Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-176

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

176. ஆட்டையும், ஓடையையும் நீர் விரும்புவதாக உன்னைக் காண்கின்றேன். உன் ஆடுகளுடனோ, உன் ஓடையிலே நீ இருந்து, தொழுகைக்காக நீ பாங்கு கூறினால், பாங்கில் உன் சப்தத்தை உயர்த்து. பாங்கு கூறுபவனின் சப்தத்தில் (இறுதி) ஒலியைக் கேட்கும் ஜின், மனிதன் இன்ன பிற பொருள்கள் அனைத்தும் அவனுக்காக மறுமையில் சாட்சி கூறுவர் என்றும், இதை நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்றும் அபூ ஸயீதில் குத்ரி(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

(இது புகாரி, நஸயீயில் இடம் பெற்றுள்ளது).


أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ لَهُ: إِنِّي أَرَاكَ تُحِبُّ الْغَنَمَ وَالْبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ، أَوْ بَادِيَتِكَ، فَأَذَّنْتَ بِالصَّلَاةِ، فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ «لَا يَسْمَعُ مَدَى صَوْتِ الْمُؤَذِّنِ جِنٌّ وَلَا إِنْسٌ، وَلَا شَيْءٌ، إِلَّا شَهِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ» قَالَ أَبُو سَعِيدٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


muwatta-malik-175

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

175. தொழுகைக்கு இகாமத் கூறப்பட்டால், நீங்கள் விரைந்தவர்களாக அதற்கு வராதீர்கள். நீங்கள் அமைதியை கடைபிடித்தவர்களாக அதற்கு வாருங்கள். நீங்கள் (இமாமிடம்) பெற்றுக் கொண்டதை நீங்கள் தொழுங்கள். உங்களுக்கு தவறி விட்டதை நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். தொழுகைக்கு உங்களில் ஒருவர் முயற்சிக்கும் காலமெல்லாம் அவர் தொழுகையில் உள்ளவர் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்.


«إِذَا ثُوِّبَ بِالصَّلَاةِ فَلَا تَأْتُوهَا وَأَنْتُمْ تَسْعَوْنَ، وَأْتُوهَا، وَعَلَيْكُمُ السَّكِينَةُ. فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا. فَإِنَّ أَحَدَكُمْ فِي صَلَاةٍ مَا كَانَ يَعْمِدُ إِلَى الصَّلَاةِ»


muwatta-malik-174

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

174. பாங்கிலும், முதல் வாரிசையிலும் உள்ளதை (அதன் சிறப்பை) மக்கள் விளங்கி, அதை குலுக்கல் முறையிலே தவிர அடைய முடியாது என்று அவர்கள் அறிந்தால் குலுக்கல் போட்டுக் கொள்வார்கள். பகல் நேரத் தொழுகையில் உள்ளதை (சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால், அதற்கும் அவர்கள் முந்தி இருப்பார்கள். இஷாவிலும் சுப்ஹுத் தொழுகையிலும் உள்ளதை (அதன் சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தாவது அந்த இரண்டுக்கும் அவர்கள் வருவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


«لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لَاسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا»


muwatta-malik-173

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

173. பாங்கை நீங்கள் கேட்டால், பாங்கு கூறுபவர் கூறுவது போல் நீங்களும் கூறுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ»


muwatta-malik-172

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அத்தியாயம்: 3

தொழுகை

பாடம் 41

தொழுகைக்குப் பாங்கு கூறுதல் பற்றி

172. இரண்டு முரசுகளை தயார் செய்து, தொழுகைக்காக மக்களை ஒன்று சேர்க்க அவ்விரண்டையும் அடிப்பது என நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள். அப்துல்லா இப்ன ஸைது(ரலி) அவர்களுக்கு கனவில் இரண்டு முரசுகளைக் காண்பிக்கப்பட்டது. இவ்விரண்டும் நபி(ஸல்) அவர்கள் விரும்பியது போல் இருக்கிறதே என தன்னுள் சொல்லிக் கொண்டார். அதுசமயம், தொழுகைக்காக நீங்கள் அழைப்புக் கொடுக்கவில்லையா? என அவருக்குச் சொல்லப்பட்டது. விழித்ததும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தான் (கனவில்) கண்டதை விளக்கினார். உடனே நபி(ஸல்) அவர்கள் பாங்கு கூறும்படி கட்டளையிட்டார்கள் என யஹ்யா இப்னு ஸயீத்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَرَادَ أَنْ يَتَّخِذَ خَشَبَتَيْنِ، يُضْرَبُ بِهِمَا لِيَجْتَمِعَ النَّاسُ لِلصَّلَاةِ، فَأُرِيَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ الْأَنْصَارِيُّ ثُمَّ مِنْ بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ خَشَبَتَيْنِ فِي النَّوْمِ. فَقَالَ: إِنَّ هَاتَيْنِ لَنَحْوٌ مِمَّا يُرِيدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقِيلَ: أَلَا تُؤَذِّنُونَ لِلصَّلَاةِ؟ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَيْقَظَ، فَذَكَرَ لَهُ ذَلِكَ، «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْأَذَانِ»


muwatta-malik-171

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

171. நபி(ஸல்) அவர்கள் தன் சமுதாயத்தின் மீது பயப்படவில்லையானால், ஒவ்வொரு ஒளுவின் போதும் பல்துலக்க அவர்களை கட்டளையிட்டிருப்பார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«لوْلَا أَنْ يَشُقَّ عَلَى أُمَّتِهِ لَأَمَرَهُمْ بِالسِّوَاكِ، مَعَ كُلِّ وُضُوءٍ»


muwatta-malik-170

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

170. எனது சமுதாயம் மீது கஷ்டமாகிப் போகும் என்று இல்லையானால் பல் துலக்கும்படி நான் அவர்களுக்கு கட்டளையிட்டிருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ»


muwatta-malik-169

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 40

பல்துலக்குதல் பற்றி..

169. முஸ்லிம்களே! நிச்சமயாக இந்நாளை (ஜும்ஆவை) அல்லாஹ் பெருநாளாக ஆக்கி உள்ளான். எனவே நீங்கள் குளியுங்கள். ஒருவாரிடம் நறுமணம் இருப்பின் அதைப் பூசிக் கொள்ள தவற வேண்டாம். மேலும் நீங்கள் பல் துலக்குவதைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று ஜும்ஆ வின் போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு சிபாக் அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ فِي جُمُعَةٍ مِنَ الْجُمَعِ: يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ «إِنَّ هَذَا يَوْمٌ جَعَلَهُ اللَّهُ عِيدًا فَاغْتَسِلُوا، وَمَنْ كَانَ عِنْدَهُ طِيبٌ فَلَا يَضُرُّهُ أَنْ يَمَسَّ مِنْهُ، وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ»


muwatta-malik-167

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

167. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததை நான் பார்த்தேன் என் அப்துல்லா இப்னு தீனார் அவர்கள் கூறுகின்றார்கள்.


رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «يَبُولُ قَائِمًا»


muwatta-malik-166

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 39

நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது பற்றி..

166. ஒரு கிராமவாசி பள்ளிக்கு வந்து சிறுநீர் கழித்திட தன் மறைவுறுப்பைத் திறந்தார். சப்தத்தை உயர்த்தி மக்கள் (ஸஹாபாக்கள்) கூச்சலிட்டனர். அவரை விட்டு விடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும், (மக்களும்) அவரை விட்டு விட்டனர். அவரும் சிறுநீர் கழித்தார். ஒரு வாளி தண்ணீர் கொண்டு வந்து, அந்த இடத்தில் ஊற்றும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே ஊற்றப்பட்டது என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


دَخَلَ أَعْرَابِيٌّ الْمَسْجِدَ، فَكَشَفَ عَنْ فَرْجِهِ لِيَبُولَ، فَصَاحَ النَّاسُ بِهِ، حَتَّى عَلَا الصَّوْتُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتْرُكُوهُ» فَتَرَكُوهُ، فَبَالَ. ثُمَّ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بِذَنُوبٍ مِنْ مَاءٍ، فَصُبَّ عَلَى ذَلِكَ الْمَكَانِ


Next Page » « Previous Page