Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-88

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 18

மூக்கில் இரத்தம் வழிதல்

88. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு மூக்கில் இரத்தம் வந்தால் (தொழுகையில் இருந்து) திரும்பி, ஒளுச் செய்வார்கள். பின்பு, (யாருடனும்) பேசாமல் திரும்பி வந்து, (விட்ட தொழுகையை) தொடர்வார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «إِذَا رَعَفَ انْصَرَفَ فَتَوَضَّأَ، ثُمَّ رَجَعَ فَبَنَى وَلَمْ يَتَكَلَّمْ»


muwatta-malik-87

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

87. காலுறைகள் மீது மஸஹ் செய்வது எப்படி? என்று கேட்ட போது, இப்னு ஷிஹாப் அவர்கள், தன் கைகளில் ஒன்றை காலுறையின் அடிப்பாகத்தில் நுழைத்து மற்றொன்றை மேற்புறத்திலும் வைத்து, தடவிக் காட்டினார்கள் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ كَيْفَ هُوَ؟ فَأَدْخَلَ ابْنُ شِهَابٍ «إِحْدَى يَدَيْهِ تَحْتَ الْخُفِّ، وَالْأُخْرَى فَوْقَهُ ثُمَّ أَمَرَّهُمَا»

قَالَ يَحْيَى: قَالَ مالِكٍ: «وَقَوْلُ ابْنِ شِهَابٍ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَ»


muwatta-malik-86

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 17

காலுறைகள் மீது மஸஹ் செய்யும் முறை

86. தன் தந்தை (உர்வா அவர்கள்) காலுறைகள் மீது மஸஹ் செய்யும் பொது அதன் மேற்பகுதியிலேயே மஸஹ் செய்வார்கள். உட்பகுதியில் மஸஹ் செய்ய மாட்டார்கள். (இதைவிட) அதிகப்படுத்தாமல் இருந்தமையும் தான் பார்த்ததாக ஹிஷாம் இப்னு உர்வா அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّهُ رَأَى أَبَاهُ «يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ».

قَالَ: وَكَانَ لَا يَزِيدُ إِذَا مَسَحَ عَلَى الْخُفَّيْنِ، عَلَى أَنْ يَمْسَحَ ظُهُورَهُمَا، وَلَا يَمْسَحُ بُطُونَهُمَا


muwatta-malik-82

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

82. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் ‘குபா” என்ற இடத்திற்கு வந்து சிறுநீர் கழித்தார்கள். பின்பு தண்ணீர் தரப்பட்டது. ஒளுச் செய்தார்கள். (அதாவது முகத்தையும், முழங்கை உட்பட கைகளையும் கழுவினார்கள். தன் தலைக்கு மஸஹ் செய்தார்கள். காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள். பின்பு பள்ளிக்கு வந்து அவர்கள் தொழ வைத்ததைப் பார்த்ததாக ஸயீத் இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு ருகைஹ் அல் அஷ்அரி அவர்கள் கூறுகின்றார்கள்.


رَأَيْتُ أَنَسَ بْنَ مالِكٍ أَتَى قُبَا فَبَالَ. ثُمَّ «أُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ، فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ. وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ. ثُمَّ جَاءَ الْمَسْجِدَ فَصَلَّى»


muwatta-malik-81

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

81. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் கடை வீதியில் சிறுநீர் கழித்தார்கள். பின்பு ஒளுச் செய்தார்கள். பின்பு முகத்தையும், கைகளையும் கழுவி விட்டு, தன் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்பு பள்ளியில் நுழைந்ததம் (அங்கிருந்த) ஜனாஸாவிற்கு தொழ வைக்க வரும்படி அழைக்கப்பட்டார்கள். உடனே தன் காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள். பின்பு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «بَالَ فِي السُّوقِ. ثُمَّ تَوَضَّأَ، فَغَسَلَ وَجْهَهُ، وَيَدَيْهِ، وَمَسَحَ رَأْسَهُ». ثُمَّ دُعِيَ لِجَنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا حِينَ دَخَلَ الْمَسْجِدَ، «فَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ صَلَّى عَلَيْهَا»


muwatta-malik-80

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

80. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூபாவின் தலைவரான ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் வந்த போது, அவர்கள் தன் காலுறைகள் மீது மஸஹ் செய்வதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் பார்த்து விட்டு, அவர்களிடம் இதை ஆட்சேபித்தார்கள். ‘உன் தந்தை (உமர்) அவர்களிடம் சென்றால் அவரிடம் கேள்” என்று ஸஃது(ரலி) அவர்கள் கூறினார்கள். ஸஃது(ரலி) அவர்கள் (கூபாவிலிருந்து மதீனாவிற்கு) வரும் வரை இ விஷயமாக தன் தந்தை உமர்(ரலி) அவர்களிடம் கேட்க, அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் மறந்து விட்டார்கள். உன் தந்தையிடம் கேட்டீரா? என்று ஸஃது(ரலி) அவர்கள் கேட்கவும், இல்லை என்று கூறினார்கள்.

அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தன் தந்தையிடம் (இது விஷயமாக) கேட்க, ‘உன் கால்களை சுத்தமான நிலையில் காலுறைகளுக்குள் நுழைத்தால் அவ்விரண்டின் மீது மஸஹ் செய்து கொள்” என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். மலம் ஜலம் கழிக்கப் போய் வந்தாலுமா? என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கேட்க, மலம் ஜலம் கழிக்கப் போய் வந்தாலும் தான் என பதில் கூறினார்கள். இதை நாபிஉ, அப்துல்லா இப்னு தீனார் இருவரும் கூறுகின்றார்கள்.

(இச்சம்பவம் வேறு வார்த்தைகளால் புகாரி, நஸயீ யில் உள்ளது).


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَدِمَ الْكُوفَةَ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، وَهُوَ أَمِيرُهَا، فَرَآهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ. فَأَنْكَرَ ذَلِكَ عَلَيْهِ، فَقَالَ لَهُ سَعْدٌ: سَلْ أَبَاكَ إِذَا قَدِمْتَ عَلَيْهِ. فَقَدِمَ عَبْدُ اللَّهِ، فَنَسِيَ أَنْ يَسْأَلَ عُمَرَ عَنْ ذَلِكَ، حَتَّى قَدِمَ سَعْدٌ. فَقَالَ: أَسَأَلْتَ أَبَاكَ؟ فَقَالَ: لَا. فَسَأَلَهُ عَبْدُ اللَّهِ، فَقَالَ عُمَرُ: «إِذَا أَدْخَلْتَ رِجْلَيْكَ فِي الْخُفَّيْنِ، وَهُمَا طَاهِرَتَانِ، فَامْسَحْ عَلَيْهِمَا»، قَالَ عَبْدُ اللَّهِ: وَإِنْ جَاءَ أَحَدُنَا مِنَ الْغَائِطِ؟ فَقَالَ عُمَرُ: «نَعَمْ. وَإِنْ جَاءَ أَحَدُكُمْ مِنَ الْغَائِطِ»


muwatta-malik-79

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 16

காலுறைகள் மீது மஸஹ் செய்தல்

79. தபூக் போர் சமயம் நபி (ஸல்) அவர்கள் தனது (மல ஜலம் கழிக்கும்) தேவைக்காக சென்றார்கள். நான் அவர்களுடன் தண்ணீர் எடுத்துச் சென்றேன். நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு தண்ணீர் ஊற்றினேன். தன் முகத்தைக் கழுவினார்கள். பின்பு (கைகளை கழுவுவதற்காக) குளிர் ஆடையின் கைப்பகுதியிலிருந்து கைகளை வெளிப்படுத்த முயன்றார்கள். குளிர் ஆடை இறுக்கமாக இருந்ததால் இயலவில்லை. உடனே குளிர் ஆடையின் கீழ்ப்பகுதியில் இருந்து இரு கைகளையும் வெளியாக்கிக் கழுவினார்கள். தன் தலைக்கு மஸஹ் செய்தார்கள். காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் மக்களுக்கு இகாமத் செய்து, ஒரு ரக்அத்தை முடித்து விட்டார். அவர்களுக்கு மீதம் இருந்த ஒரு ரக்அத்தை நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள். (நபி(ஸல்) அவர்களை முந்தி விட்டதன் காரணமாக மக்கள் அதிர்ச்சியில் இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், ”நீங்கள் நல்லது செய்தீர்கள்”” என்று கூறினார்கள் என முகீரா இப்னு ஷீஹ்பா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் உள்ளது)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ لِحَاجَتِهِ فِي غَزْوَةِ تَبُوكَ. قَالَ الْمُغِيرَةُ: فَذَهَبْتُ مَعَهُ بِمَاءٍ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَكَبْتُ عَلَيْهِ الْمَاءَ، فَغَسَلَ وَجْهَهُ. ثُمَّ ذَهَبَ يُخْرِجُ يَدَيْهِ مِنْ كُمَّيْ جُبَّتِهِ، فَلَمْ يَسْتَطِعْ مِنْ ضِيقِ كُمَّيِ الْجُبَّةِ، فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ. فَغَسَلَ يَدَيْهِ، وَمَسَحَ بِرَأْسِهِ، وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ. فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ يَؤُمُّهُمْ، وَقَدْ صَلَّى بِهِمْ رَكْعَةً، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّكْعَةَ، الَّتِي بَقِيَتْ عَلَيْهِمْ، فَفَزِعَ النَّاسُ. فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَحْسَنْتُمْ»


muwatta-malik-76

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

76. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களின் மனைவியும், அபூஉபைத்(ரலி) அவர்களின் மகளுமான ஸபிய்யா(ரலி) அவர்கள் தனது முக்காட்டைக் கழற்றி, தன் தலைக்கு தண்ணீரால் மஸஹ் செய்வதைப் பார்த்ததாக நாபிஉ அவர்கள் கூறுகின்றார்கள். நாபிஉ அந்நாளில் சிறுவராவார்.


أَنَّهُ رَأَى صَفِيَّةَ بِنْتَ أَبِي عُبَيْدٍ، امْرَأَةَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، «تَنْزِعُ خِمَارَهَا، وَتَمْسَحُ عَلَى رَأْسِهَا بِالْمَاءِ»

– وَنَافِعٌ يَوْمَئِذٍ صَغِيرٌ –


muwatta-malik-75

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

75. உர்வா இப்னு ஸுபைர் அவர்கள் தன் தலைப்பாகையைக் கழற்றி தன் தலைக்கு தண்ணீரால் மஸஹ் செய்வார்கள் என ஹிஷாம் இப்னு உர்வா கூறுகின்றார்கள்.


أَنَّ أَبَاهُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ كَانَ «يَنْزِعُ الْعِمَامَةَ، وَيَمْسَحُ رَأْسَهُ بِالْمَاءِ»


muwatta-malik-74

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

74. தலைப்பாகை மீது மஸஹ் செய்வது பற்றி கேட்கப்பட்ட போது, ”கூடாது””, ”தண்ணீரால் முடியை மஸஹ் செய்ய வேண்டும்”” என ஜாபிர் இப்னு அப்துல்லா(ரலி) பதில் கூறினார்கள் என தனக்கு தகவல் கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيَّ، سُئِلَ عَنِ الْمَسْحِ عَلَى الْعِمَامَةِ؟ فَقَالَ: «لَا. حَتَّى يُمْسَحَ الشَّعْرُ بِالْمَاءِ»


Next Page » « Previous Page