4132. கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் ‘மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக!’ என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) ‘உங்களை நான் இவ்வாறு (ஒன்றுபட்டவர்களாக) பார்த்த பிறகு, எனக்கு பின் நீங்கள் ஒருவர் கழுத்தை, ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடும் நிலை ஏற்படக் கூடாது என்று கூறினார்கள்-
என்று ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாக எனக்குத் தகவல் கிடைத்தது.
قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَنْصِتِ النَّاسَ» ثُمَّ قَالَ: «لَا أُلْفِيَنَّكُمْ بَعْدَ مَا أَرَى تَرْجِعُونَ بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»
சமீப விமர்சனங்கள்