ்வின் பாதையில் அணிவகுத்து நிற்பது

என ஸஹ்ல் இப்னு ஸஃது அஸ்ஸாஇதீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


سَاعَتَانِ يُفْتَحُ لَهُمَا أَبْوَابُ السَّمَاءِ، وَقَلَّ دَاعٍ تُرَدُّ عَلَيْهِ دَعْوَتُهُ: حَضْرَةُ النِّدَاءِ لِلصَّلَاةِ، وَالصَّفُّ فِي سَبِيلِ اللَّهِ

وَسُئِلَ مَالِكٌ عَنِ النِّدَاءِ يَوْمَ الْجُمُعَةِ. هَلْ يَكُونُ قَبْلَ أَنْ يَحِلَّ الْوَقْتُ؟ فَقَالَ: «لَا يَكُونُ إِلَّا بَعْدَ أَنْ تَزُولَ الشَّمْسُ»


muwatta-malik-177

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

177. தொழுகைக்காக பாங்கு கூறப்பட்டால், பாங்கை கேட்க முடியாத (தூர) அளவுக்கு தன் பின் துவாரத்தில் சப்தமுடைய காற்றை வெளியாக்கிக் கொண்டே ஷைத்தான் பின்னோக்கி ஓடுவான். பாங்கு கூறி முடிக்கப்பட்டதும் முன்னோக்கி ஓடுவான். தொழுகைக்காக இகாமத் கூறப்பட்டால் பின்னோக்கி ஓடுவான். இகாமத் கூறி முடிக்கப்பட்டு விட்டால் முன்னோக்கி வந்து ஒருவனின் உள்ளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படி நினை, அப்படி நினை என்று கூறுவான். இந்த மனிதனும் தான் எத்தனையாவது ரக்அத் தொழுகிறோம் என அறிய முடியவில்லையே எனக் கூறும் வரை நினைவுபடுத்திக் கொண்டே இரு;பபான் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


إِذَا نُودِيَ لِلصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ، لَهُ ضُرَاطٌ، حَتَّى لَا يَسْمَعَ النِّدَاءَ، فَإِذَا قُضِيَ النِّدَاءُ، أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلَاةِ أَدْبَرَ حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ. حَتَّى يَخْطِرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ، يَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ. حَتَّى يَظَلَّ الرَّجُلُ إِنْ يَدْرِي كَمْ صَلَّى


Next Page » « Previous Page